இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் (20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை) மாநிலத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொற்று அதிகரித்தபோது முதல் அலைகளில் கோவிட் நெருக்கடியைத் வெகுவாக குறைக்க முடிந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று 2-வது அலையினால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில், நேற்று (ஏப்ரல் 19), மாநிலத்தின் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது. இதன் மூலம் இந்தியாவில், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் கொண்ட இரண்டாவது மிக மோசமான மாநிலமாக மாறியது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் உ.பி. 28,287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் இரண்டாவது அதிகபட்சமாகும். மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 167 பலியாகிய நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 10,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு உ.பி.க்கு ஒரே நாளில் மிக அதிகமா பலி எண்ணிக்கையாகும்.
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு & ஹெல்த் இன்ஃப்ரா மீது விளைவு
நேற்று (ஏப்ரல் 19), உ.பி.யில் செயலில் உள்ள கேசலோட் 2,08,523 ஐ எட்டியதால், இரண்டாவது அலைகளில் தொற்று பரவியுள்ள மூர்க்கத்தன்மையை கிட்டத்தட்ட மூன்று வாரங்களில், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21 மடங்கு அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாகும். இதில் ஒரு லட்சத்திற்கு மேலான பாதிப்புகள், வெறும் ஐந்து நாட்களில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் குணமடைந்தவர்களை சார்ந்து இருப்பதால் <சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை = மொத்த பாதிப்பு - (மொத்த மீட்கப்பட்ட + மொத்த இறப்புகள்)>, மாநிலத்தின் வளர்ந்து வரும் செயலில் உள்ள கேசலோட் என்பது இரண்டாவது அலைகளில் மீட்பு மெதுவாக இருப்பதைக் குறிக்கிறது. இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில், பாதிப்பு எண்ணிக்கை சீராக உயர்ந்ததால் புதிய பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. இதன் விளைவாக, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 1 ஆம் தேதி 55,538 இலிருந்து செப்டம்பர் 17 அன்று 68,235 ஆக உயர்ந்தது. பின்னர் அது குறையத் தொடங்கியது.
ஆனால் அதன்பிறகு பாதிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகரித்து, தற்போது கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் செயலில் உள்ள கேசலோட் ஏப்ரல் 1 ஆம் தேதி 11,918 இலிருந்து தற்போது 2.08 லட்சத்துக்கு மேல் உயர்ந்தது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளுக்கு அதிக தேவை உள்ள மாநிலத்தின் மருத்துவ உள்கட்டமைப்பில் நிறைய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது, அரசு கோவிட் மருத்துவமனைகளில் 97,580 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் 4,100 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு, அதிகபட்சமாக 68,235 பேருக்கு 1.51 லட்சம் படுக்கைகளை ஏற்பாடு செய்ததாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வைரஸ் பரவுதல்
கடந்த ஆண்டு முதல் உச்சத்திலிருந்து இந்த முறை மற்றொரு முக்கியமான வேறுபாடு வைரஸ் பரவுவதாகும். இதில் கொரோனா தொற்று பாதிப்பின் முதல் அலை பரவுதலில், லக்னோ, கான்பூர் நகர், பிரயாகராஜ், வாரணாசி, கோரக்பூர், மீரட், காஜியாபாத் மற்றும் நொய்டா போன்ற அடுக்கு -1 மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது. தற்போதைய சுழ்நிலையில், காரோனா பாதிப்பு அதிகம் எழுச்சிபெற்று மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இதில் மாநில சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட டாஷ்போர்டு, உயர் கேசலோட் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 5,897 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் லக்னோ, 2,668 உடன் வாரணாசி, 1,576 உடன் பிரயாகராஜ் மற்றும் 1,365 உடன் கான்பூர் நகர் - மொத்தம் 75 மாவட்டங்களில் 56 இல் இருந்து 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில், ஏழு மாவட்டங்களில் 800 க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 500 க்கும் மேற்பட்ட பாதிப்புகள், 200 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் 23 மற்றும் 100 முதல் 200 வரை 21 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் குறைந்தது 43 மாவட்டங்களில் 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன .
அதிக நேர்மறை வீதம்
ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் உள்ளிட்ட ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளுக்கு சோதனைகளை அதிகரித்துள்ளதாக மாநில அரசு கூறினாலும், கொரோனா தொற்று நேர்மறை விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. தற்போதைய நேர்மறை விகிதம் 14 சதவீதத்திற்கு அருகில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், மாநில ஆய்வகங்கள் ஒவ்வொரு நாளும் 1.30 முதல் 1.50 லட்சம் மாதிரிகள் சோதனை செய்தபோது, நேர்மறை விகிதம் 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.