Advertisment

Explained: இந்தியா - இஸ்ரேல் உறவுகள்

இந்தியா - இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியா, இஸ்ரேல், பாலஸ்தீனத்துடனான உறவுகளுக்கு இடையே எச்சரிக்கையுடன் செயல்படுவதன் மூலம் உறவு எப்படி உருவாகியுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Israel relationship, PM Modi, Israeli PM Benjamin Netanyahu, இந்தியா இஸ்ரேல் உறவுகள், இந்தியா, இஸ்ரேல், பிரதமர் மோடி, பெஞ்சமின் நேதன்யாகு, china, America, Palestine

இந்தியா - இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியா, இஸ்ரேல், பாலஸ்தீனத்துடனான உறவுகளுக்கு இடையே எச்சரிக்கையுடன் செயல்படுவதன் மூலம் உறவு எப்படி உருவாகியுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

ஜனவரி 30ம் தேதி இந்தியா - இஸ்ரேல் முழு தூதரக உறவு 30 ஆண்டு நிறவைக் கொண்டாடியது. இஸ்ரேல் தனது தூதரகத்தை பிப்ரவரி 1, 1992 அன்று டெல்லியில் திறந்தது. டெல் அவிவில் இந்திய தூதரகம் அதே ஆண்டு மே 15ம் தேதி திறக்கப்பட்டது. இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ-வால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு மென்பொருளான பெகாசஸ் மீதான விவகாரம் கவனத்தை ஈர்க்கும் நேரத்தில் , இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்த ஆண்டுவிழா வருகிறது. இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு முகமையின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அரசாங்கங்களுக்குப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை விற்பனை செய்வதாக நிறுவனம் கூறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் 2017 இஸ்ரேல் பயணத்தின் போது இந்தியா வாங்கிய அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை உபகரணங்களின் தொகுப்பின் "மையம்" பெகாசஸ் மற்றும் ஏவுகணை அமைப்பு என்று இந்த வார தொடக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இந்தியக் குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கண்காணிப்புத் தொழில்நுட்பத்திற்கான ரகசிய ஒப்பந்தம் குறித்த நியூயார்க் டைம்ஸ் செய்தி இந்த ஆண்டு விழாவில் அதிர்ச்சியாக வெளிப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெஞ்சமின் நெதன்யாகுவுக்குப் பின் வந்த பிரதமர் நஃப்தலி பென்னட் அல்லது பிரதமர் மோடி ஜனவரி 30ம் தேதி ஆண்டுவிழா நிறைவு வாழ்த்துச் செய்திகளைப் பறிமாறிக்கொள்ள அனுமதிக்கவில்லை.

பென்னட், “30 ஆண்டுகால அற்புதமான கூட்டுறவு, ஆழமான கலாச்சார தொடர்பு மற்றும் பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு” என்ற தலைப்பில் இந்திய மக்கள் அனைவருக்கும் உரையாற்றினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான முடிவற்ற வாய்ப்புகளை விவரித்தார். உறவை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய இலக்குகளை நிர்ணயிப்பது குறித்து பேசிய மோடி, இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பாகுபாடு இல்லாமல் வாழ்ந்து வந்த யூத சமூகத்தினரைக் குறிப்பிட்டார்.

கண்காணிப்பின் கீழ்

2017ம் ஆண்டில் மோடியின் புகழ்பெற்ற வருகை ஒரு இந்தியப் பிரதமரின் முதல் வருகையாகும். மேலும், கால் நூற்றாண்டுக்கும் மேலாக கண்காணிப்பின் கீழ் வளர்ந்த உறவின் முழு உரிமையையும் அவர் எடுத்துக் கொண்டார்.

1950-ம் ஆண்டிலேயே இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்திருந்தது. ஆனால், இயல்புநிலைக்கு செல்ல நாற்பது ஆண்டுகள் ஆனது. முதல் வளைகுடா போரை அடுத்து, மேற்கு ஆசியாவில் சமன்பாடுகள் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகின. குவைத் மீதான ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பி.எல்.ஓ-வின் ஆதரவு அளித்த பாலஸ்தீனத்தின் காரணமாக அரபு ஆதரவு பலவீனமடையத் தொடங்கியது. பின்னர், சோவியத் யூனியனின் பிரிவு வந்தது. அதுவரை ராணுவ தளவாடங்களுக்கு இந்தியா செல்ல வேண்டிய நாடாக இருந்தது.

1992 முதல், பாதுகாப்பு ஒப்பந்தங்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்தில் ஒத்துழைப்பு இருந்தபோது, ​​​​பாலஸ்தீனியத்திற்கான அதன் வரலாற்று ஆதரவு, எண்ணெய்க்காக அரபு உலகத்தை நம்பியிருந்ததாலும், முஸ்லீம் மக்கள் நாடுகளின் பாலஸ்தீன ஆதரவு உணர்வுகள் இதை சமநிலைப்படுத்தியதால், இஸ்ரேலுடனான உறவுகளைப் பற்றி இந்தியா மெத்தனமாக இருந்தது.

ஆனால், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA-1) பதவியேற்றபோதுதான் முதல் உயர்மட்டப் பயணங்கள் நடந்தன. 2000-ம் ஆண்டில், எல்.கே. அத்வானி இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்திய அமைச்சர் ஆவார். அதே ஆண்டு, வெளியுறவு அமைச்சராக ஜஸ்வந்த் சிங் வருகை தந்தார். அந்த ஆண்டு, இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தை அமைத்தன. மேலும், 2003-ம் ஆண்டில், ஏரியல் ஷரோன் இந்தியாவிற்கு வருகை தந்த முதல் இஸ்ரேலிய பிரதமர் ஆவார்.

முந்தைய பிரதமர்களைப் போலல்லாமல், மோடி இஸ்ரேலைக் கவர்ந்திழுக்கச் சென்றார். அதன் பயங்கரவாத எதிரிகளுக்கு எந்த கருணையும் காட்டாத நாடான இஸ்ரேலுடன் இந்துத்துவாவின் இயல்பான உறவுடன் செயல்பட்டார். 2020 ஆபிரகாமிக் உடன்படிக்கைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான், மொராக்கோ ஆகியவை இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதைக் கண்ட, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் சொந்த உறவுகளை புதிதாக வலுப்படுத்தியதன் மூலம், புதுடெல்லி இப்போது மேற்கு ஆசியாவில் அதன் முக்கிய உறவுகளில் வேறு எந்த காலத்தையும்விட அதிக நம்பிக்கையுடன் உள்ளது.

இந்தியா-இஸ்ரேல் சேர்க்கை ஒரு காலத்தில் பாலஸ்தீனியத்திற்கான புது டெல்லியின் தெளிவான ஆதரவு மெல்ல கரைந்துவிட்டாலும் பாலஸ்தீனத்துடனான அதன் வரலாற்று உறவுகளுக்கும் இஸ்ரேல் மீதான அதன் புதிய அன்புக்கும் இடையில் இந்தியா தொடர்ந்து ஒரு எச்சரிக்கையாக செயல்பட்டு

கடந்த ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீன வன்முறை தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இதற்கான அறிகுறி வந்தது. அந்த அறிக்கை கிட்டத்தட்ட வன்முறைக்கு இஸ்ரேலையே பொறுப்பாக்கியது. மேலும் நியாயமான பாலஸ்தீன பாதிப்புக்கு இந்தியாவின் வலுவான ஆதரவையும், இரு நாடுகளின் தீர்வுக்கான உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்தியது.

முன்னதாக, பாலஸ்தீனத்துடனான உறவு கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் நம்பிக்கை ஷரத்தாக இருந்தது. பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை இந்தியா ஆதரித்தது. பாலஸ்தீன மக்களின் ஏக பிரதிநிதியாக பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ, அதன் தலைவர் யாசர் அராபத்தின் பின்னால் அணிதிரண்டது.

1975-ம் ஆண்டில், டெல்லியில் அலுவலகத்தைத் திறக்க பி.எல்.ஓ-வை இந்தியா அழைத்தது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு ராஜதந்திர அந்தஸ்து வழங்கப்பட்டது. 1988-ல், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீனத்தின் சுதந்திர நாடாக பி.எல்.ஓ அறிவித்தபோது, ​​இந்தியா உடனடியாக அங்கீகாரம் வழங்கியது. அராஃபத் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் அரச தலைவராக வரவேற்கப்பட்டார்.

டெல் அவிவில் இந்தியா ஒரு தூதரகப் பணியைத் திறந்தபோதும், அது காசாவில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை அமைத்தது. பின்னர், பாலஸ்தீனிய இயக்கம் ஹமாஸுக்கும் (காசாவின் கட்டுப்பாட்டைப் பெற்றது) மற்றும் பி.எல்.ஓ-விற்கும் இடையே பிளவுபட்டதால் ரமல்லாவுக்கு மாற்றப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) 10 ஆண்டு கால ஆட்சியின்போது, ​​மேற்குக் கரையை நிர்வகிக்கும் பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவரான மஹ்மூத் அப்பாஸ் 2005, 2008, 2010, 2012 ஆண்டுகளில் நான்கு முறை விஜயம் செய்தார்.

இந்தியா 2011-ல் யுனெஸ்கோவின் முழு உறுப்பினராக பாலஸ்தீனத்திற்கு வாக்களித்தது. மேலும், ஒரு வருடம் கழித்து, ஐ.நா பொதுச் சபையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது. இது பாலஸ்தீனம் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக மாறியது.

மோடி ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, செப்டம்பர் 2015-ல் ஐ.நா வளாகத்தில் பாலஸ்தீனக் கொடியை நிறுவுவதற்கு இந்தியாவும் ஆதரவளித்தது.

கொள்கையில் மாற்றம்

இந்தியாவின் கொள்கையில் முதல் பெரிய மாற்றம் 2017-ல் மஹ்மூத் அப்பாஸின் வருகையின் போது ஏற்பட்டது. இந்தியா ஒரு அறிக்கையில் கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனிய அரசின் தலைநகராக ஆதரிப்பதற்கான வழக்கமான விஷயத்தைக் கைவிட்டது. மோடி இஸ்ரேலுக்குச் சென்றபோது, ​​வருகை தரும் பிற முக்கியஸ்தர்களின் வழக்கமான இடமாக இருந்த ரமல்லா அவரது பயணத் திட்டத்தில் இடம்பெறவில்லை.

ஆனால், சமநிலைச் செயல் தொடர்ந்தது. 2018 பிப்ரவரியில் ரமல்லாவுக்கு தனி விஜயம் செய்த மோடி, சுதந்திர பாலஸ்தீன தேசத்திற்கு அழைப்பு விடுத்தார். 2017 டிசம்பரில் யுனெஸ்கோவில் வாக்களிக்காமல் இருந்தபோதும், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக டிரம்ப் நிர்வாகம் அங்கீகரித்ததை எதிர்த்து பொதுச் சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. முன்னதாக 2021-ல் ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 46வது அமர்வில், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையில் - இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா மூன்று தீர்மானங்களில் வாக்களித்தது; இஸ்ரேலிய தீர்வு கொள்கை; மற்றும் கோலன் குன்றுகளில் மனித உரிமைகள் நிலைமை குறித்தும் கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனத்தின் மனித உரிமைகள் நிலைமை குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையைக் கேட்ட நான்காவது நாளில் இந்தியா வாக்களிக்கவில்லை.

பிப்ரவரி, 2021-ல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்குக் கரை மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீனியப் பிரதேசத்தில் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான அதிகார வரம்பைக் கோரியது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றும் ஹமாஸ் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாகக் குறிப்பிட்டது. ஐசிசியை அங்கீகரிக்காத இந்தியா, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நெதன்யாகு விரும்பினார். இந்தியா வராததால் ஆச்சரியப்பட்டார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய அறிக்கை இஸ்ரேலுக்கு மற்றொரு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், மேற்கு ஆசியாவின் வேகமாக மாறிவரும் புவிசார் அரசியலுக்கு எதிராக இரு நாடுகளும் நீண்ட கால நலன்களை எடைபோடுவதால் அது உறவைப் பாதிக்கவில்லை. பெகாசஸ் விவகாரமும் இதேபோல் இருதரப்பு உறவுகளில் எந்த பெரிய தாக்கமும் இல்லாமல் வீசும் என்று இரு நாடுகளும் நம்புகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi India Israel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment