செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில் நாவல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சம் அதிகரித்துள்ளது. அவற்றில் பாதி அளவு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இடம்பெற்றுள்ளன. இந்த மாத தொடக்கத்தில், மகாராஷ்டிராவில் 1.98 லட்சம் கோவிட் 19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 2.91 லட்சத்திற்கு மேல் சென்றுள்ளது. அதாவது, 92,000க்கு மேல் அல்லது 46 சதவீதம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்செயலாக செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த மாதத்தில் முதல் 20 நாட்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் புதிய தொற்றுகளை மகாராஷ்டிரா கண்டறிந்துள்ளது. இந்த காலகட்டத்தில், சுமார் 3 லட்சம் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இந்த நோயிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுமார் 7,000 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை 92,000க்கு மேல் அதிகரித்துள்ளது.
தற்செயலாக, இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிராவின் பங்களிப்பு குறைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சுமார் 40 சதவீதமாக இருந்த நிலையில் இப்போது 22 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், செப்டம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் கிட்டதட்ட 50 சதவீத பங்களிப்பு மகாராஷ்டிராவினுடையது. இது சமீப வாரங்களில் இந்தியாவின் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பில் மகாராஷ்டிராவின் முக்கிய பங்கைக் காட்டுகிறது.
ஒப்பீட்டளவில், இந்த காலகட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் பெரிய உயர்வைக் கண்ட பல மாநிலங்கள் உள்ளன. உதாரணமாக டெல்லியில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிகை 16,000க்கு கீழே இருந்தது இப்போது 32,000க்கு மேல் அதிகமாகி உள்ளது. இதேபோல, கேரளாவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில், சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை முதலில் 23,000க்கு குறைவாக இருந்தது. இப்போது 40,000 ஆக உள்ளது. ஆனால், இந்த 2 மாநிலங்களும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தலா 8 சதவீதம் மட்டுமே பங்களிக்கின்றன.
மற்றொரு பெரிய பங்களிப்பாளரான சட்டீஸ்கர் மாநிலம் தற்போது நாட்டில் மிக விரைவான விகிதத்தில் புதிய தொற்றுகளைக் கண்டறிந்து சேர்த்து வருகிறது. சட்டீஸ்கரின் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை இந்த மாத தொடக்கத்தில் சுமார் 33,000 ஆக இருந்தது. இப்போது 86,000க்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது தொற்று எண்ணிக்கை 160 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, அம்மாநிலத்தில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகள்ன் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 140 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரிலும் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் ஹரியானாவில் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆனால், சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்ட பல முக்கியமான மாநிலங்களும் உள்ளன. அவற்றில் ஆந்திரா, தமிழ்நாடு, பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய அதிக தொற்று எண்ணிக்கை கொண்ட மாநிலங்களும் உள்ளன. அம்மாநிலங்களில் தற்போது தொற்று எண்ணிக்கை சரிவு மிகக் குறைவாக உள்ளது. கர்நாடகா, அஸ்ஸாம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களும் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் மிகக் குறைவான உயர்வைக் கண்டுள்ளன.
தேசிய அளவில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. கண்டறியப்படும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கையைவிட தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கை செப்டம்பர் 17ம் தேதி 10.17 லட்சத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை 10.03 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கலாம்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை முக்கியம். ஏனென்றால், அவை நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் மீதான தற்போதைய சுமையின் அளவைக் காட்டுகின்றன. மேலும், இவர்களில் ஒருவர் தற்போது மற்றவர்களுக்கும் இந்த நோயை பரப்பி வருகின்றனர்.
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 87,000க்கும் குறைவாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக 90,000 எண்ணிக்கைக்கு அருகே இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 93,000க்கு அதிகமாக பதிவாகி உள்ளது. மேலும், கடந்த மூன்று நாட்களில் கண்டறியப்பட்ட புதிய தொற்று எண்ணிக்கையைத் தாண்டி 90,000க்கும் மேல் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 88,000ஐத் தொட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.