Advertisment

கொரோனா 2-வது அலை: குறைவான இறப்பு விகிதம் இப்படியே தொடருமா?

Second wave fatality rate வரவிருக்கும் இரண்டு வாரங்களில் தினசரி இறப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிக்கலாம்.

author-image
WebDesk
New Update
India covid 19 march 25 second wave fatality rate maharashtra punjab Tamil News

India covid 19 march 25 second wave fatality rate Maharashtra Punjab Tamil News

Second wave fatality rate may increase Tamil News : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விரைவான எண்ணிக்கை உயர்வு, இறப்பு எண்ணிக்கையிலும் அதன் தாக்கத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. பிப்ரவரியில் இரட்டை இலக்கங்களாகக் குறைந்திருந்த தினசரி இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் 250-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Advertisment

இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் கூர்மையான அதிகரிப்புடன் ஒப்பிடும்போது, ​​இறப்புகளின் அதிகரிப்பு இப்போது வரை மிகக் குறைவு. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணப்பட்டதை விட தற்போதைய அலையில் இறப்பு விகிதம் இன்னும் கணிசமாகக் குறைவாக உள்ளது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக, அது உயரத் தொடங்கியிருக்கிறது.

கடந்த புதன்கிழமை, இந்தியாவில் 53,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 251 இறப்புகள் பதிவாகியுள்ளன. முதல் முறையாக தினசரி வழக்கு எண்ணிக்கை 50,000 எண்ணிக்கையை மீறியது கடந்த ஆண்டு ஜூலை 29 அன்றுதான். அப்போது, 775 இறப்புகள் பதிவாகின. ஏனென்றால், அந்த நேரத்தில் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே 30,000 மற்றும் 40,000 வரம்பிலிருந்தன. இப்போதோ, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மிக விரைவாக உள்ளது. புதன்கிழமை 50,000 வரம்பை எட்டுவதற்கு முன்பு, இந்தியா 40,000-களில் ஐந்து நாட்களும் 30,000-களில் இரண்டு நாட்களும் மட்டுமே இருந்தன. ஆகையால், வரவிருக்கும் இரண்டு வாரங்களில் தினசரி இறப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிக்கலாம்.

கடைசியாக இந்தியாவில் 50,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், நவம்பர் 6-ம் தேதி பதிவாகின. அன்று 577 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியிருந்தன. அந்த தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் 50,000-க்கும் குறைவாகவே இருந்தன.

publive-image
Trajectory of active cases in India since January 1, 2021

பிப்ரவரி 9 முதல் தொடங்கும் இரண்டாவது அலைகளில் இறப்பு விகிதம் முந்தைய அலைகளை விட மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தையும் விடக் கணிசமாகக் குறைவாக உள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, நாட்டில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 1,000 பேரில் 14 பேரும் இந்த நோயால் இறந்துள்ளனர். இரண்டாவது அலையின் போது, ​​இந்த எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான எண்ணிக்கையாக மகாராஷ்டிராவில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 1,000 பேரில் 24 பேர் இறந்துள்ளனர். ஆனால், பிப்ரவரி 8-க்குப் பிறகு, இந்த எண்ணிக்கை பத்தாகக் குறைந்துள்ளது. இந்த போக்கு மற்ற எல்லா மாநிலங்களிலும் காணப்படுகிறது.

ஆனால், இந்த போக்கு தலைகீழாகத் தொடங்குகிறது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த அதிகரிப்பு இப்போது கவனிக்கத் தொடங்கியிருந்தாலும். ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான இறப்பு விகிதம் பிப்ரவரி 21-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.76 சதவீதத்திலிருந்து, பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், மேலும் 1.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் இறப்புகள் நிகழ்கின்றன. மார்ச் 9-க்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் தாக்கம் இறப்பு எண்ணிக்கையில் முழுமையாகப் பிரதிபலிக்கப்பட உள்ளது.

மகாராஷ்டிராவில், பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 28 வரையிலான வாரத்தில் சி.எஃப்.ஆர் 0.9 சதவீதத்திலிருந்து 0.83 சதவீதமாகக் குறைந்தது. ஆனால், அடுத்த வாரத்தில் மீண்டும் 0.9 சதவீதமாக உயர்ந்தது.

சுமார் பத்து நாட்களுக்கு முன்பு வரை, எந்த ஒரு நாளிலும் 18 முதல் 20 மாநிலங்கள் வரை ஒரு மரணம் கூட பதிவு செய்யாதவையும் இருந்தன. இதில் , ராஜஸ்தான், குஜராத் அல்லது உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களும் அடங்கும். இந்த எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உதாரணமாக, கடந்த செவ்வாயன்று, பத்து மாநிலங்கள் மட்டுமே பூஜ்ஜிய இறப்புகளைப் பதிவு செய்தன. புதன்கிழமை 13 மாநிலங்களில் இறப்புகள் இல்லை. இவை அனைத்தும் இப்போது சிறிய மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை நாட்டில் செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,000-க்கும் அதிகம். இது, ஒரு நாள் அதிகரிப்பு. இப்போது நாட்டில் 3.95 லட்சத்துக்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை பிப்ரவரி 11 அன்று 1.36 லட்சமாகக் குறைந்தது.

நாட்டில் செயலில் உள்ள வழக்குகளில் 62 சதவீதத்திற்கும் அதிகமானவை மகாராஷ்டிராவில் இருப்பதில் ஆச்சரியமில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் அதன் செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000-க்கும் குறைவாக இருந்து இப்போது கிட்டத்தட்ட 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள அடுத்த இரண்டு மாநிலங்களில் கேரளா மற்றும் பஞ்சாப் தலா 20,000-க்கும் அதிகமான எண்ணிக்கையை கொண்டிருக்கின்றன. இதற்கு மாறாக, புனே மட்டும் 50,00-க்கு அருகில் உள்ளது. நாக்பூரில் 34,000 உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment