உலகின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் கடந்த ஆண்டு இந்தியா உட்பட வளரும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்திய சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி பயன்படுத்துவது குறித்து அறிவிப்பதற்கு முன்பே டிசம்பர் மாத இறுதியில், சீரம் நிறுவனம் 200 மில்லியன் டோஸ்களை கையிருப்பில் வைத்திருந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், இரண்டு நம்பகமான தடுப்பூசிகளை வாங்குவதன் மூலம் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா முன்னெடுத்து வருகிறது. தடுப்பூசி போட ஆரம்பித்த 21 நாட்களில் 5 மில்லியனை எட்டியது என சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார்.
ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸ் கன்சல்டிங் எடிட்டர் கோமி கபூர் கூறுகையில் 1.4 பில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் 5 மல்லியன் என்பது கடலில் ஒரு துளி என்பதை பூஷண் கணக்கில் கொள்ள தவறிவிட்டார். சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என இரண்டு மாதங்கள் வீணானது. அவர்களில் பலர் தடுப்பூசி போடவில்லை. மத்திய அரசு அதன் விநியோக முறை மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கோவிட் பணிக்குழுவின் தலைவர் விகே பால் கூறினார். ஆனால் அடிப்படையாக கணக்கிட தவறிவிட்டார் என எழுதியுள்ளார்.
சீரம் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 60 முதல் 70 மில்லியன் டோஸஸ் வரையிலும், பாரத் பயோடெக் இந்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தையும் உற்பத்தி செய்கிறது.
மார்ச் மாதம் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது. இரண்டு உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களும் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரிசெய்யமுடியவில்லை. மருந்து உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்யவும் எந்தவிதமான ஊக்கமும் வழங்கப்படவில்லை. கோவாக்சின் IPR ஐ மற்ற இந்திய உற்பத்தியாளர்களுக்கும் வழங்கவில்லை. ஏப்ரல் மாதத்தில்தான் மத்திய அரசு இரண்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் போதுமான சலுகைகளை வழங்கியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நடவடிக்கையை முன்மாதிரியாக கொண்டு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே இதனை மத்திய அரசு செய்திருக்க வேண்டும்.
மேலும் ரூ.250க்கு தடுப்பூசியை வாங்கும்போது அதில் மருத்துவமனையின் பங்கு ரூ.100 ஆகும். மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன. இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை ஊக்குவிக்கவில்லை என பெண் தொழிலதிபர் கிரண் மஜும்தார் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்ற உண்மையை இறுதியாக தடுப்பூசி பணிக்குழு எழுப்பியது. ஆனால் சில மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனால் மத்திய அரசு மகிழ்ச்சி அடைந்தது.
18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டால் தட்டுப்பாடு ஏற்படும். இதை தொடரும் பட்சத்தில் இதற்கு எதிர்க்கட்சிகளும் பொறுப்பு என கூறலாம் என மத்திய அரசு நினைத்திருக்கலாம். வெளிநாடுகளில் இருந்து பல மாதங்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்காது என்ற உண்மையை அப்போது தான் மாநில அரசுகளுக்கு தெரிந்தது.
உள்நாட்டு தடுப்பூசிகளுக்கு சமமற்ற விலையை நிர்ணயிப்பதன் மூலம் மத்திய அரசு சூழ்நிலையை மோசமாக்கியுள்ளது. பேரம் பேசும்போது, தடுப்பூசியின் நேர்மறை தன்மை, சமமான மற்றும் நியாயமான விநியோகம் ஆபத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"