சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரியநேரத்தில் சமநீதி கிடைக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை, முதல்முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. 10 கொள்கைகள் கொண்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது.
அந்த 10 கொள்கைகளாவன
கொள்கை 1 : சாதாரண மக்களைப்போல, மாற்றுத்திறனாளிகளும் நீதிக்கு முன் சமம். அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதற்காக, அவர்களுக்கு நீதி எங்கேயும் எப்போதும் மறுக்கப்படக்கூடாது.
கொள்கை 2 : மாற்றுத்திறனாளிகளும் எவ்வித பாகுபாடும் இல்லாமல், நீதியை உரிய நேரத்தில் எவ்வித தடங்கலுமின்றி பெற வழிவகை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கொள்கை 3 : மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கென்று எவ்வித விதித்தளர்வும் இருக்கக்கூடாது.
கொள்கை 4 : சட்டப்பூர்வ வகையிலான விளக்கங்களை பெற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
கொள்கை 5 : சர்வதேச நீதிப்படி அனைவருக்கும் சமநீதி என்பதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். அவர்களுக்கு சமநீதி கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
கொள்கை 6 : மற்றவர்களைப்போல, மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான சட்ட உதவிகள் பெற வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கொள்கை 7 : மற்றவர்களைப்போ,, மாற்றுத்திறனாளிகளும், நீதி பரிபாலனை குறித்த அனைத்து நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
கொள்கை 8 : குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்களில் அநீதி இழைக்கப்படும்போது, அதுகுறித்து புகார் தரவும், புகார் மனு மீதான விசாரணை குறித்து அறியவும் மாற்த்திறனாளிகளுக்கு வசதி செய்துதரப்பட வேண்டும்.
கொள்கை 9 : வழக்கு பதியப்படின், அது செல்லும்விதம் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையை அவர்களே மேற்கொள்ள தேவையான வசதிகள் செய்துதரப்பட வேண்டும்.
கொள்கை 10 : மாற்றுத்திறனாளிகளுக்கு சமநீதி கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு, அதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சித்திட்டங்களை அவ்வப்போது நிகழ்த்தி அதுகுறித்த அறிவை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், நீண்டகாலமாக அவர்களால் பிசிகலாகவும், மனரீதியாகவும், இன்டெலச்சுவல் ஆகவும் அல்லது உணர்ச்சி குறைபாடு காரணமாகவும் அவர்களால் மற்றவர்களைப்போல, எல்லா வசதிகளும் பெற இயலாத நிலையில் உள்ளனர். இதனை கருத்தில்கொண்டு 2007ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் என்ற பெயரில் சட்டதிருத்தத்தை வரையறுத்தது. 21ம் நூற்றாண்டில், மிகப்பெரிய மனித உரிமை நடவடிக்கை இது என்று குறிப்பிட்டுள்ளது.
ஊனம் காரணமாக அவர்களுக்கு எவ்வித பாகுபாடு காட்டப்படுகிறது?
ஊனம் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பாகுபாடு காட்டப்படும் நிகழ்வு அவர்களை அழிவிற்கு அழைத்துச்செல்கிறது, மற்றவர்களுடன் அவர்களை விலக்கி வைக்கிறது, அவர்களை பல்வேறு நடவடிக்கைகளிலிருந்து தடுக்கிறது உள்ளிட்ட தடைக்கற்களை அவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது. அவர்களுக்கு என்று அங்கீகாரம் வழங்காதது, அவர்களது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை என அனைத்து தரப்பு மக்களும் பலன்பெறுவதிலிருந்து அவர்களை மட்டும் தடுக்கிறது. அவர்களை பொருளாதார, சமூக, கலாச்சார, குடியுரிமை என அனைத்து விதங்களிலும் அவர்களை கடுமையாக பாதிக்கிறது என்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களைப்போ, அனைத்து பலன்களையும் அனுபவிக்கும்பொருட்டு, அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், தேவையான மாற்றங்களை மேற்கொண்டு அவர்களுக்கு நியாயம் கிடைக்கும்வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. மேலும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் 2.4 சதவீதம் ஆண்கள், 2 சதவீதம் பெண்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். காதுகேட்காதவர்கள், வாய் பேசமுடியாதவர்கள், கண்பார்வை திறன் அற்றவர்கள், உறுப்புகளில் ஊனம் அடைந்தோர் உள்ளிட்டோர் இங்கு மாற்றுத்திறனாளிகளாக கருதப்படுகின்றனர்.
அமெரிக்காவில் 12.9 சதவீத ஆண்கள், 12.7 சதவீத பெண்கள்ல யுனைடெட் கிங்டமில், 22.7 சதவீதம் பெண்கள், 18.7 சதவீத ஆண்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil