இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பற்றிய பல குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று மிக அதிகமான நோய்த்தொற்று வீதம் ஆகும். கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில், இதற்கு முந்தைய தொற்றுநோய் பரவல் நேரத்துடன் ஒப்பிடும்போது பல மக்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உதாரணமாக, கடந்த ஒரு வாரத்தில், செய்யப்பட்ட பரிசோதனைகளில் 13.5 சதவீதத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் தொற்று இருப்பதாக வந்தன. இந்த ஏழு நாள் சராசரி தொற்று விகிதம் ஒருபோதும் அதிகமாக இருந்ததில்லை. தொற்று விகிதம் அதிகரிப்பு என்பது சமூகத்தில் நோய் பரவுவதற்கான ஒரு நடவடிக்கையாகும். மிகவும் பரவலான கொரோனா பரிசோதனைகள் அதிக தொற்று விகிதத்திற்கு வழிவகுக்கும்.
தற்போதைய அதிக தொற்று வீதம் கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதற்கான சாத்தியத்தை வலுப்படுத்துகிறது. கடந்த ஆண்டை விட பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முதல் அலையின் போது, தொற்று விகிதம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடைசி வாரத்தில் உச்சத்தில் இருந்தது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தபோதும்கூட அது சீராகக் குறைந்தது. அந்த நேரத்தில், அதிக எண்ணிக்கையில் தொற்றுகள் அதிகரித்தது என்பது பரிசோதனைகளின் நேரடி விளைவாக இருந்தது. ஜூலை மாதத்தின் பெரும்பகுதி வரை, இந்தியா ஒரு நாளைக்கு 5 லட்சத்துக்கும் குறைவான பரிசோதனைகளை மேற்கொண்டது. ஜூலை மாத இறுதியில்தான், பரிசோதனை எண்ணிக்கை வேகமாக உயரத் தொடங்கி ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ஒரு நாளைக்கு பத்து லட்சத்துக்கும் மேல் பரிசோதனைகள் அதிகரித்தது.
இப்போது சரியாக இந்தியா கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்ததைவிட கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமான தொற்றுகளைக் கண்டறிந்துள்ளது. ஆனால், இந்த உயர் பரிசோதனையின் அதிகரிப்பு காரணமாக அல்ல. சோதனை என்ணிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இருந்த அதே அளவில்தான் உள்ளன. ஆனால் இன்னும் பலர் தொற்றுக்குள்ளாகி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா எப்போதுமே தொற்றுநோய் காலங்களில் 15 சதவீதத்திற்கு மேல் மிக அதிக தொற்று விகிதத்தைக் கொண்டிருந்தது. ஆனால், சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் கடந்த ஆண்டு ஒப்பீட்டளவில் குறைந்த தொற்று விகிதங்களைக் கொண்டிருந்தன. தொற்று விகிதத்தில் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருந்த இந்த மாநிலங்கள் இப்போது போட்டியில் உள்ளன. உண்மையில், சத்தீஸ்கரின் வாராந்திர தொற்று விகிதம் தற்போது மகாராஷ்டிராவைவிட அதிகமாக உள்ளது.
இந்த அதிக அளவிலான கொரோனா தொற்று விகிதம் மக்களிடையே தொடர்புகள் அதிகரித்ததன் காரணமாகவோ அல்லது வைரஸின் வேகமாக பரவும் புதிய மாறுபட்ட சுழற்சி காரணமாகவோ இருக்கலாம். இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
புதிய மாறுபட்ட வைரஸ் உள்நாட்டில் மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் எழுந்தது முதன்முதலில் கவனிக்கப்பட்டது. இது இரண்டு முக்கியமான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இது வேகமாக பரவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் தவிர்க்கக்கூடும். மகாராஷ்டிராவிலிருந்து 60 சதவீதத்திற்கும் அதிகமான வைரஸ் மாதிரிகள், மரபணு வரிசைப்படுத்துதலுக்காக சேகரிக்கப்பட்டன. அவை இந்த இரண்டு வித்தியாசங்களைக் காட்டுகின்றன. இந்த மாறுபட்ட வைரஸ் பெரும்பாலும் பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
தீவிரமான பரிசோதனை என்பது சுகாதார அதிகாரிகளின் மிகவும் பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாகும். இது குறுகிய காலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறது. ஏனென்றால், அதிகமான மக்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதால், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றுநோய் பரவுவதிலிருந்து தடைசெய்யப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், அதிக எண்ணிக்கையிலான தொற்று கண்டறியப்படுவதன் காரணமாக ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பரிசோதனைகளின் செயல்திறனும் பலவீனமடைந்துள்ளது.
நாடு கொரோனா பரிசோதனையில் ஒரு நிறைவு நிலையை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. அதனால், மேலும் பரிசோதனைகளை அதிகரிப்பது என்பது கடினமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு நாளும் 14 முதல் 15 லட்சம் வரை மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் செய்யப்பட்டதைப் போன்ற அளவுக்கு செய்யப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் தொற்றுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. மேலும், தொற்று நோய் மிகவும் மெதுவான விகிதத்தில் பரவியது.
இருப்பினும், மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அவற்றின் பரிசோதனை திறனை அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிரா ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்து வருகிறது. அதே நேரத்தில் டெல்லி ஒரு நாளைக்கு 1 லட்சம் பரிசோதனைகளைத் தாண்டியுள்ளது. சத்தீஸ்கர் முன்பை விட அதிகமாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50,000 மாதிரிகளை பரிசோதனை செய்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.