கொரோனா வைரஸ் பாதிப்பு - மும்பையை விஞ்சிய தலைநகரம்

India Coronavirus Cases: புதன்கிழமை மும்பையை விட டெல்லி அதிக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை பதிவு செய்துள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக முதன் முதலாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் 1,513 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இது தான் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணைக்கையாகும். மும்பை அதிகபட்சமாக 1,276 பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளது.


டெல்லி கடந்த ஒரு வாரத்தில் அதன் எண்ணிக்கையில் ஒரு பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது, ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்கிறது. டெல்லியின் பாதிப்பு எண்ணிக்கை, நாட்டின் அதிகபட்ச வைரஸ் பாதிப்புகளை கொண்டிருக்கும் முதல் ஐந்து மாநிலங்களில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. டெல்லியில் இப்போது 23,645 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் உள்ளன. அவற்றில் 9,500 க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே குணமடைந்துவிட்டனர்.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு வரை, டெல்லியில் ஒவ்வொரு நாளும் 500 முதல் 800 வரை பாதிப்புகள் பதிவாகின. அதே நேரத்தில் மும்பை கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக 1,200 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. மும்பையில் ஒரே நாளில் 1,750 பாதிப்புகள் கூட பதிவாகியுள்ளன. இருப்பினும், மும்பையில் கடந்த நான்கு நாட்களில், நிசர்கா சூறாவளி காரணமாக தங்களை சோதித்துப் பார்க்க ஒப்பீட்டளவில் குறைவான மக்களே வெளியே வந்துள்ளனர்.

நாடு தழுவிய பொது முடக்கத்தால் தவிர்க்கப்பட்ட மரணங்கள் எத்தனை?

தேசிய தலைநகரில் வேகமாக அதிகரித்து வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சாலை, ரயில் அல்லது விமானம் வழி என டெல்லிக்குள் யார் எப்படி வந்தாலும், அவர்கள் குறைந்தது ஒரு வாரமாவது வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள கட்டாயமாக்கியுள்ளது. இப்போது வரை, டெல்லிக்குச் செல்லும் பயணிகள் தங்கள் உடல்நல அளவுருக்களை ‘சுய கண்காணிப்பு’ செய்வார்கள் என்றும், கோவிட் -19 நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஹரியானா போல், எல்லைகளை திறந்து ஒரு நாள் கழித்து மீண்டும் சீலிட டெல்லி முடிவு செய்துள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றுகளால் ஹரியானா தனது எல்லைகளை அடைத்தது. அண்டை மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் சோனேபாட் ஆகிய இடங்களில் பாதிப்புகள் மீண்டும் ஏற்படுகின்றன.

ஹரியானா இப்போது வேகமாக வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்யும் மாநிலங்களில் ஒன்றாகும், அதன் பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது, மே 27 அன்று 1,381-ஆக இருந்த பாதிப்பு புதன்கிழமை 2,954 வரை அதிகரித்தது. முக்கிய நெடுஞ்சாலைகளை மட்டுமல்ல, டெல்லியை இணைக்கும் கிராம சாலை உட்பட அனைத்தையும் ஒரு வாரத்திற்கும் மேலாக மாநில அரசு அடைத்துள்ளது. புதன்கிழமை, ஹரியானா சில வழித்தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்தது, ஆனால் டெல்லி வழியாக எதுவும் இல்லை.

கோவிட்-19க்கு ஹோமியோ மருந்து குறித்து ஒரு விவாதம்

நாடு முழுவதும் புதன்கிழமை 9,300 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மொத்த வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 2.17 லட்சத்துக்கு மேல் வந்துள்ளது, இதில் கிட்டத்தட்ட 1.05 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இரண்டு வாரங்கள் ஒப்பீட்டளவில் மேற்கு வங்கத்தில் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. புதன்கிழமை, அம்மாநிலத்தில் 340 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த எண்ணிக்கை 6,508 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில், அம்மாநிலம் 2,300 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இது அதன் மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

வேகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட மற்றொரு மாநிலமான பீகார், புதன்கிழமை 230 புதிய பாதிப்புகளை சேர்த்தது, கடந்த பத்து நாட்களில் கணிசமாகக் குறைந்துள்ள ஒடிசா 90 புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close