India had most deaths caused by pollution in 2017 : உலக அளவில் 15% மனித இறப்புகளுக்கு சுற்றுச்சூழல் மாசே காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 275 மில்லியன் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் சுற்றுச்சூழல் மாசால் 2.3 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
The 2019 Pollution and Health Metrics: Global, Regional and Country Analysis என்ற அறிக்கை Global Alliance on Health and Pollution (GAHP) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த அறிக்கையில் சுற்றுச்சூழல் மாசால் மனித இழப்புகள் தேசிய அளவிலும் உலக அளவிலும் அதிகரித்து வந்துள்ளது என்றும் அந்த அறிக்கை தகவல்கள் வெளியிட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/12/explained-1.jpg)
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
இந்த பட்டியலில் மிகப்பெரிய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது அதே நேரத்தில் வளர்ச்சியடையாத நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை தொடர்ந்து 1.8 மில்லியன் மக்கள் சீனாவில் உயிரிழக்கின்றனர். முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு மொத்தம் மூன்று பட்டியல்களை வெளியிட்டது. மூன்று பட்டியலிலும் இந்தியா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2019/12/explained-2.jpg)
மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஏற்றவாறு மக்களின் மரணங்கள் என்ற பட்டியல் மிகவும் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது. ஏன் என்றால் சாத் என்ற நாட்டில் 1 லட்சம் மக்களுக்கு 287 நபர்கள் உயிரிழக்கின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் 174 நபர்கள் உயிரிழக்கின்றனர். இந்த பட்டியலில் சாத் முதலிடத்திலும் இந்தியா 10வது இடத்திலும், அமெரிக்கா 131வது இடத்திலும் உள்ளது.
முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளில் காற்று மாசுபாடு காரணமாகவே அதிக நபர்கள் உயிரிழக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் மிகவும் முக்கியமான காரணியாக காற்று மாசுபாடு அமைந்துள்ளது.