கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு

கொரோனா வைரஸ் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 15 முதல் மே 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக, 9,000 முதல் 10,000 வரை…

By: Updated: June 6, 2020, 09:57:10 PM

கொரோனா வைரஸ் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 15 முதல் மே 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக, 9,000 முதல் 10,000 வரை புதிய நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் தேசிய வளர்ச்சி விகிதம் அரை சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமான விகிதத்தில் வளர்ந்து வருகின்றன. ஆயினும் தேசிய வளர்ச்சி விகிதம் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது.

இவை இரண்டையும் விளக்குவது மிகவும் கடினம். முதல் விஷயத்தில், ஒவ்வொரு நாளும் புதிய தொற்றுகள் அதிகரித்து வருகின்ற போதிலும், அதே வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க தேவையானதை விட அவை இன்னும் குறைவாகவே உள்ளன. இரண்டாவது விஷயத்தில், தேசிய வளர்ச்சி விகிதத்தை விட 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த மாநிலங்கள் ஒப்பீட்டளவில் சிறிய அளவில் அதிக தொற்று எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளன.

தேசிய அளவில் தொற்று அளவு மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதிகபட்ச பங்களிப்பாக கணிசமாக மெதுவான வேகத்தில் வளர்ந்து வருகின்றன. மேலும் பிற மாநிலங்களில் அதிக வளர்ச்சி விகிதங்கள் இல்லை.

கடந்த 2மாதங்களாக பரவல் வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுகிறது. பரவல் வீதம் என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரால் பாதிக்கப்பட்ட நபர்களின் சராசரி எண்ணிக்கை ஆகும்.

இது மறு உற்பத்தி (Reproduction) எண் அல்லது வெறுமனே ஆர் ​​என அழைக்கப்படுகிறது. மேலும், மக்கள் தொகையில் ஒரு தொற்றுநோய் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதற்கான மிகச் சிறந்த நடவடிக்கையாகும். சென்னையில் உள்ள கணித அறிவியல் கழகத்தில் டாக்டர் சீதாப்ரா சின்ஹா ​​மற்றும் அவரது சகாக்கள் செய்த கணக்கீடுகளின்படி, ஒட்டுமொத்தமாக நாட்டிற்கான சமீபத்திய மறு உற்பத்தி எண் 1.22 ஆகும். இது தற்போதைய தொற்றுநோய்களின் போது எப்போதும் இல்லாத அளவில் குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்ட 100 நபர்களின் ஒவ்வொரு குழுவும் சராசரியாக மற்ற 122 பேருக்கு வைரஸை பரப்புகிறது என்பதாகும். முதல் கட்ட பொதுமுடக்கம் தொடங்குவதற்கு சற்று முன்பு, மார்ச் 24-ம் தேதி இந்த எண்ணிக்கை 1.83 ஆக இருந்தது. இதன் பொருள் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 பேர்களால் 183 புதிய நபர்கள சராசரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறைவு என்பது ஆர்-எண் இது மெதுவான தொற்றுநோயின் பரவலைக் குறிப்பிடுகிறது. இருப்பினும், இது 1க்குக் கீழே விழுந்த பின்னரே தொற்றுநோயின் வீழ்ச்சி உண்மையில் தொடங்குகிறது.

பொதுமுடக்க நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொற்று மறு உற்பத்தி எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டதை நேரடியாகக் கூறலாம். இருப்பினும், கட்டுப்பாடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்ட பின்னரும் அது தொடர்ந்து குறைந்து வருகிறது, இங்கு மீண்டும் மகாராஷ்டிராவின் மந்தநிலைக்கு ஒரு பங்கு உண்டு. இந்தியாவின் மொத்த தொற்று அளவில் 35 சதவீதத்திற்கும் மேலாக மகாராஷ்டிராவில் உள்ளது. எனவே, அது தேசிய பரவலில் சமமற்ற செல்வாக்கை செலுத்துகிறது.

மே 16 முதல் மே 26-ம் தேதி வரை, சீதாப்ராவும் அவரது சகாக்களும் மறு உற்பத்தி எண்ணிக்கை 1.23 என மதிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், நாட்டில் தற்போது மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை மே 30க்குள் 1.35 லட்சத்தை எட்டும் என்று கணித்திருந்தது. இது உண்மையில் 90,000 ஐ விட மிகக் குறைவாக இருந்தது. ஏனெனில் மகாராஷ்டிராவின் மந்தநிலை வைரஸ் தொற்று மறுஉற்பத்தி எண்ணை மேலும் இழுத்துச் சென்றது.

இந்த 1.35 லட்சம் எண்ணை இப்போது ஜூன் 9 அன்று மட்டுமே எட்ட முடியும் என்று சின்ஹா மதிப்பிடுகிறார். 9 நாள் தாமதம் என்பது தொடர்ந்து மந்தநிலையின் நேரடி விளைவாகும். ஜூன் 4 வியாழக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1.14 லட்சம் ஆகும். ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை அதிகரித்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:India coronavirus numbers covid 19 cases on rise but growth rate is slowing

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X