கொரோனா விகிதம்: தேசிய சராசரியை விட 4 மாநிலங்களில் அதிகம்

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தேசிய வளர்ச்சி விகிதத்தை விட வேகமாக வளர்ந்து வரும் முதல் பத்து மாநிலங்களில் இந்த 4 மாநிலங்கள் மட்டுமே உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தேசிய வளர்ச்சி விகிதத்தை விட வேகமாக வளர்ந்து வரும் முதல் பத்து மாநிலங்களில் இந்த 4 மாநிலங்கள் மட்டுமே உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus news, tamilnadu news live updates

coronavirus, coronavirus news, tamilnadu news live updates

Amitabh Sinha

Advertisment

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தேசிய வளர்ச்சி விகிதத்தை விட வேகமாக வளர்ந்து வரும் முதல் பத்து மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் இந்த 4 மாநிலங்கள் மட்டுமே உள்ளன. கடந்த சில நாட்களாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை முக்கியமாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 தென் மாநிலங்களில் அதிகரித்து வருகின்றன. இந்த 4 மாநிலங்களும் இப்போது நாட்டில் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை கொண்ட முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.

மகாராஷ்டிரா ஒவ்வொரு நாளும் அதிகபட்ச எண்ணிக்கையிலான புதிய தொற்று வழக்குகளை தொடர்ந்து அளித்து வருகின்ற நிலையில், அதன் வளர்ச்சி விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் 3.40 சதவீதம் என்பது ஏழு நாள் தினசரி கூட்டு வளர்ச்சி விகிதமான தேசிய வளர்ச்சி விகிதம் 3.54 சதவீதத்தை விடக் குறைவாக உள்ளது.

publive-image

Advertisment
Advertisements

மற்றொருபுறம், 4 தென் மாநிலங்களும் அதிக எண்ணிக்கையில் பங்களிப்பு செய்கின்றன. மேலும், அதிக வளர்ச்சி விகிதத்தையும் கொண்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் 28,000க்கும் மேற்பட்ட புதிய தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்தை தாண்டியது. வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை தலா 8,000க்கும் மேற்பட்ட தொற்று எண்ணிக்கையைச் சேர்த்துள்ளன. ஆந்திரா கடந்த 2 நாட்களில் மட்டுமே இந்த பந்தயத்தில் இணைந்துள்ளது. கடந்த 1 வாரத்தில் சுமார் 5,500 தொற்று வழக்குகளை கண்டறிந்துள்ளது.

இந்த தெற்கு மாநிலங்களில் விதிவிலக்கான் ஒரே மாநிலம் கேரளா. கடந்த ஒரு வாரத்தில் இம்மாநிலத்தில் வெறும் 1,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அம்மாநிலத்தின் நிலைப்படி கேரளா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கேரளா உண்மையில், 3.6 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் அது தற்போது நாடு முழுவதையும் விட வேகமாக வளர்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் இப்போது 5,000க்கும் குறைவான வழக்குகள் உள்ளன. ஆனால், இறப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. வெறும் 24 இறப்புகளுடன், நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களைக் கொண்ட ஒரு மாநிலமாக உள்ளது.

publive-imageமார்ச் மாதம் தொற்று பரவல் தொடங்கியதில் முதல் தடவையாக தென் மாநிலங்கள் தேசிய எண்ணிக்கைகளை இந்த வழியில் செலுத்துகின்றன. தெற்கில் உள்ள தனிப்பட்ட மாநிலங்கள் இதற்கு முன்னர் முக்கிய இயக்கிகளில் ஒன்றாக இருந்தன. ஆரம்பத்தில், சிறிது காலம் கேரளாவும் பின்னர் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இப்போது 2 மாதங்களுக்கு மேலாக உள்ளன. ஆனால், இப்போது, ​​அனைத்து தென் மாநிலங்களிலும் ஒரு எழுச்சி உள்ளது.

ஆனால், இதற்கு நாட்டின் பிற பகுதிகளில் குறைந்து வருகின்றன என்று அர்த்தமல்ல. உத்தரபிரதேசம் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் பங்களிப்பு செய்து வருகிறது, அதே போல் மேற்கு வங்கமும் உள்ளது. ஜூன் மூன்றாம் வாரத்தில் ஏற்பட்ட வேகத்திற்குப் பிறகு, டெல்லி கணிசமாகக் குறைந்துவிட்டது. இருப்பினும், முழுமையான வகையில், ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்ட தொற்று வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது. இருப்பினும், அதன் வளர்ச்சி விகிதம் மூன்று சதவீதத்திற்கு குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், டெல்லி 17,000க்கும் மேற்பட்ட புதிய தொற்று வழக்குகளைச் சேர்த்துள்ளது.

ஒப்பீட்டளவில் சிறிய மாநிலங்களில் கூட இப்போது குறிப்பிடத்தக்க தொற்று எண்ணிக்கை சுமை உள்ளன. சத்தீஸ்கர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் இப்போது 3,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் உள்ளன. அதே நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலமும் இங்கு வருகிறது. கோவா, திரிபுரா, மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியுள்ளது. இதில் கடைசி 2 மாநிலங்களும் வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கையைத் தொட்டன.

புதுச்சேரி 824 உடன் தொற்று வழக்குகள் என்ணிக்கையில் மிகவும் பின் தங்கியிருக்கவில்லை. உண்மையில், மேகாலயா மாநிலம்தான் இப்போது 100க்கும் குறைவான நோய்த்தொற்றுகளைக் கொண்ட ஒரே மாநிலமாக உள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் சிக்கிம் மாநிலம்கூட வெள்ளிக்கிழமை இந்த அளவைத் தாண்டியுள்ளன.

நாட்டில் 22,700க்கும் மேற்பட்ட புதிய தொற்று வழக்குகள் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன. இதன் மூலம் நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை எட்டியுள்ளது. இவற்றில் சுமார் 2.35 லட்சம் மட்டுமே செயலில் உள்ள தொற்று வழக்குகள். அதாவது இந்த மக்கள் இன்னும் நோயிலிருந்து மீள வேண்டும். இதுவரை 3.94 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய தொற்று எண்ணிக்கை சுமை கொண்ட நாடாக மாற சனிக்கிழமை இல்லாவிட்டாலும் வார இறுதியில் ரஷ்யாவை முந்திக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவை விட ரஷ்யாவில் சுமார் 18,000 வழக்குகள் அதிகம் உள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: