இந்தியாவில் ஜனவரி 29ம் தேதியன்று, முதன் முதலாக மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அடுத்த ஒரு மாதத்திற்கு கொரோனா வைரஸ் தொடர்பான எந்த புதிய வழக்கும் பதிவு செய்யவில்லை. மார்ச் முதல் வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் வெளிவரத் தொடங்கினாலும், இரண்டு வாரங்களுக்கும் மேலாக, அதன் தாக்கம் மிகவும் குறைவாகவே உணரப்பட்டது. அந்த காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மரணங்களை உலக நாடுகள் சந்தித்துக் கொண்டிருந்தன.
எவ்வாறாயினும்,கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோவிட்-19 பரவலின் வளர்ச்சி ஒரு தொற்றுநோய் பரவலின் சிறப்பு தன்மையாக கருதப்படும் அதிவேக வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றது (Exponential Growth) .
ஜனவரி 30, மற்றும் பிப்ரவரி 3 தேதிகளில் பதிவான வழக்கினை எடுத்துக்கொள்ளாமல், மார்ச் 2ம் தேதி பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கில் இருந்து கணக்கீடு செய்தோமானால், இந்தியா தனது பாதிப்பு எண்ணிக்கை 100-ஐத் தாண்ட 13 நாட்கள் எடுத்துக் கொண்டது . அடுத்த 14 நாட்களில், இந்தியாவில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அடுத்த ஒன்பது நாட்களில் (ஏப்ரல் 7-க்குள்) எண்கள் 5,000 ஐத் தாண்டிவிட்டன. விகிதத்தை பார்த்தால், ஒவ்வொரு வாரமும் கூடுதலாக 10,000 வழக்குகளை பதிவு செய்யும் பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது .
இந்தியாவில் கொரோனா வைரஸ்: முதல் ஏழு மாநிலங்களில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை. மகாராஷ்டிராவில் அதிகமாக கோவிட்-19 (1,108) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் (690), டெல்லி (567) போன்ற மாநிலங்கள் உள்ளன
வெவ்வேறு மாநிலங்களில் நோய் தொற்றின் வளர்ச்சி வேறுபடுகிறது. மகாராஷ்டிரா, தெலுங்கானா, டெல்லி, தமிழ்நாடு, உ.பி. போன்றவைகள் அதிவேக வளர்ச்சி (Exponential Growth )விகிதத்தைக் காட்டுகின்றன. பல மாநிலங்கள் நேரியல் பாணி வளர்ச்சியை தான் (Linera Fashion) காட்டுகின்றன.
ஏப்ரல் 7ம் தேதி வரையில், இந்தியாவில் 167 பேர், கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். இதில் மூன்றில் ஒன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 உயிரழப்புகள்
தேசிய அளவிலும், எண்ணிக்கையை கொண்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் அளவிலும், கோவிட்-19 தொற்றின் நாளுக்கு-நாள் வளர்ச்சியை விவரிக்கும் விளக்கப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 நோயால், தினசரி இறப்பு அதிகரிப்பதும் இங்கு சுட்டிக்காட்டப் படுகிறது. மாநிலங்களிலிருந்து தினசரி பெறப்படும் மருத்துவ அறிவிப்பின் மூலம் இந்த விளக்கப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, மத்திய சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ எண்களிலிருந்தும் (அ) பொது தரவுகளிடமிருந்தும் சற்று மாறுபடலாம். இருப்பினும், ஒட்டுமொத்த போக்கில் பெரும் மாற்றமில்லை .
சோதனை முடிவுகள் தாமதமாக வரும் காரணத்தால், இறப்புக்கு சில நாட்களுக்குப் பிறகே, சில மரணங்கள் கோவிட்-19 மரணங்களாக அறிவிக்கப்படுகின்றன . எனவே, நாங்கள் இறப்பு அறிவிக்கப்பட்ட தேதிகளில் இருந்து இறந்தவர்களின் எண்களை கணக்கிடுகிறோம்.
எங்கள் விளக்கப்படங்கள் வேறுபட மற்ற சில காரணங்களும் உள்ளன. உதாரணமாக, மேற்கு வங்க அரசு, மாநிலத்தில் பதிவான சில இறப்புகளுக்கு கோவிட்-19 காரணமாக இருக்க முடியாது என்று கூறியுள்ளது.மேலும் கோவிட்-19 மரணங்களை வரையறுக்க குழு ஒன்றையும் அமைத்துள்ளது . எனவே, இந்த விளக்கபடத்தில், கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு இறந்தவர்களின் அனைவரையும் சேர்த்துள்ளோம்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகியவை இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
ஏப்ரல் 7ம் தேதி நிலவரம்:பஞ்சாப், மேற்கு வங்க மாநிலத்தில் 99 பேர்.ஜம்மு-காஷ்மீரில் 125 பேர்.
R0 என்றால் என்ன? பரவல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மதிப்பிடுவதற்கு, ‘அடிப்படை இனப்பெருக்க எண்’ ( R0) எனப்படும் அளவைப் உலகளவில் தொற்றுநோயியல் நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர். நோய் தொற்று உள்ள ஒருவர் அதிகபட்சம் எத்தனை நபர்களுக்கு அந்த தொற்றை பரப்பலாம் என்பதையே இது குறிக்கிறது
அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 12-18 நபர்களுக்கு தொற்று ஏற்படுத்தலாம் என்று அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன; ஃப்ளு காய்ச்சல் உள்ள ஒருவர் சுமார் 1.2-4.5 நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்தலாம் (பருவ காலத்தைப் பொறுத்து). சீனாவிலிருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையிலும், பல்வேறு நிபுணர்களின் கூற்றுப்படியும், கொரோனா வைரஸின் R0 எண் 2 முதல் 3 வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது.