ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு என்றால் என்ன ?
லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி மற்றும் பார்ட்னர்ஸால் தயாரிக்கப்படும் "ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு " உலகின் பாஸ்போர்ட்டுகள் சமந்தப்பட்ட குறியீடுகளில் மிகவும் நம்பகத்தன்மையாக கருதப்படுக்கிறது. இந்த குறியீடிற்குத் தேவைப்படும் டேட்டாக்களை உலகளவில் விமானங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை நிர்வகிக்கும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்திலிருந்து (ஐஏடிஏ) சேகரிக்கிறது. நாடுகளின் விசா கொள்கை மாறும்போதெல்லாம் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடும் புதுப்பிக்கப்படுகிறது. இந்த குறியீடு 227 நாட்டு இடங்களையும், 199 பாஸ்போர்ட்களையும் உள்ளடக்கியது.
இந்த குறியீட்டை எப்படி புரிந்து கொள்வது?
ஒவ்வொரு பாஸ்போர்ட்டிற்கும் மதிப்பெண் மற்றும் தரவரிசை உள்ளது. உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில், இந்திய பாஸ்போர்டின் மதிப்பெண் 58 ஆகும், இது பட்டியலில் 86 வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் தலா 189 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.
உதாரணமாக விசிட்டர் பெர்மிட், விசா-ஆன்-அரைவல் அல்லது மின்னணு பயண ஆணையம் (ETA) போன்ற விசா வகைகளைகளின் மூலம் அரசாங்க ஒப்புதல் பெறத் தேவையில்லமால் மற்ற எல்லா நாட்டிற்க்கு ஒரு விச ஹோல்டரால் பயணிக்க முடியும் என்றால் அந்த ஒவ்வொரு நாட்டு பயணத்திற்கும் 1 மதிப்பெண் கொடுக்கப்படும்.உதரணமாக, ஜப்பானின் குடிமகன் அந்த அரசாங்கத்தின் ஒப்புதல் பெறத் தேவையில்லமால் 189 நாடுகளுக்கு மேலே சொல்லப்பட்டுள விசா வகைகளின் மூலம் பயணம் செய்ய முடியும். அதனால் , ஜப்பானின் பாஸ்போர்ட் ஸ்கோர் 189- ஆக கருதப்படும்.
அதேவேளையில், அரசாங்க ஒப்புதல் பெற்றே மற்ற எல்லா நாட்டிற்க்கு ஒரு விசா ஹோல்டரால் ( இ.விசா, மற்றும் விசா ஆன் அரைவல் இவைகளையும் சேர்த்து) பயணிக்க முடியும் என்றால் அந்த ஒவ்வொரு நாட்டு பயணித்திருக்கும் 0 மதிப்பெண் மட்டும் கொடுக்கப்படும். உதாரணமாக, இந்தியாவின் ஒரு குடிமகன் மேலே சொன்ன விசா வகைகளை பயன்படுத்தி 58 நாடுகளுக்கு அரசாங்க அனுமதி பெறாமல் பயணிக்க முடியும். 131 நாடுகளுக்கு அரசின் அனுமதி பெற்றே செல்ல முடியும். ஆகவே, இந்தியாவின் மொத்த மதிப்பெண் 58-க உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/passport-300x200.jpg)
இதில் என்ன வேடிக்கை என்றால் 13 வருடத்திற்கு முன்பு சராசரியாக உலகில் ஒருவர் சராசரியாக 58 நாடுகளுக்கு அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் செல்ல முடியும். இன்று, ஒருவர் சராசரியாக 107 நாடுகளுக்கு அரசாங்க அனுமதி இல்லாமல் பயணிக்க முடியும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/indiapassportrankinge-300x200.jpg)
ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டை மதிப்பெண் 25 ஆகவும் தரவரிசையில் 109 இடத்தில் இருக்கிறது . சிரியா மற்றும் பாகிஸ்தான் 29 மற்றும் 30 மதிப்பெண்களையும் பெற்றி முறையே 107 மற்றும் 106 வது தரவரிசைகள் இடத்தில் இருகின்றன.
இந்த பாஸ்போர்ட் தரவரிசையில் முன்னேறுவது, பின்னேருவது நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் வலிமையை சுட்டிக்காட்டுகிறது. கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட இருதரப்பு விசா-தள்ளுபடி திட்டங்கள் விளைவாக இன்று பயண சுதந்திரம் பெருமளவில் விரிவடைந்துள்ளது என்றே கூறலாம்.
இது போன்று வேறு பாஸ்போர்ட் குறியீடுகள் உள்ளதா?
பாஸ்போர்ட் தரவரிசையில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு போன்று ஆர்டன் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பிரசித்துப் பெற்ற ஒன்றாகும். இது தனது சமீபத்திய தரவரிசைப்படி ஐக்கிய அரபு அமீரகத்தை 1 வது இடத்தில் வைத்திருக்கிறது. இந்த குறியீட்டின்படி, இந்தியாவுக்கு 67 மொபிலிட்டி மதிப்பெண் (எம்.எஸ்) உள்ளது. இந்திய பாஸ்போர்ட் ஹோல்டர் ஒருவருக்கு 131 இடங்களுக்கு விசா தேவைப்படுகிறது, 41 இடங்களுக்கு விசா ஆன் அரைவல் தேவைப்படுகிறது, மேலும், 26 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க கூடிய சூழ்நிலையும் உள்ளது .