/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-12T220145.215.jpg)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 70 சதவிகிதத்தை தாண்டினாலும், தினசரி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையை புதியதாக தொற்று கண்டறியப்படும் எண்ணிக்கை கட்டுப்படுத்தி வருகிறது. அதாவது, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமான நபர்கள் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 23.29 லட்சம் பேரில் 70.38 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சுமார் 27.64 சதவீத மக்கள் இன்னும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 1.98 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் சீராக அதிகரிப்பதில் சிறப்பு எதுவும் இல்லை. இந்த தொற்றுநோய் முடிவுக்கு வரும் நேரத்தில், 99 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பார்கள். அதே நேரத்தில், இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதனிடையே, புதிய தொற்றுகள் மற்றும் கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் தினசரி எண்ணிக்கை அந்த கட்டத்தை எவ்வளவு விரைவில் அடையக்கூடும் என்பதற்கான அறிகுறியை அளிக்கும்.
தினசரி கொரோனா வைரஸில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை புதியதாக தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கினால், இந்த போக்கு குறைந்தது 2 வாரங்களாவது தொடர்ந்தால், நோய் பரவுவதின் வீழ்ச்சி அருகில் உள்ளதற்கு அறிகுறியாக இருக்கும். ஏனென்றால், இதுபோன்ற நிலைமை தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்க வழிவகுக்கும். இந்த நிலை தற்போது டெல்லியில் மட்டுமே அடையப்பட்டுள்ளது. அங்கே கூட வீழ்ச்சி தொடர்ந்து நடக்கவில்லை. ஜூலை தொடக்கத்திலிருந்து பெரும்பாலான சந்தர்ப்பங்களில், டெல்லியில் தினசரி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை புதிய தொற்றுகளைவிட அதிகமாக உள்ளது. பல நாட்களாக இந்த போக்கு உள்ளது. குறிப்பாக இந்த மாதம் இந்தப் போக்கு தலைகீழாக மாறியது.
இருப்பினும், டெல்லி இப்போது நாட்டில் மிக அதிக அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதத்தை கிட்டத்தட்ட 90 சதவீதமாகக் கொண்டுள்ளது.
தேசிய அளவில், ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை புதிய தொற்றுகளைவிட அதிகமாக இருந்ததில்லை. இருப்பினும் இந்த இரண்டு எண்களுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறுகியதாக இருந்த காலங்கள் இருந்தன. உதாரணமாக, கடந்த 3 நாட்களில், புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தினசரி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையைவிட 5,000 முதல் 7,000 வரை அதிகமாக உள்ளன. இது சில நாட்களுக்கு முன்பு காணப்பட்ட இடைவெளியை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையில் ஏராளமான சீரற்ற தன்மை உள்ளது. எதிர்பார்த்தபடி, தினசரி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை வழக்கமாக புதிய வழக்குகளை விட 14 நாட்களுக்குள் பின்தங்கியுள்ளன என்பதைத் தவிர, நிலையான போக்கு காணப்படவில்லை.
மேலும், அதிக அளவிலான கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் சதவீதத்தால் புதிய அலை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
திங்கள்கிழமை தொற்று எண்ணிக்கை ஒரு வீழ்ச்சிக்குப் பிறகு, வார இறுதியில் நடத்தப்பட்ட சோதனைகள் குறைவாக இருந்ததால், செவ்வாய்க்கிழமை நாட்டில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 60,000 எண்ணிக்கையை மீண்டும் தாண்டியது. கடந்த வாரம் முழுவதும் அந்த எண்ணிக்கை அந்த அளவுக்கு மேல் இருந்தது.
மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய நாட்டின் ஏழாவது மாநிலமாக மேற்கு வங்கம் இடம் பிடித்துள்ளது. செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட 3,000 புதிய தொற்றுகளை மேற்கு வங்க அரசு கண்டறிந்தது. இதன் மூலம், இது இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 1.01 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 73,000 க்கும் அதிகமானோர் அல்லது 72 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அதே நேரத்தில் 2,100 பேர் இறந்துள்ளனர்.
பீகாரில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இப்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் பீகார் ஒன்றாக உள்ளது. உண்மையில், பீகாரின் அன்றாட வளர்ச்சி விகிதம் இப்போது ஆந்திராவை விட அதிகமாக உள்ளது. இருப்பினும் இது ஆந்திராவுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு நாளும் பாதிக்கும் குறைவான தொற்றுகள் கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை, பீகாரில் கிட்டத்தட்ட 87,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை தொடக்கத்தில் 10,000 க்கும் குறைவான கொரோனா வைரஸ் தொற்றுகள் இருந்தன. ஆனால், பீகாரில் இறப்பு எண்ணிக்கை நாட்டில் மிகக் குறைவாக உள்ளது. பீகார் மாநிலத்தில் வெறும் 465 கொரோனா பாதிப்பு இறப்புகள் பதிவாகியுள்ளது. அதனால், அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ள பத்து மாநிலங்களில் பீகார் மாநிலம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.