Advertisment

புலம்பெயர் தொழிலாளர்களின் தேவையை நாம் எப்படி தெரிந்து கொள்வது?

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய கணக்கெடுப்பு ஆணையம் வைத்திருக்கும் பெரும்பாலான தகவல்கள் ‘மூலோபாயமாக’ கருதப்படுகின்றன. அவை பொதுமக்களுக்கு அதிகம் கிடைக்காது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புலம்பெயர் தொழிலாளர்களின் தேவையை நாம் எப்படி தெரிந்து கொள்வது?

திறந்த தரவுத்தளமான இந்தியா அப்சர்வேட்டரி, ஜி.ஐ.எஸ் தொழில் நுட்பத்தோடு இயங்கக்கூடிய டாஷ்போர்டை உருவாக்கியுள்ளது. இதன்மூலம்,வெறும் கால்களால் பயணம் செய்யும் ஒரு புலம்பெயர் தொழிலாளியின் ஒருங்கிணைந்த தகவல்கள் அனைத்தும் இந்திய வரைபடத்தில் காட்டப்படுகிறது ( கிட்டத்தட்ட கூகுள் வரைபடம் போன்று).

Advertisment

ஃபவுண்டேஷன் ஃபார் எக்கோலஜிகல் செக்யூரிட்டி (எஃப்இஎஸ்), என்ற அமைப்பு இந்த தளத்தின் மையப் புள்ளியாக செயல்பட்டு வருகிறது. கிராமங்களில் செயல்படும் வரும் 55 தன்னார்வ அமைப்புகளிடமிருந்து  பெறப்பட்டு தரவுகள் அடிப்படையில் டாஷ்போர்டு அப்ட்டே செய்யப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் நடை பயணம் பற்றிய தகவல்கள் துல்லியமாக புதுபிக்கப்படுவதால், உதவி செய்ய முன்வரும் உள்ளூர் சமூகநல அமைப்புகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக அமையும் என்று எஃப்இஎஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜகதீஷ் ராவ் கூறினார்.

சூழலியல் துறையில் கிடைத்த அனுபவங்கள் 

தலைமை நிர்வாக அதிகாரி ஜகதீஷ் ராவ் இதுகுறித்து கூறுகையில், "இந்தியா அப்சர்வேட்டரி, 2019 டிசம்பரில் அமைக்கப்பட்டது. காடுகள், நீர்நிலைகள், காட்டுயிர் பாதுகாத்தல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் நுட்பமான முறையில் ஆய்வு செய்வதில் எஃப்இஎஸ் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா முழுவதுமுள்ள இயற்கை வாழ்விடங்களை கண்காணிக்கும் திறனை நாங்கள் பெற ஆரம்பித்தோம். 1,800க்கும் அதிகமான பண்பளவுகளை மதிப்பீடு செய்வதற்கான தரவுகள் எங்களிடம் இருந்தன. ஆனால், கொரோனா அவசர காலத்தில் மக்களின் நடமாட்டத்தை பிரதிபலிக்கும் வகையும் தளத்தை மாற்றமுடிவு செய்தோம். ​​நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் எங்களுக்கு உதவ முன்வந்தனர்.  நிர்வாக வசதிகள் , தன்னார்வ அமைப்புகளின் நிவாரண உதவிகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்தோம். நீண்ட தூரம் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் உணவு, நிதி உதவி, மருத்துவ பராமரிப்பு போன்ற தரவுகளை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டன. இதன்மூலம், இந்தியாவின் வரைபடத்தில் நீங்கள் எங்கு கிளிக் செய்தாலும், அங்கு தற்போது பயணிக்கும் நபர்கள் யார், அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன, நிர்வாக வசதிகள் எந்த அளவில் உள்ளது போன்ற தகவல்களை பெறலாம் " என்று தெரிவித்தார்.

ஜார்கண்ட், கேரள போன்ற மாநில அரசுகள் தளத்திற்குத் தேவைப்படும் தரவுகளைப் பகிர்ந்து கொண்டன. ஏப்ரல் 15 அன்று, இந்தியாவின் சுற்றுச்சூழல் வெப் என்பதில் இருந்து  புலம்பெயர் தொழிலாளர்களின் வரைபடமாக செயல்பட்டது. அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை, லிப்டெக், ஐ.ஐ.ஐ.டி பெங்களூரு, பி.எச்.ஐ.ஏ அறக்கட்டளை, ஸ்ட்ராண்டட் வொர்க்கர்ஸ் ஆக்சன் நெட்வொர்க்கின் தன்னார்வலர்கள், புத்துயிர் அளிக்கும் மழைக்காடு வேளாண்மை அமைப்பு (ஆர்.ஆர்.ஏ) ஆகியோர்  எங்களின் முயற்சிக்கு உதவின .சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து பெறப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வரைபடத்தோடு இணைக்கப்பட்டது.

அதிகபட்சமாக என்ன தெரிந்து கொள்ளலாம்:

புலம்பெயர்ந்தோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் இருப்பிடம், அவர்களின் குறிப்பிட்ட தேவைகள், பயணிக்கும் வழியில் ஓய்வு மையமாக செயல்படக்கூடிய கட்டமைப்பு வசதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (அ) சிவில் சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிவாரண உதவிகள் போன்ற நான்கு முக்கிய கூறுகளை நாங்கள் ஒன்றிணைக்க முயல்கிறோம்.

publive-image

இது போன்ற நெருக்கடி நேரத்தில், கிராமப்புறங்களில் செயல்படும் திறமையான சிறிய குழுக்கள் ஒரு மிகப்பெரிய பேரழிவைத் தணிக்க உதவக்கூடும். திறந்த தரவுகளின் முக்கியத்துவத்தை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ராவ் வலியுறுத்துகிறார்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் இந்தியா அப்சர்வேட்டரி தொடங்கப்படும் போது ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் புவியியல் அமைவிடத் தரவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்த வகையான தரவுகள்

சிவில் சமூக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் உட்பட அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய கணக்கெடுப்பு ஆணையம் வைத்திருக்கும் பெரும்பாலான தகவல்கள் ‘மூலோபாயமாக’ கருதப்படுகின்றன, மேலும் அவை பொதுமக்களுக்கு அதிகம் கிடைக்காது என்றும் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment