இந்தியாவில் உள்ள பதினொரு மாவட்டங்கள் இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் 1,000க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. மொத்தத்தில், நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளில் 42 சதவீதத்திற்கும் அதிகமானவை அவை இந்த மாநிலங்களில் பதிவாகி உள்ளன. இப்போது நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று 80,000ஐ தாண்டியுள்ளன.
அந்த 11 மாவட்டங்களின் பட்டியலில், மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் புனே போன்ற வழக்கமான நகரங்கள் உள்ளன. இதில் மகாராஷ்டிராவிலிருந்து 3 சிறிய நகரங்களும் உள்ளன. நாக்பூர், நாசிக் மற்றும் ஜல்கான் ஆகிய இடங்களில் இதுவரை 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த பட்டியலில் இந்த மாவட்டங்கள் இருப்பது முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று அல்ல. நாசிக் மற்றும் நாக்பூர் நகரங்கள் அதிகபட்ச தொற்று பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட நகரங்களின் முதல் 10 நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. ஜல்கானில் மிகக் குறைவான தொற்று எண்ணிக்கை உள்ளது. ஆனால், ஜல்கானும் அதிகபட்ச தொற்றுபாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட முதல் 25 நகரங்களில் உள்ளது.
உண்மையில், மகாராஷ்டிராவிலிருந்து இன்னும் 3 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்கள் இப்போது 1,000 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களை நெருங்குகின்றன. சோலாப்பூர், கோலாப்பூர் மற்றும் ராய்காட் ஆகிய நகரங்களில் இதுவரை 900க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் மகாராஷ்டிராவில் உள்ளது என்ற உண்மையை கருத்தில் கொண்டு பார்த்தால் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மக்களில் 2.82 சதவீதம் இறப்பு விகிதத்தைக் (சி.எஃப்.ஆர்) கொண்டுள்ளதால் இது நாட்டில் மிக அதிகமான ஒன்றாகும். நாட்டில் ஒவ்வொரு நாளும் அதிகபட்ச இறப்புக்கள் ஏற்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 3 வாரங்களில், இந்தியா ஒவ்வொரு நாளும் 70,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் இந்தியாவின் இறப்பு எண்ணிக்கையில் கூடியுள்ளன. இந்த கொரோனா இறப்புகள் ஒரு நாளைக்கு சுமார் 1,000 மரணங்களாக உள்ளன. இந்த எண்ணிக்கை வரவிருக்கும் நாட்களில் உயரக்கூடும். ஏனெனில், இப்போது நோயால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் 2 முதல் 3 வாரங்களுக்கு முன்னரே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
அந்த நேரத்தில் காணப்பட்ட தொற்றுநோய்களின் அதிகரிப்பு இப்போது இறப்பு எண்ணிக்கையில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், இந்த கொரோனா இறப்பு விகிதத்தில் ஒட்டுமொத்த கொரோனா தொற்று இறப்பு மெதுவாக ஆனால் சீராக குறைந்து வருகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு, கொரோனா இறப்பு விகிதம் 1.83 சதவீதமாக இருந்தது, இப்போது அது 1.64 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், பல விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, கொரோனா இறப்பு விகிதத்தின் இந்த கணக்கீடு சற்று தவறானது. ஏனென்றால், இன்று இறக்கும் மக்கள் இன்று தொற்று கண்டறியப்பட்ட குழுவிலிருந்து வந்தவர்கள் அல்ல. வழக்கமாக 2 முதல் 3 வாரங்கள் பின்னடைவு இருக்கும். 2 முதல் 3 வாரங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளுக்கு எதிராக இன்றைய இறப்பு எண்ணிக்கை காணப்பட்டால், இது போன்ற மிகத் துல்லியமான கொரோனா இறப்பு விகிதத்தை பெற முடியும். ஆனால், இதில் கால இடவெளி நிர்ணயிக்கப்படாததால், தொற்று கண்டறியப்பட்ட சில மணி நேரங்களுக்குள் இறந்துவிட்ட நோயாளிகள் ஏராளமாக இருப்பதால், எளிமைக்காக, கொரோனா இறப்பு விகிதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையாக கணக்கிடப்படுகிறது.
திங்கள்கிழமை கிட்டத்தட்ட 84,000 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன. 6 நாட்களில் முதல் முறையாக இந்த எண்ணிக்கை 90,000க்கு குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட தொற்று எண்ணிக்கை குறையும். இந்த முறை ஞாயிற்றுக்கிழமை சோதனை எண்ணிக்கை குறைவு முன்பை போல பெரிய அளவில் இல்லை. முந்தைய நாட்களில் 11 முதல் 11.5 லட்சம் பரிசோதனைகளுக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை 9.78 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 49.30 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை50 லட்சத்தைத் தொடும். இந்த தொற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இப்போது 38.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 78 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.