டெல்லியில் ஒவ்வொரு நாளும் 1,000 முதல் 1,200 வரை புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளை கண்டறிவதை உறுதிப்படுத்துவதுடன், அம்மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான சரிவைக் கண்டுள்ளது.
டெல்லியில் ஒவ்வொரு நாளும் சுமார் 75 முதல் 80 வரை கொரோனா மரணங்கள் பதிவாகின்றன. இப்போது இந்த எண்ணிகை 10 முதல் 15 வரை குறைந்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒருமுறை ஒற்றை இலகக்த்திற்கும் வந்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைந்து வரும் மாநிலங்களில் டெல்லி மட்டுமே உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-16T163126.106-300x167.jpg)
இருப்பினும், உண்மையான வார்த்தையில் டெல்லியில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக உள்ளது. டெல்லியில் சனிக்கிழமை வரை 4,188 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதனால், நாட்டிலேயே அதிக கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இதை ஓரிரு நாட்களில் கர்நாடகா முறியடிக்க வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் இதுவரை 3,839 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், கர்நாடகா ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நாட்டில் மிக அதிகமான கொரோனா இறப்பு விகிதங்களில் டெல்லியும் உள்ளது. தலைநகரில் சனிக்கிழமை நிலவரப்படி, இறப்பு விகிதம் 2.76 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் தேசிய இறப்பு விகிதம் 1.93 சதவீதமாக குறைந்துள்ளது. அதிக இறப்பு விகிதம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ளது. இரு மாநிலங்களிலும் 3.5 சதவீதம் இறப்பு விகிதம் பதிவாகி உள்ளது. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடனான காணொலி காட்சி கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் இறப்பு விகிதத்தை சுமார் 1 சதவீதமாகக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-16T163152.093-300x167.jpg)
சனிக்கிழமையன்று, பீகார் மாநிலம் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்றுநோய்களைக் கொண்ட 8வது மாநிலமாக மாறியது. அம்மாநிலம் சனிக்கிழமை 3,536 புதிய தொற்றுகளைக் கண்டறிந்தது. அம்மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1.01 லட்சமாக உள்ளது. தொற்று அதிகமாக உள்ள முக்கிய மாநிலங்களில் தொற்று மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக உள்ளது. ஆந்திராவை விடவும், பீகார் சில காலமாக தொற்று 8 சதவீதத்திற்கும் மேலாக வளர்ந்த பின்னர் சற்று குறைந்து வருகிறது. தேசிய தொற்று வளர்ச்சி விகிதமான 2.66 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, பீகாரின் தற்போதைய தொற்று வளர்ச்சி விகிதம் ஒரு நாளைக்கு 4.32 சதவீதமாக உள்ளது. ஆந்திராவின் வளர்ச்சி விகிதம் இப்போது 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆந்திராவின் தொற்று வளர்ச்சி விகிதம் இப்போது 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-16T163225.341-300x167.jpg)
ஆனால், பீகாரில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 515 பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது 0.51 சதவீத இறப்பு விகிதம். பீகரின் கொரோனா இறப்பு விகிதம் முக்கிய மாநிலங்களில் மிகக் குறைவான இறப்பு விகிதம் ஆகும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-16T163517.402-300x247.jpg)
நாடு முழுவதும் சனிக்கிழமை சுமார் 64,500 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 25.89 லட்சமாக உள்ளது. இதில் 18.62 லட்சம் அதாவது வெறும் 72 சதவீதம் மட்டுமே நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 50,000 ஐத் தொடுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"