டெல்லி கடந்த இரண்டு வாரங்களாக அறிவித்த தினசரி புதிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கைகளைவிட கடந்த இரண்டு நாட்களில் அவற்றில் பாதி அளவு எண்ணிக்கையை அறிவித்துள்ளது. ஆனால், இது பெரும்பாலும் நோய் பரவலில் எந்தவொரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் குறிப்பதைவிட குறைந்த எண்ணிக்கை பரிசோதனையின் விளைவாக வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக டெல்லி முன்பு செய்த சோதனைகளில் பாதிக்கும் குறைவாக செய்துள்ளது.
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தலைநகரில் மூன்றாவது அலை நோய்த்தொற்றுகள் உச்சத்தை அடைந்துள்ளதாகக் கூறினார். ஆனால், தொற்று எண்ணிக்கைகள் அப்படி சொல்வது சற்று முன்கூட்டியே நடந்திருக்லாம் என்று கூறுகின்றன. நவம்பர் 11ம் தேதி 8,500 க்கும் மேற்பட்ட தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர் இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. ஆனால், தற்போது வரை நிலையான முறை ஏதும் இல்லை. மேலும், தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும்கூட, டெல்லி நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளை பங்களிப்பு செய்கிறது. அதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விதிவிலக்கு. ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியிருந்தன.
டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த நான்கு நாட்களாக, ஒரு மில்லியனுக்கும் குறைவான (10 லட்சம்) சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து, பரிசோதனை எண்ணிக்கை மூன்று நாட்களாக 10 லட்சத்துக்குக் குறைவாக இருந்ததில்லை. தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒருமுறை கிட்டத்தட்ட 15 லட்சத்தை தொட்டிருந்தாலும், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வார நாட்களில் 11 முதல் 13 லட்சம் வரை பரிசோதனை எண்ணிக்கை வழக்கமாக இருந்தது. இருப்பினும், கடந்த 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 8.6 லட்சம் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
இதில் சுவாரஸ்யமாக, மகாராஷ்டிரா கடந்த மூன்று நாட்களாக, மாநிலத்தில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்று அறிவிப்பதை நிறுத்திவிட்டது.
பரிசோதனை எண்ணிக்கை குறைவால் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்ட எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 30,000க்கும் கீழே குறைந்தது. இது நான்கு மாதத்தில் குறைந்த அளவில் பதிவான தொற்று எண்ணிக்கை ஆகும். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் நான்கு மாதங்களில் குறைவாக உள்ளது. இப்போது சுமார் 4.5 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் புதிய தொற்றுகளைக் கண்டறிவதில் தொடர்ச்சியான குறைவு என்பது முதல் முறையாக தொற்றுகளின் வளர்ச்சி விகிதம் ஒரு நாளைக்கு அரை சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. தொற்று பரவல் உச்சத்தில், இந்தியாவில் புதிய தொற்றுகள் மே மாதத்தில் ஒரு நாளைக்கு 7 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்து வந்தன.
முக்கிய மாநிலங்களான டெல்லி, கேரளா மற்றும் ஹரியானா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே உள்ளன - அவற்றின் தொற்று வளர்ச்சி விகிதம் (ஏழு நாள் கூட்டு தினசரி வளர்ச்சி விகிதம்) இப்போது ஒரு நாளைக்கு ஒரு சதவீதத்திற்கு மேல் உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானிலும் ஒரு நாளைக்கு ஒரு சதவீத வளர்ச்சி விகிதம் உள்ளது.
நிச்சயமாக, இமாச்சலப் பிரதேசம் இப்போது மிக வேகமாக, ஒரு நாளைக்கு 2 சதவீதத்திற்கு மேல் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அது நிச்சயமாக அதன் குறைந்த தளத்தினால் தான் உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 30,000 தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த சில நாட்களில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 தொற்றுகள் கூடி வருகின்றன.
இதனிடையே, கேரளா உத்தரபிரதேசத்தை முறியடித்து ஐந்தாவது மிக அதிக சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. தற்போதைய வேகத்தில், டெல்லி கூட விரைவில் உத்தரபிரதேசத்தை முந்திக்கொள்ள தயாராக உள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் தொற்றுகள் கேரளா மீதான கவனத்தை ஓரளவு குறைத்துவிட்டன. ஆனால், அம்மாநிலம் ஒவ்வொரு நாளும் இன்னும் ஏராளமான தொற்றுகளை அறிவித்து வருகிறது. இது இதுவரை 5.27 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. நாட்டில் அதிக அளவில் தொற்றுகளைக் கொண்ட முதல் 5 மாநிலங்களில் நான்கில் தென் மாநிலங்கள் உள்ளன. இதில் இடம் பெறாதா ஒரு தென் மாநிலம் தெலங்கானா. அம்மாநிலம் மிக அதிக அளவில் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களைக் கொண்ட 10வது மாநிலமாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.