ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று வளர்ச்சி ஏறக்குறைய 2 மாத மிக வேகமான வளர்ச்சிக்குப் பின்னர், இறுதியாக ஒரு நிலையான பாதையில் செல்கிறது. மே மாத இறுதியில் இருந்து முதல் முறையாக, அம்மாநிலத்தில் கொரோனா தொற்று வளர்ச்சி விகிதம் ஒரு நாளைக்கு 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, ஆந்திர அரசு ஒவ்வொரு நாளும் 8,000 முதல் 10,000 புதிய தொற்றுகளை கண்டறிந்து எண்ணிக்கையில் சேர்த்து வருகிறது. ஆனால் அது மிக அதிக வளர்ச்சி விகிதத்தைக் காட்டவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஆந்திர மாநிலம் கிட்டத்தட்ட 10 சதவீத வளர்ச்சியைத் தொட்டது.
தொற்று எண்ணிக்கையில் தொடர்ச்சியான உயர்வு என்பது அம்மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 15,000 தொற்றுகள் உறுதிபடுத்தப்பட்டு உள்ளன. மோசமாக பாதிக்கப்பட்ட கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இப்போது கிட்டத்தட்ட 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தொற்று எண்ணிக்கை ஆகும். உண்மையில், கடற்கரை நகரமான காக்கினாடா மற்றும் ராஜமுந்திரி அம்மாநிலத்தின் முக்கிய நகர மையங்களாக உள்ளன. இந்த சகோதரி நகரங்களுக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கும் மட்டும்தான் இப்போது போட்டி. கர்னூல் மாவட்டத்தில் 39,000 தொற்றுகள், அனந்த்பூர் 35,000 தொற்றுகள், குண்டூர் 30,000 தொற்றுகள் என அனைத்து மாவட்டங்களும் அவற்றின் அளவு மற்றும் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது மிக அதிக தொற்று எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளன.
புதிய தொற்றில் குறிப்பிடத்தக்க மந்தநிலை இருந்தபோதிலும், ஆந்திரா இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் தமிழகத்தை முந்திக்கொண்டு 2வது மிக அதிக தொற்று கொண்ட கொண்ட மாநிலமாக திகழும். ஆந்திராவில் தற்போதைய நிலவரப்படி இதுவரை மொத்தம் 3.53 லட்சம் தொற்றுகளும் தமிழகத்தில் 3.79 லட்சம் தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இதனிடையே, டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 1,450 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது ஒரு மாதத்திற்கும் மேல் பதிவான அதிக தொற்று ஆகும். கடந்த சில நாட்களில், தலைநகரில் தொற்று அதிகரிப்பு பெரிதாக இல்லை என்றாலும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. மேலும், இந்த மாத தொடக்கத்தில் தொற்று 1,000க்கும் கீழே குறைந்தது. . ஆனால் இந்த அளவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில், நகரத்தில் 1,200க்கும் மேற்பட்ட தொற்றுகள் தொடர்ந்து பதிவாகியுள்ளன. இது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இதன் விளைவாக, இந்த மாத தொடக்கத்தில் 10,000 க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்த சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை டெல்லியில் இப்போது 12,000க்கு அருகே உள்ளது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர், கர்நாடகாவில் பல்லாரி, ஒடிசாவில் கஞ்சம், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானா ஆகியவை மிக அதிக தொற்று எண்ணிக்கை கொண்ட மற்ற அடுக்கு -2 மற்றும் அடுக்கு -3 நகரங்களாக உள்ளன.
1.22 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பீகார், மந்தநிலையின் அறிகுறிகளையும் காட்டத் தொடங்குகிறது. இந்த மாதத்தின் முதல் பாதியில் தொற்று வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதத்திற்கும் மேலாக இருந்த நிலையில், வளர்ச்சி விகிதம் ஒரு நாளைக்கு 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 61,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டன. இது கடந்த வாரம் முழுவதும் பெரும்பாலும் கண்டறியபட்ட 70,000 என்ற அளவில் இருந்து குறைந்தது. மீண்டும், இது பரிசோதனை சோதனை எண்ணிக்கையின் வீழ்ச்சி காரணமாக இருக்கலாம், இது வார இறுதி நாட்களில் கூர்மையாக வீழ்ச்சியடையு. இந்தியா வெள்ளிக்கிழமை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்து இதுவரை இல்லாத அளவுக்கு பரிசோதனை எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால், இந்த பரிசோதனை எண்ணிக்கை சனிக்கிழமையன்று வெறும் 8 லட்சமாகவும், ஞாயிற்றுக்கிழமை 6 லட்சமாகவும் சரிந்தது.
23.38 லட்சத்துக்கும் அதிகமானோர் அல்லது இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 75.27 சதவீதம் பேர் ஏற்கனவே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர். நாட்டில் ஞாயிற்றுக்கிழமை 836 இறப்புகள் பதிவான நிலையில், இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை இப்போது 57,500ஐ தாண்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.