இந்தியாவில் கொரோனா நிலவரம்: தினசரி 1,000க்கும் மேல் இறப்புகள் புதிய இயல்பாக இருக்கும் ஏன்?

நாட்டில் கடந்த 10 நாட்களில் 6 முறை, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. இது இப்போது புதிய இயல்பாக இருக்கும் என்று காட்டுகிறது.

By: Updated: September 3, 2020, 10:58:05 PM

நாட்டில் கடந்த 10 நாட்களில் 6 முறை, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. இது இப்போது புதிய இயல்பாக இருக்கும் என்று காட்டுகிறது.

மகாராஷ்டிராவைத் தவிர, ஒவ்வொரு நாளும் அதிகபட்ச கொரோன தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மற்றும் இப்போது பஞ்சாபில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகள் பதிவாகின்றன.

பஞ்சாபில் முதல் முறையாக புதன்கிழமை 100க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர், அம்மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 40 முதல் 60 வரை கொரோனா இறப்புகள் வரை பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அம்மாநிலத்திற்கு இது மிகவும் அதிக அளவாக உள்ளது. பஞ்சாபில் இதுவரை சுமார் 57,000 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தற்போது அம்மாநிலத்தில் 15,000 பேர் கொரோன வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, குஜராத், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. அவர்களில் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், அவற்றில் அன்றாட கொரோனா இறப்பு எண்ணிக்கை 20 முதல் 30 என்ற அளவுக்கும் குறைவாகவே உள்ளது.

நிலைமை தீவிரமடையும் வரை மக்கள் மருத்துவரிடம் செல்வதைத் தவிர்ப்பதால் தொற்று தாமதமாக கண்டறியப்படுவதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகள் ஏற்படுகின்றன என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

“அனைத்து கோவிட் இறப்புகளிலும் 67 சதவிகிதம் நோயாளிகள் கடுமையான நோய் அறிகுறிகளையும் அடைந்த பின்னர் முதல் முறையாக சுகாதார நிலையத்திற்கு சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ளன… இந்த தொற்றுகள் பின்னர் சிகிச்சை அளிக்க்க கடினமாகி இறப்புக்கு வழிவகுக்கும்” என்று மாநில சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து கூறினார்.

மேலும், பல்பீர் சிங் சித்து கூறுகையில், “நோய் தீவிரமடையும் வரை இணை நோயுள்ள நபர்கள்கூட சுகாதார வசதிகளைப் பெற தெரிவிக்கவில்லை. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற இணை நோயுள்ள நோயாளிகளிடையே அதிகபட்ச கோவிட் இறப்புகளுக்கு இதுவே காரணம்… மாநிலத்தில் கோவிட் இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயாளிகளிடையே ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

சுகாதார மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ளவும் மக்கள் தயக்கம் காட்டுவதும் பயம் கொள்வதும் தவறான பிரச்சாரத்தின் விளைவாகும் என்று சித்து கூறினார்.

மகாராஷ்டிரா ஒவ்வொரு நாளும் 300 முதல் 400 வரை கொரோனா இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது. சில சமயங்களில் அந்த எண்ணிக்கையும் அதிகமாகிறது. ஆனால், இதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் முந்தைய நாட்களிலிருந்த இறப்பு எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்து, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்கள் தினமும் 100க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகளை தொடர்ந்து பதிவு செய்துவருகிறது. ஜூலை நடுப்பகுதி வரை கர்நாடகாவில் இறப்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அது கடுமையாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், அம்மாநிலத்தில் 100க்கும் குறைவான இறப்புகள் ஆறு நாட்கள் மட்டுமே பதிவாகி இருந்தன.

அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகள் எண்ணிக்கையைக் கொண்ட முதல் 10 மாநிலங்களில், அசாம் பீகார் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் வியக்கத்தக்க வகையில் இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. உண்மையில், அசாமில் 323 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மேலும், அம்மாநிலத்தில் 1.15 லட்சத்துக்கும் அதிகமான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் கொரோனா இறப்பு சதவீதம் 0.28 சதவீதத்துடன் நாட்டில் பெரிய மாநிலங்களைவிட குறைவான இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கூர்மையாக உயர்ந்து வருவதால், வரவுள்ள வாரத்தில் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இப்போது இறப்புகள் பதிவாகும் நபர்கள் குறைந்தது 10 நாட்களுக்கு முன்னர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட தொகுப்பைச் சேர்ந்தவர்கள். அந்த நேரத்தில், இந்தியா ஒவ்வொரு நாளும் 60,000 முதல் 70,000 புதிய வழக்குகளை கண்டுபிடித்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில், இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான நாட்களில் 75,000க்கும் மேல் தொற்று அதிகரித்துள்ளது.

புதிய தொற்றுகளின் எண்ணிக்கை புதன்கிழமை முதல் முறையாக 80,000 எண்ணிக்கையைத் தாண்டியது. ஏறக்குறைய 84,000 புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 38.53 லட்சமாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா புதன்கிழமை கிட்டத்தட்ட 17,500 புதிய தொற்றுகளைக் கண்டறிந்தது. ஒரு புதிய உச்சத்தை தொட்டது. அதேபோல் கர்நாடகாவிலும் 10,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:India coronavirus why over 1000 daily deaths could be the new normal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X