கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் ஒரு அசாதாரண நிலைத்தன்மை உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 23 நாட்களில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 5,800 முதல் 6,000 தொற்றுகள் வரை பதிவாகியுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை வரைபடத்தில் கிட்டத்தட்ட ஒரு தட்டையான வளைவுக்கு வழிவகுக்கிறது. (கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்).
உத்தரபிரதேசம் அல்லது கர்நாடகா அல்லது பீகார் போன்ற கொரோனா தொற்று பதிவாகும் பிற மாநிலங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில், அவற்றின் அன்றாட எண்ணிக்கையில் அதிக ஏற்ற இறக்கங்களைக் காட்டியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு நாளில் 50,000 முதல் 80,000 வரை புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தினசரி புதிய தொற்றுகள் கண்டறிவதில் இந்த வகையான நிலைத்தன்மை முந்தைய மாதங்களில் தமிழ்நாட்டில் கூட காணப்படவில்லை. இதற்கு, பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கையில் உள்ள இதேபோன்ற நிலைத்தன்மையும் ஒரு காரணம். ஒவ்வொரு நாளும் பல பரிசோதனைகள் செய்யப்படும் மாநிலத்தில் உள்ள பரிசோதனை மையங்களின் செயல்படும் திறன் மட்டுமே மற்றொரு காரணமாக இருக்கக் கூடும். தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் தினசரி பரிசோதனை எண்ணிக்கை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மாறாமல் நிலையாக இருக்கின்றன. இருப்பினும், புதிய தொற்றுகளின் எண்ணிக்கையில் அதே வகையான வழக்கம் இல்லை.
மே மாதத்தில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இதேபோன்ற போக்குகள் காணப்பட்டன. இந்த மாநிலங்களும் நீண்ட காலத்திற்கு மிகக் குறுகிய அளவுகளில் குறைவான தொற்று எண்ணிக்கைகளைப் பதிவு செய்தன. பல மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இந்த 3 மாநிலங்களும் அவற்றின் அன்றாட தொற்று எண்ணிக்கையில் இன்னும் குறைவான ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது மே மாதத்தில் இருந்ததை போல இப்போது இல்லை. பரிசோதனை எண்ணிக்கையில் தினசரி ஏற்ற இறக்கங்கள் இருக்கும்போது, தொற்றுகளை கண்டுபிடிப்பதில் உள்ளார்ந்த ஒரு சீரற்ற தன்மையின் முடிவு இருக்கும்.
பரிசோதனைகள் அதிக ஆபத்து உள்ள குழுக்களை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டால் இந்த ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருக்கும். மேலும், பரிசோதிக்கப்பட வேண்டிய நபர்களை தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும்.
புதிய தொற்றுகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை ஒரு வீழ்ச்சியைக் கண்ட பிறகு, அநேகமாக ஞாயிற்றுக்கிழமை பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், தினசரி புதிய தொற்றுகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் அதிகரித்தது. திங்கள்கிழமை தொற்று குறைவதற்கு 5 நாட்களுக்கு முன்பு, கண்டறியப்பட்ட அளவுக்கு ஏற்ப, செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் 78,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டில் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை இப்போது 66,000ஐ தாண்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.