இந்திய காவல்துறை குறித்து இந்திய ஜெஸ்டிஸ் ரிப்போர்ட் என்ன கூறுகிறது?

பட்டியல் 4-ல் பெண்களின் 33% இடத்தினை பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

India Justice Report : இந்தியா ஜஸ்டிஸ் ரிபோர்ட் என்ற அறிக்கை கடந்தவாரம் வெளியிடப்பட்டது. டாட்டா அறக்கட்டளை நிறுவனம் மத்திய சமூக நீதி, காமன்வெல்த், மனித உரிமை, DAKSH, TISS-Prayas மற்றும் லீகல் பாலிசிகளுக்கான விதி மையம் ஆகிய அமைப்புடன் இணைந்து வெளியிட்ட அறிக்கை இதுவாகும். இந்திய நீதித்துறையின் நான்கு தூண்களாக காவல், சிறை, நீதி மற்றும் லீகல் எய்டை அறிவித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

India Justice Report

22 மாநிலங்களில் ஒரே ஒரு மாநிலம் மட்டுமே காவல்துறையை சிறந்த முறையில் பயன்படுத்தி வருகிறது என்றும் மேலும் பல்வேறு மாநிலங்களில் காவல்துறையின் பற்றாக்குறை நிலவி வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 33 மாநிலங்களில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளுக்கான தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளது. காவல் துறைக்காக ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரித்து வருவதை அந்த தரவு முடிவுகள் வெளிப்படுத்துகிறது.

கீழே காட்டப்பட்டிருக்கும் பட்டியலில் 18 பெரிய மற்றும் மத்திய தர அளவு கொண்ட மாநிலங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இங்கு தான் இந்தியாவின் 90% மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 2015-2016 ஆண்டில் காவல்துறையினர் விகிதாச்சாரத்தை கணக்கிடுகிறது இந்த பட்டியல். மேலும் 20% மேல் சராசரியாக காலியிடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

India Justice Report

மேலே காட்டப்பட்டிருக்கும் பட்டியல் 1, 2, மற்றும் 3-ல் மிகப்பெரிய மாநிலங்களில் பணியில் இருக்கும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி கேட்டகிரி காவல்துறையினரின் எண்ணிக்கையை காட்டுகிறது.  2009ம் ஆண்டு காவல்துறையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் 7% பெண் காவலர்கள் என்ற மதிப்பினை எட்ட முடிந்தது.  பட்டியல் 4-ல் பெண்களின் 33% இடத்தினை பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

To read this article in English

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close