டெல்லியில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், டெல்லி நாட்டில் அதிகபட்சமாக கொரோனா வைரஸ் தொற்று உள்ள நகரங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி வியாழக்கிழமை அன்று 3,500 புதிய தொற்றுகளை பதிவு செய்ததையடுத்து, 3,500 இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3.21 லட்சமாக அதிகரித்தது. இந்த போக்கில், கடந்த ஒன்றரை மாதங்களாக பாதிக்கப்பட்ட மக்களின் அதிகபட்ச எண்ணிகையைக் கொண்ட நகரமாக இருந்துவந்த புனேவை டெல்லி முந்தியுள்ளது.
ஆகஸ்ட் மாத பிற்பகுதியிலும் செப்டம்பர் மாதத்திலும் ஒரு சில நாட்களில் ஒரு நாளைக்கு 5,000க்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்த புனே நகரம், அதனுடைய தினசரி தொற்று எண்ணிக்கை கடந்த மாதத்தில் சீராகக் குறைந்து வருவதைக் கண்டது. கடந்த மூன்று நாட்களாக, இது ஒரு நாளைக்கு 1,500க்கும் குறைவான புதிய தொற்றுகளைப் பதிவு செய்து வருகிறது.
மறுபுறம், டெல்லியில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. பின்னர், டெல்லியின் தொற்று எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் மீண்டும் கூர்மையாக உயர்ந்துள்ளது. ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் மீண்டும் உயரத் தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு, டெல்லியின் தினசரி புதிய தொற்றுகள் 3,000க்கும் அதிகமாக உள்ளன.
இதனிடையே, பெங்களூருவில் கடந்த இரண்டு வாரங்களில் மிக வேகமாக தொற்று வளர்ந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் மூன்று சந்தர்ப்பங்களில், பெங்களூரு நகரத்தில் ஒரு நாளைக்கு 5,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன. டெல்லி ஒருபோதும் 4,500 என்ற எண்ணிக்கையைக்கூட தாண்டவில்லை. கேரளாவிற்கு அடுத்தபடியாக, தற்போது நாட்டில் வேகமாக தொற்று அதிகரித்து வரும் இரண்டாவது மாநிலமாக விளங்கும் கர்நாடகாவின் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பை பெங்களூரு வேகமாக்கி வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் பல சந்தர்ப்பங்களில், கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 10,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன.
2.97 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைக் கொண்ட பெங்களூரு வெள்ளிக்கிழமை 3 லட்சம் எண்ணிக்கையை எட்டியுள்ளது. வியாழக்கிழமை, பெங்களூரு கிட்டத்தட்ட 3,800 தொற்றுகளைப் பதிவுசெய்தது. அதற்கு ஒரு நாள் முன்பு 4,500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பெங்களூருவில் காணப்பட்டன. இந்த விகிதத்தில் சென்றால், பெங்களூரு புனே மற்றும் டெல்லியை ஓரிரு வாரங்களில் முந்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இந்த இரண்டு நகரங்களுடனான தொற்று எண்ணிக்கை இடைவெளியை அது சீராக பராமரித்து வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மிக வேகமான தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு மந்தநிலை அறிகுறிகளைக் காட்டுகின்றன. மகாராஷ்டிராவுக்குப் பிறகு இரு மாநிலங்களும் நாட்டில் மிகப் பெரிய அளவு தொற்றுகளைப் பங்களிப்பவைகளாக இருந்தாலும், அவை இரண்டும் சில நாட்களுக்கு முன்பு, தொற்று அளவில் அடையப்பட்ட உச்சநிலையிலிருந்து விலகி உள்ளன. அவற்றின் தொற்று வளர்ச்சி விகிதங்களும் கணிசமாகக் குறைந்துவிட்டன. இருப்பினும், மீண்டும், அவை இப்போது வேகமாக தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களாகத் தொடர்கின்றன.
கர்நாடகாவில் இதுவரை 7.44 லட்சம் தொற்றுகள் பதிவாகியுள்ளன. வியாழக்கிழமை நிலவரப்படி 3.18 லட்சம் தொற்றுகளுடன் கேரளா வெள்ளிக்கிழமை டெல்லியை முந்திக்கொண்டு, நாட்டின் ஆறாவது மிக அதிக தொற்றுநோய்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது.
நாட்டில் வியாழக்கிழமை 63,000க்கும் அதிகமான புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. முந்தைய நாளை விட 4,000 குறைவாக பதிவானது. இதுவரை, நாட்டில் 73.7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 64.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அல்லது சுமார் 88 சதவீதம் பேர் தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில், வியாழக்கிழமை 70,000க்கும் மேற்பட்ட மக்கள் தொற்றில் இருந்து மீண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இது 13 வது நாளாக புதிய தொற்றுகளைவிட தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அமைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.