ஐநா பொதுச் சபையில் கடந்த காலங்களில் காஷ்மீர் எவ்வாறு ஒலித்தது - முழு ஆய்வு

 இந்த ஐக்கிய நாடுகள் அவை பொதுச் சபை காஷ்மீர் பற்றிய மோதல்களும், உணர்வுகளும் உலக மக்களுக்கு எடுத்துறைக்கும் ஒரு தளமாக மாறிவருகிறது என்றால் அது மிகையாகது. 

வரும் செப்டம்பர் 27-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாடிய சில மணி நேரங்களிலே பாகிஸ்தான் பிரதமர் இமரன் கானும் ஐக்கிய நாடுகள் அவை( ஐநா) பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

இந்த ஐக்கிய நாடு பொதுச் சபையில் காஷ்மீர் பற்றிய மோதல்களும், உணர்வுகளும் உலக மக்களுக்கு எடுத்துறைக்கும் ஒரு தளமாக மாறிவருகிறது என்றால் அது மிகையாகது.

2014- ல் மோடி  இந்தியாவின் பிரதமாராக பதிவி ஏற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உட்பட்ட அனைத்து தெற்காசிய தலைவர்களையும் அழைத்தபோது, காஷ்மீர் பிரச்சனை ஒரு சுமூகமான சூழல் எட்டப்படும் என்று அனைவர் மனதிலும் ஒரு நம்பிக்கை பிறந்தது. மேலும், அதன் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் அவை( ஐநா) பொதுச் சபைக் கூடத்தில் இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதால், இந்திய 2014-ம் ஆண்டு ஆகஸ்டில் நடக்க விருந்த வெளியுறவு அதிகாரி பேச்சுவார்த்தையை நிறுத்தம் செய்தது.

மேலும்,  ஐக்கிய நாடுகள் அவை( ஐநா) பொதுச் சபைக் கூடத்தில் இரு தலைவர்களும் காஷ்மீரை மையமாக வைத்து பேசிய பேச்சு இவர்களுக்குள் மேலும் தூரத்தை அதிகரித்தது. சந்திக்காமலே சென்று விட்டனர்.

2014-ல் இந்திய- பாகிஸ்தான் பொதுச் சபையில் என்ன பேசினார்கள்:

நரேந்திர மோடி : அண்டை நாட்டு உறவை நாங்கள் மதிக்கின்றோம்

“இந்திய எப்போதும் அண்டை நாடுகளின் உறவை மதிக்கும் நாடாகவே இருந்து உள்ளது, இருந்து வருகிறது. பாகிஸ்தானோடு அமைதியான சூழலில், அமைதிக்காக பேச்சு வார்த்தை நடத்த இந்தியா எப்போதும் விரும்பிகிறது. இதற்கு, பாகிஸ்தான் நாடும் ஒத்துழைக்க வேண்டும். அமைதியான சூழலை உருவாக்க அவர்கள் முன் வர வேண்டும் . இருக்கும் சிக்கல்களை நாம் இருவரும் கூடி பேசினால்தான் பிரச்சனை சரியாகுமே தவிர, உலக அரங்கில் கொண்டு செல்வது முட்டாள் தனமானது” என்று மோடி தனது உரையில் கூறியிருந்தார்.

நவாஸ் ஷெரிப்: காஷ்மீர் விஷயங்களை முகமூடி போர்த்தி மறைக்காதிர்கள்

பல சகாப்தங்களாகவே இந்திய ராணுவப் படையின் அத்து மீறல்களால் காஷ்மீர் மக்கள், அதிலும் குறிப்பாக காஷ்மீர் பெண்கள் சொல்லனாத் துரங்களை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

பல வருடங்களாகவே  காஷ்மீர் பற்றியத் தீர்வுகள் ஐ.நா அமைப்பின் அடிப்படை சிந்தாந்த ரீதியிலும், லாகூர் ஒப்பந்தம் மூலமாகவும் எடுக்கப் பட்டுவந்தன. காஷ்மீரின் அடிப்படை சிக்கல்களை களையும் பொறுப்பு சர்வேதச சமூகத்திடம் உள்ளது. அந்த தீர்வு வரும் வரை நங்கள் முக்காடு போட்டு கண்டும் காணாததுமாய் இருக்க முடியாது, என்று தனது உரையை முடித்தார் நவாஸ் ஷெரிப்

2015

சுஷ்மா சுவராஜ் : “பயங்கரவாதத்தை விடுத்து- உட்கார்ந்து பேச தயாராகுங்கள்”

அந்த வருடம் , இந்தியாவில் அடுத்தடுத்த பயன்கரவாத தாக்குதல்கள் அரங்கேறின. உதாரணமாக, ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் உள்ள ராஜ்பாக் காவல் நிலையம், சம்பா அருகேயுள்ள  மகேஸ்வர் இராணுவ முகாம் , பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தினநகர் காவல் நிலையம் போன்ற இடங்களில் அடுத்தடுத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன.

இந்த சூழ்நிலையில் நடந்த ஐ.நா பொதுச் சபை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்தக் கூடத்தில் முதலில் பேசிய நவாஸ் ஷெரிப் இந்தியாவுடனான நட்புறவிற்கு தனது ” நான்கு அம்ச அமைதி முயற்சி”  பற்றி எடுத்துரைத்தார்.

இதற்குப் பிறகு பேசிய சுஷ்மா சுவராஜ் ” நான்கு அம்சம் ” எதுவும் தேவை இல்லை. சிக்கலை தீர்க்க ஒரே ஒரு அம்சம் தான் உள்ளது . பயங்கர வாதத்தை கை விடுத்து, வந்து உட்கார்ந்து பேசுங்கள். தீவரவாதமும், நட்பும் ஒரே நேரத்தில் பயணிக்காது என்று அழுத்தமாக கூறினார்.

நவாஸ் ஷெரிப்:காஷ்மீர் பிரச்சனையில் ஐநா முளிமியாயாக தோற்றுவிட்டது.

1947- ல் இருந்தே காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் இன்னும் நடைமுறைப் படுத்தபடாமல் உள்ளது வேதையான செயல்.  மூன்று தலைமுறையாக காஷ்மீர் மக்கள் அவநம்பிக்கையாலும், அடக்குமுறையாலும் அவதிப்படுகின்றனர். இந்த போராட்டதிற்காக 1,00000 அதிகமானோர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். காஷ்மீர் பிரச்சனையில் ஐநா முளிமியாயாக தோற்றுவிட்டது. எல்லையை அத்துமீறி தாக்குதல் நடத்தும்  இந்திய அரசின் செயல் வன்மமுறையன்றி, வேறென்ன? என்று ஷெரிப் தனது உரையை முடித்தார்.

2016:  (முதலில் நவாஸ் ஷெரிப் , பிறகு சுஷ்மா சுவராஜ்  )

பதான்கோட்  தாக்குதல் மற்றும்  யூரி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற ஆண்டு.

ஹிஸ்புல் தளபதி புர்ஹான் வாணி கொள்ளபட்டதை மிகவும் ஆவேசமாக பேசிய நவாஸ் ஷெரிப்க்கு பதில் சொல்வதாய் சுஷ்மாவின் பேச்சு இருந்தது

சுஷ்மா சுவராஜ்:   இன்று நமக்குள்ளே, ஒரு நாடு தீவிரவாதி மொழியில் நம்பிக்கை கொள்கிறது, தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது, வளர்க்கிறது,ஏன்…. பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. இந்தியாவில் மனித உரிமை மீறப்படுகிறது  என்று சொல்வதற்கு முன், முதலில் அவர்கள்  நாட்டு மக்களின்  மனித உரிமைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். பலோசிஸ்தான் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்று சொல்லி சுஷ்மா தனது உரையை முடித்தார்.

நவாஸ் ஷெரிப்: புர்ஹான் வாணி காஷ்மீர் விடுதலையின் ஒரு வெளிப்பாடு. ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மக்களின் உணர்வால், கட்டியெழுப்பப் பட்ட  விடுதலை இயக்கத்தின் தலைவைர் தான் புர்ஹான் வாணி. இந்தியா, காஷ்மீரில் மக்களை அடிமைப்படுத்துகிறது, அடக்குகிறது. இதற்கான எல்லா சான்றுகளும்தன்னிடம் உள்ளதாகவும் , ஐ.நா அவையின் பொதுச் செயலாளரிடம் விரைவில் தரவிருப்பதாகவும் கூறி தனது உரையை முடித்தார்.

2017 :  (முதலில் ஷாஹித் ககான் அப்பாஸி ,பிறகு சுஷ்மா சுவராஜ்  )

குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டணையை எதிர்த்து இந்திய ஐ.நா நிதிமன்றதிற்கு சென்றது இந்த ஆண்டில் தான் .   

சுஷ்மா சுவராஜ்:  இதே மேடையில் எனக்கு முன்னாள் பேசிய பாகிஸ்தான் பிரதமர்  “இந்தய அரசு பயங்கவாதத்தை ஊக்குவிகிறது, பயங்கரவாதத்தை தத்தெடுத்து வளர்க்கிறது”  என்று சொல்வதன் மூலம் பேச கொடுத்த கால அவகாசத்தை வீணடித்து இருக்கிறார்.

இந்த இரு நாடுகளும் ஒரே நாளில் சில நேரங்கள் முன்ன பின்னதான் சுதந்திரம் அடைந்தோம். ஆனால் , இன்று இந்திய தொழில்நுட்பத் துறையில் வல்லமை பொருந்திய நாடக உள்ளது. ஆனால், நீங்கள் பயங்கரவாதத்தை ஏற்றுமதி  செய்துக் கொண்டிருக்கீர்கள். “நாங்கள் அறிஞர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்களை உருவாக்கினோம். நீங்கள் பயங்கரவாதிகளை உருவாக்கினீர்கள்” என்ற சுஷ்மா சுவரஜின் வார்த்தை இந்தியாவின்  அனைத்து  சமூக ஊடகங்களிலும் பிரபலமானது.

ஷாஹித் ககான் அப்பாஸி : ஐ. நா விசாரணை ஆணையத்தை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும்

காஷ்மீரில் இந்தியாவின் அத்துமீறல்களை கண்டறிய உலகளாவிய விசாரணி குழு காஷ்மீருக்கு அனுப்பப் பட வேண்டும். ஐ.நா பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையர் இவர்கள் மூலம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப் பெற்று காஷ்மீரில் நடக்கும் அத்துமீறலை ஒரு அறிக்கையாக இந்த உலகத்திற்கு சமர்பிக்க வேண்டும் . மேலும், காஷ்மீருக்கான ஐ.நா சிறப்பு தூதரை பொதுச் செயலாளர் உடனடியாக நியமித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அன்று நிறைவேற்றி, இன்னும் நடைமுறைப்படுத்த படாமல் இருக்கும் தீர்மானத்தை செயல்படுத்தவது குறித்த ஆய்வுகளை அவர் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி ஷாஹித் ககான் அப்பாஸி தனது உரையை முடித்தார்.

2018:  (முதலில் ஷா மெஹ்மூத் குரேஷி ,பிறகு சுஷ்மா சுவராஜ்  )

புது பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்ற ஆண்டு . ஒத்துக்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தையும் ரத்தானது

சுஷ்மா சுவராஜ்:  பேச்சு வார்த்தை எங்களால் நின்றது என்பது முற்றிலும் பொய். எந்த வகையான சிகளையும் பேச்சு வார்த்தையின் மூலம் சரி செய்யும் நினைக்கும் நாடு தான் இந்தியா. இந்த பேச்ச்வாத்தை தோல்விக்கு, பாகிஸ்தானின் வெளிபாடு தான் முதல் காரணம் என்று கூறி சுஷ்மா சுவராஜ் தனது உரையை முடித்தார்.

 ஷா மெஹ்மூத் குரேஷி: பெஷாவர் பள்ளித் தாக்குதல்  [2014 ], மஸ்துங் தாக்குதல் [ஜூலை 2018] என்னால் கனவிலும் மறக்க இயலாதது.  இந்த தாக்குதல், இந்தயாவிற்கு மிக பெரிய பங்கு உள்ளது. இந்தியாவில் நடந்த சம்ஜோட்டா எக்ஸ்பிரஸில் அப்பாவி பாகிஸ்தான் மக்கள் தான் பலியானார்கள். சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவிடம் இருந்து இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு ஏற்கனவே திரட்டியுள்ளது என்று கூறி தனது உரையை முடித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடைசியாய் 2014- ல் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்குப் பின் இரு தலைவர்களும்  ஐ.நா பொதுச் சபையில் உரையாடவிருப்பது அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது.

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close