/tamil-ie/media/media_files/uploads/2020/11/image-14.jpg)
டெல்லியின் சமீபத்திய கொரோனா பாதிப்பின் உச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,745 பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், முக்கிய மைல்கல்லாக நாட்டில் நோய் பாதிப்பு வளர்ச்சி விகிதத்தில் டெல்லி கேரளாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாக போன்ற மாநிலங்களை விட டெல்லி அதிகப்படியாக கொவிட்- 19 பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் டெல்லியில் 46,000 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது. கேரளாவில், டெல்லியை விட நூற்றுக்கணக்கான பாதிப்புகள் குறைவாக காணப்பட்டது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பின் கோர முகத்தைக் கண்ட மகாராஷ்டிராவில் சுமார் 36,000 பாதிப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது.
டெல்லியின் தினசரி பாதிப்பு வளர்ச்சி எண்ணிக்கை 1.6 விழுக்காடாக உள்ளது. இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், கொவிட் - 19 நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு டெல்லியில் காணப்படுகிறது. டெல்லியில், 42,000 பேர் தற்போது நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசியளவில், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை டெல்லியை விட அதிகமாக உள்ளது.
இருப்பினும், இதைவிட கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தேசிய தலைநகரில் இறப்பு எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது. சில நாட்களாக, மகாராஷ்டிரா மாநிலத்தைத் தவிர்த்து, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும் விட டெல்லியில் அதிகப்படியான இறப்புகள் பதிவாகி வருகின்றன. நேற்று மட்டும் 77 உயிரிழப்புகள் பதிவாகியன, இதன் மூலம் அங்கு கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,000 -ஐ நெருங்கிறது. மேலும், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற ஐந்து மாநிலங்களில் டெல்லியை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளன.
சத்தீஸ்கர் நிலவரம்: மொத்த நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் அதிகப் படியான இறப்பு விகிதத்தை பதிவு செய்யும் மாநிலமாக சத்தீஸ்கர் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அங்கு, தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 40 முதல் 60 ஆக உள்ளது. அங்கு, கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,500 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது. கடந்த ஒரு மாத காலமாக, தினசரி பாதிப்பு வளர்ச்சி விகிதமும் அங்கு அதிகரித்து வருகிறது.
மறுபுறம், ஒடிசா மாநிலத்தில், இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சில நாட்களுக்கு முன்பு 4 லட்சத்தை தாண்டியது.
அதே நேரத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படுகிறது.
தொடர்ந்து பத்தாம் நாளாக, அங்கு புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 6,000 -க்கும் குறைவாக உள்ளது. ஜூன் முதல் செபடம்பர் மாதம் வரை நாக்பூரில் பதிவு செய்யப்படாத பாதிப்புகள் மீண்டும் சேர்க்கப்பட்டதால், இரண்டு தினங்களுக்கு முன்பாக 6,800 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. ஒரு கட்டத்தில், செப்டம்பரில், மகாராஷ்டிரா மாநிலத்தின் தினசரி பாதிப்பின் எண்ணிக்கை 22,000 க்கும் அதிகமாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பாதிப்புகள் தொடர்ச்சியாக குறைந்து வருவதால், மகாராஸ்டிரா மாநிலத்தில் ஜூலை இரண்டாவது வாரத்த்திற்குப் பிறகு தற்போது தான் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக காணப்படுகிறது. செப்டம்பர் நடுப்பகுதியில் மகாராஷ்டிராவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் அதிகமான இருந்தன.
தொடர்ந்து இரண்டாம் நாளாக, இந்தியாவில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,903 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48,405 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நாட்டின் தற்போதைய தொற்றுகளின் எண்ணிக்கை 5,09,673 ஆகும். மொத்த பாதிப்புகளில் இது 5.95 சதவீதம் மட்டுமே ஆகும்.
இது வரை 79,17,373 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைதல் விகிதம் 92.56 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சையில் உள்ளோருக்கிடையேயான இடைவெளி 74,07,700 ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.