கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய உச்சத்தை பதிவு செய்ததோடு ( 7,128 பாதிப்புகள்) மட்டுமல்லாமல், நான்கு மாதங்களுக்கு பிறகு, முதன்முறையாக தேசத்தின் தினசரி கொரோனா பாதிப்பில் அதிகப்படியான பங்களிப்பை டெல்லி தலைநகர் பதிவு செய்தது.
/tamil-ie/media/media_files/uploads/2020/11/salanaaa.png)
டெல்லி கடைசியாக ஜூன் 23 அன்று, 3,947 என்ற புதிய பாதிப்புகள் மூலம், நாட்டில் அதிகப்படியான தினசரி கொரோனா பாதிப்பை உறுதிசெய்யும் மாநிலமாக உருவெடுத்தது. டெல்லியில் ஜூன் மாதத்தில் தான் கொரோனா பாதிப்பின் முதல் அலை உச்சத்தை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், டெல்லியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,000 ஆக இருந்தது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4,000 என்ற அளவில் உறுதி செய்து வந்த மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் அதிக கொவிட்-19 பாதிப்பு காணப்பட்டது. ஜூன் இரண்டாம் மற்றும் மூன்றாவது வாரத்தில், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லியின் தினசரி எண்ணிக்கை இருந்தன.
ஜூன் 23 உச்சநிலைக்குப் பிறகு (3,947 பாதிப்புகள்) டெல்லியில் பரவல் சீரான வகையில் குறையத் தொடங்கியது. ஒரு மாதத்துக்கும் மேலாக, தினசரி பாதிப்பு 1,000 க்கும் குறைவாகவும், சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,000 என்ற குறைந்த அளவிலும் காணப்பட்டன. இதன் காரணமாக, தேசிய தலைநகரில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக நம்பப்பட்டது.
ஆனால், அப்போதிருந்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையின் பிடியில் டெல்லி சிக்கிக் கொண்டது. கடந்த நான்கு நாட்களாக, 6,700 க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகளை டெல்லி பதிவு செய்து வருகிறது. இந்தியாவில், வேறு எந்த நகரமும் இதுவரை 6,000க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்யவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
டெல்லியில் தற்போது, கிட்டத்தட்ட 40,000 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு அடுத்தப்படியாகும்.
இதற்கிடையே, இந்தியாவில் புதிதாக உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் 50, 000 (50,356) ஐத் தொட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும், தினசரி பாதிப்பில் 50, 000 (50,356) ஐத் தொடுவது இது 2 வது முறையாகும். முன்னதாக, தொடர்ந்து 10 நாட்களாக, 50, 000 க்கும் குறைவான பாதிப்புகளை உறுதி செய்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக குணம் அடைவோரின் எண்ணிக்கை 53,920 ஆக இருக்கிறது. கடந்த ஐந்து வாரங்களாக இந்த போக்கு தொடர்ந்து வருகிறது. இப்போது, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5.16 லட்சமாக இருக்கிறது. மொத்த பாதிப்புகளுடன் உடன் ஒப்பிடும் போது, தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6.11 % மட்டுமே.

இதில், 21 சதவீதம் பேர் மகாராஷ்டிராவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அடுத்தப்படியாக, கேரளாவில் 15 சதவீதம் பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தினசரி பாதிப்பை உறுதி செய்த முதல் நாடாக அமெரிக்கா உருவெடுத்தது. உலக சுகாதார அமைப்பின் தரவுத்தளத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1.06 லட்சம் பேர் கொரோனா நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலன், அங்கு கோவிட்- 19 உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93.87 லட்சமாக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்தில், 90,000 க்கும் அதிகமான தினசரி பாதிப்பை இந்தியா பதிவு செய்தபோது, 1 லட்சத்தைக் கடக்கும் முதல் நாடு 'இந்தியா' என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனால், அதன் பின்னர், இந்தியாவில் தொற்று வளர்ச்சி விகிதம் நிலையாக சரியத் தொடங்கியது.