புனே எதிர்பார்த்தபடி திங்கள்கிழமை டெல்லியை முந்திக்கொண்டு அதிக எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்று மக்களைக் கொண்ட நகரமாக மாறியது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்கள் முதலில் கண்டறியப்பட்ட நகரங்களில் ஒன்றான புனே நகரத்தில்,ம் ஒரு கட்டத்தில் இப்போது 1.75 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புனே கடந்த 2 வாரங்களாக ஒவ்வொரு நாளும் 2,000 முதல் 3,000 வரை அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளை பதிவு செய்து வருகிறது. இது பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக அதிக தொற்று கண்டறியப்படுகிறது என்று மாவட்ட அதிகாரிகள் கூறுகிறார்கள். தொற்று நிலையான எண்ணிக்கையை அடைவதற்கும் தொற்று குறைவதற்கும் முன்பு தொற்றுகள் அதிகரிக்கும் என்பது இயல்பானது என்று மாவட்ட அதிகாரிகள் கூறுகிறார்கள்.
புனேவில் சமீபத்தில் நடந்த ஒரு சீராலாஜிக்கல் கணக்கெடுப்பில், நகரின் சில பகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை அறிகுறி இல்லாத கண்டறியப்படாத தொற்றுகள் என்று தெரியவந்துளது. சீராலாஜிக்கல் ஆய்வுகள் மூலம் எந்தவொரு நகரத்தையும் மிக அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்ட நகரம் இதுவாகும். மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் மேல் தொற்று பரவுதல் விகிதத்தில் குறைவு என்பது மந்தநிலையைக் குறிக்கும். அதாவது ஒவ்வொரு நாளும் குறைவான மக்கள் தொற்றுநோய் கண்டறியப்பட வேண்டும். இருப்பினும், இந்த மந்தநிலை புனே நகரில் இன்னும் தொடங்க இருக்கிறது.
புனே நகரத்தில் கடந்த சில வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை சமீபத்தில் பெரிய அளவில் தொற்றுகள் கண்டறியப்பட்டவை என்பதைக் குறிக்கிறது. இது தொற்றுநோய் நகரத்தில் ஏறுமுகத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. புனேவில் தற்போது 50,000க்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை மும்பையில் சுமார் 20,000, அல்லது டெல்லியில் சுமார் 15,000 அல்லது சென்னையில் சுமார் 13,000 என்ற எண்ணிக்கையைவிட அதிகம்.
சுவாரஸ்யமாக, அதிகபட்சமாக தொற்று பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட ஐந்து நகரங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்).
புதிய நோய்த் தொற்றுகள் 75,000க்கு மேல் கண்டறியப்பட்டு வந்த நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு, திங்கள்கிழமை தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க விழ்ச்சியைக் கண்டது. நாட்டில் 70,000க்கும் குறைவான புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக இந்த வீழ்ச்சி என்று தெரிகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த 5 நாட்களில் மிக அதிக எண்ணிக்கையில் தொற்று பதிவான ஒவ்வொரு மாநிலத்திலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டுள்ளன.
அஸ்ஸாம் இந்த போக்கை அதிகரித்து அம்மாநிலத்தின் மிக அதிகமான ஒருநாள் புதிய தொற்று உயர்வைப் பதிவு செய்துள்ளது. அண்மையில் அதிகபட்ச தொற்று எண்ணிக்கையுடன் முதல் பத்து மாநிலங்களில் இந்த மாநிலம் நுழைந்துள்ளது. அஸ்ஸாம் திங்கள்கிழமை 3,200க்கும் அதிகமான புதிய தொற்றுகளைக் கண்டறிந்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1.09 லட்சமாக உள்ளது. இருப்பினும், அம்மாநிலத்தில் வியக்கத்தக்க வகையில் குறைவான இறப்பு எண்ணிக்கை உள்ளது. இதுவரை அஸ்ஸாமில் 306 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா இறப்பு வீதம் 0.28 சதவீதமாக உள்ளது. இது நாட்டில் எந்த ஒரு பெரிய மாநிலத்தைவிடவும் மிகக் குறைவான இறப்பு வீதம் ஆகும்.