கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி பாதையை விட்டு விலகி சென்று இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டின் ஜனவரி- மார்ச் காலாண்டில் இருந்த 8.1 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, பிறகு ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ச்சியாக குறையத் தொடங்கின.சமீபத்தில் வெளியிட்ட 2019ம் ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார வளர்ச்சியின் சரிவு, இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் போட்டு வைத்த திட்டங்களை சீர்குலைத்துள்ளது. டிராக்டர் தயாரிப்பவர்கள் முதல் டூத் பேஸ்ட் துறைகளில் வரை உள்ள அத்துனை நிறுவனங்களும், கடந்த இரண்டு தசாப்தங்களாக 8 சதவீத வளர்ச்சி என்பதை மனதில் வைத்தே தங்கள் திட்டங்களை தீட்டிவந்தனர். வளர்ச்சி விகிதம் தற்போது பாதியான பிறகு கார்பரேட் கம்பெனிககள் செய்த முதலீடு, எடுக்கப்பட்ட கடன், கட்டமைக்கப்பட்ட தொழில் திறன் எல்லாம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 2018ம் ஆண்டு (கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாக) ஐ.எல் அண்ட் எஃப்எஸ் (IL&FS) நிறுவனம் சரிந்ததிலிருந்து தான் இந்தியா பொருளாதாரத்தின் அசாத்திய சூழலுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. அதன்பின் தொடர்ச்சியான நிகழ்வுகளால் இந்தியாவின் கிரெடிட் மார்க்கெட் சுருங்க ஆரம்பித்தது. இந்தியாவின் பினான்சியல் செக்டார் தனது விலும்பை நோக்கி நகர்ந்தது. சந்தையில் பணம் எளிதில் கிடைக்கவில்லை, கிடைத்தாலும் அதை பெறுவதற்கான அதிகப்படியான விலை, போன்ற இரண்டு பிரச்சனைகளை இந்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் நிவர்த்தி செய்ய முடியாமல் திகைத்தனர்.
ரெப்போ விகுதியை குறைக்க முனைப்போடு இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சி என்ற கருத்தோடு தனது யோசனைகளை சாய்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், அரசியல் கட்டாயத்துடன் தன்னை இணைத்தும் கொண்டது. இந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக ரெப்போ விகிதத்தைக் குறைத்தாலும், ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் லெண்டிங் ரேட்டைக் குறைக்கவைக்கும் நடவடிகைகளில் ஆர்பிஐ செயலற்றவைகளாக இருக்கின்றது . இருந்தாலும், வரும் டிசம்பர் 5 ஐ ஆர்பிஐ மானிட்டரி குழு சந்திக்கும் போது மீண்டும் ரெப்போ விகிதத்தை மீண்டும் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
கடந்த ஒன்பது மாதங்களில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தில் 135 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளன. ஆனால், வங்கிகள் தங்கள் லெண்டிங் ரேட்டை அதற்கேற்றார் போல் குறைக்கவில்லை. இதனால், 29 அடிப்படை புள்ளிகள் மட்டும் தான் (ஐந்தில் ஒரு பங்கு) வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக மாற்றப்பட்டிருக்கிறது.
அதிக தொகை கொடுத்து கடன் வாங்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால், கடன் கிடைக்கும் சூழ்நிலை அவர்களுக்கு இல்லை. இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக, சில ஆண்டுகளாகவே பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். மேலும் 2016ம் ஆண்டு பணமதிப்பீடு இழப்பு செயல்பாட்டுக்கு பிறகு, தொழில் நிறுவனங்கள் தங்கள் கடனுக்காக வங்கி சாரா நிதி நிறுவனங்களைத் (என்.பி.எஃப்.சி) தேட ஆரம்பித்தனர். இந்த வங்கி சாரா நிதி நிறுவனம் தனிநபர்களுக்கும், மற்ற சிறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியது. ஆனால் ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் நிறுவனம் சரிந்ததில் இருந்து ஒட்டுமொத்த என்.பி.எஃப்.சி-ன் செயல்பாடும் நொறுங்கியது. உதாரணமாக, 2017-18ம் ஆண்டில் என்.பி.எஃப்.சிக்கள் வங்கிகளிடம் இருந்து பெற்ற பணத்தின் அளவு 30% என்ற உச்சத்தில் இருந்து தற்போது ஒற்றை இலக்கங்களைக் குறைத்தது. இன்னும் சுருங்கச் சொன்னால் வங்கி சாரா நிதி நிறுவனம் சந்தைகளுக்கு பணம் கொடுப்பதையே நிறுத்திவிட்டனர்.
கார்ப்பரேட் இந்தியாவை இந்த பொருளாதார வீழ்ச்சி மூச்சுத் திணறடிக்கவில்லை, அரசாங்கத்தின் நிதிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி, நேரடி வரி வசூல் வளர்ச்சி விகுதத்தை 2019-20ம் ஆண்டிற்கு விரிவுபடுத்தி கணக்கீடு செய்யப்பட்டால், மத்திய அரசு 2.7 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறையை பார்த்திருக்கிறது. மாநிலங்களைப் பொறுத்தவரை, வரி பற்றாக்குறை ஒட்டுமொத்தமாக ரூ .1.7 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று கணக்கீடு செய்யப்படுகிறது. இதற்கிடையில், இந்த ஆண்டிற்கு திட்டமிட்ட நிதி பற்றாக்குறை விகிதம், கடந்த அக்டோபர் மாத இறுதியிலே 100 சதவீதத்தை மீறியிருக்கிறது.
பொருளாதார நிபுணர் ஒருவர் கூறுகையில், "செலவு செய்வதை அதிகரிப்பதினால் மட்டுமே இந்திய பொருளாதரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர முடியும்,ஏனெனில் முக்கிய பணவீக்கம் இன்னும் 2 சதவிகிதம் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றது," என்றார்.
தற்போது, வந்த இந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டு ஜிடிபி 4.5% வளர்ச்சிக்கு கூட, அரசு செலவீனங்களை அதிகமாய் செய்தது மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.3 சதவீத நிதி பற்றாக்குறை இலக்கை அடைய அரசாங்கம் நினைத்தால், அது செலவினங்களைக் குறைக்க வேண்டும், இது வளர்ச்சியை மேலும் பாதிக்க உதவும் என்று சிலர் வாதிடுகின்றனர். எனவே, பொருளாதார வளர்ச்சியை செலவீனங்ககள் மூலமாக வேகப்படுத்த நினைப்பது எளிதான காரியமாக இருக்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.