கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (positivity rate) குறைந்து வருவதால், இந்தியாவின் சமீபத்திய கொரோனா தினசரி எண்ணிக்கை அதிகரிப்புக்கு, பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தியது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (positivity rate) சமூக பரவலைக் குறிக்கிறது. சமூகத்தில் ஒரு கொரோனா பாதிப்பை உறுதி செய்ய எத்தனை மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்பதை பொருத்து விகிதம் அமைகிறது. தர்போது விகிதம் குறைந்து வருவதால், ஒரு கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முன்பை விட இந்தியாவுக்கு கூடுதல் சோதனை தேவைப்படுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். 28 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 5 நாட்களாக, இந்தியா ஒவ்வொரு நாளும் சராசரியாக 75,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன . வேறு எந்த நாட்டிலும் தொடர்ச்சியாக இவ்வளவு அதிக எண்ணிக்கையை உறுதி செய்யப்படவில்லை. கடந்த சில வாரங்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. தினமும் 10 லட்சம் சாம்பிள்களுக்கு மேல் பரிசோதனை செய்யக் கூடிய திறனையும் இந்தியா தற்போது எட்டியுள்ளது. எனவே, இந்தியாவில் கொரோனா பரிசோதனை யுக்தி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்து தினசரி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
தேசிய அளவில் இந்த நிலை உண்மையாக இருந்தாலும், சில குறிப்பிட்ட மாநிலங்களில் இந்த போக்கு சற்று வித்தியாசமாக தெரிகிறது.
நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் ஐந்து மாநிலங்களில், நான்கு மாநிலங்களில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. நான்கு மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் விகிதம், இந்தியாவின் சராசரித் தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதத்தை விட அதிகமாக உள்ளது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
குறிப்பாக, ஆந்திராவில் கடந்த 2 வாரங்களாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம், 9.5 விழுக்காட்டிலிருந்து 11.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விகிதம் அதிகரித்தாலும், அதகப்படியான உயர்வு காணப்படவில்லை. உத்தரபிரதேசத்தின் வளர்ச்சி விகிதம் மிகவும் சிறியதாக உள்ளது.
தற்போது, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமான மாநிலங்களும் இவைதான். சுமார் பத்து நாட்களுக்கு முன், 12,000க்கு குறைவான தினசரி பாதிப்பை உறுதி செய்து வந்த மகாராஷ்டிரா, தற்போது ஒவ்வொரு நாளும் 16,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை உறுதிப்படுத்துகிறது. ஆந்திரா , தற்போது 10,000 க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகளை உறுதி செய்து வருகிறது. தற்போதைய எழுச்சிக்கு முன், ஆந்திராவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7,000-8,000 வரம்பாக இருந்தது. அதேபோன்று, 5,000- 7,000 என்ற வரம்பில் தினசரி பாதிப்பை உறுதி செய்து வந்த கர்நாடகா, தற்போது 8,000 முதல் 9,000 தினசரி பாதிப்புகளை உறுதி செய்கின்றன. உத்தரபிரதேசம் முதல் முறையாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 6,000 என்ற எண்ணிக்கையைக் கடந்தது.
சோதனைகள் அதிகரித்ததால் இந்த மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தன என்று பொருள் கொள்ளமுடியாது. உண்மையில், இந்த மாநிலங்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றமும் இல்லை. இருப்பினும், தெலுங்கானா போன்ற மற்ற சில மாநிலங்களில், பரிசோதனைகளே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது.
பாதிப்பு எண்ணிக்கையைப் போலவே, கொரோனா சிக்கல்களால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா உலகின் மூன்றாவது இடத்தில்உள்ளது. அமெரிக்கா, பிரேசில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. நேற்று, மட்டும் 971 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64,469 ஆக உள்ளது. இது இப்போது மெக்சிகோவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.