இந்தியாவும், ஈரானும் நட்பு நாடு ஆகும். இருநாடுகளும் வரலாற்று ரீதியாகவும், மக்களின் நாகரீக பிணைப்புகள் உள்ளிட்டவைகளில் ஒத்துள்ள நிலையில், எரிசக்தி விநியோகம் மற்றும் மண்டல பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மிகுந்த பிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் தெற்காசிய கல்விமையத்தின் இயக்குனரும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சர்வதேச விவகாரங்கள் துறை ஊடகவியலாளருமான சி ராஜா மோகன் எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஈரான் – டெல்லி இடையேயான உறவில் எவ்வித மாற்றமும் ஏற்பட இயலாது. அதுமட்டுமல்லாது, இந்தியா, ஈரானை ஒட்டியுள்ள அரபு நாடுகளுக்கிடையே மிக ஆழமான நட்பு கொண்டுள்ளது.
அரபு நாடுகளிலிருந்து, இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்துவருவதால், அந்நாடுகளிடையே இந்தியா பகைமையை வளர்த்துக்கொள்ள இயலாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல லட்சக்கணக்கான இந்தியர்கள் அரபு நாடுகள் குடியேறியுள்ளனர். ஏனெனில் அங்கு கரன்சி மதிப்பு அதிகமாக இருப்பதால், பலரும் அந்நாடுகளுக்கு செல்லவே அதிகம் விரும்புகின்றனர்.இதுமட்டுமல்லாது இந்தியா அந்த நாடுகளுடன் பல்வேற வர்த்தக உறவுகளை பேணிக்காத்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா நாடுகளில் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு இந்தியா நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – ஈரான் உடன் பல்வேறு துறைகளில் நல்லுறவு கொண்டுள்ளபோதிலும் அமெரிக்காவின் அனுமதி கிடைக்காததால் ரயில்வே துறையில் இந்தியா உடனான ஒத்துழைப்பை ஈரான் இழந்திருந்தது. ஆனால் மற்ற துறைகளில் இவ்விரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை, அமெரிக்காவில் தடுக்க இயலவில்லை. ஈரான், பீஜிங் உடன் வர்த்தக உறவு கொண்டிருப்பதாலேயே, அமெரிக்கா ஈரான் மீது தடைவிதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
இந்தியா இந்த விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும்?
ஈரானில் மதகுரு ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சிகள் வரும் நிலையிலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளினாலும், அங்கு வர்த்தகம் செய்ய, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு கடினமான நிலையே நிலவிவருகிறது.
ஈரான் இக்கட்டான நிலையில் உள்ள நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது தான் என்றாலும், இந்தியா, அதன் உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக்குள் அதனுடனான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், அரபு நாடுகள் இந்தியா உடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.
இதன்மூலம், அரபு நாடுகளிடையேயான இந்தியாவின் பொருளாதார நல்லுறவு, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறவேண்டும். ஈரான் உடனான ரயில்வே ஒப்பந்தத்தை இந்தியா இழந்துள்ள நிலையில், அரபு நாடுகளுடனான நல்லுறவில் இந்தியா பல்வேறு மேலும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ராஜா மோகன் அந்த தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil