ஷேபாஸ் ஷெரீப் அடுத்த பாகிஸ்தான் பிரதமராக வரவுள்ள நிலையில், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து எச்சரிக்கையான நம்பிக்கையுடன் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் லாகூரில் உள்ள முன்னேற்றங்களை ஆராய்ந்து வருவதாக டெல்லி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ராஜதந்திர பாதைக்கான திறப்பை வழங்கக்கூடும் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் ராணுவத்தின் வேட்பாளராக அறியப்பட்ட இம்ரான் கானின் அரசாங்கம் “கலப்பின ஆட்சி” என்று பரவலாகக் குறிப்பிடப்பட்டது. ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். பாகிஸ்தான் இன்னும் அந்நாட்டின் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பிரதமரை மாற்றும் அதிகாரம் இன்னும் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகமான ராவல்பிண்டியில் தான் உள்ளது என்பதை காட்டுகிறது.
மூத்த சகோதரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பின் நிழலில் இருந்து வெளிவரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவரான ஷேபாஸ், ராணுவத்துக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஷேபாஸ்.
ஷெரீப் குடும்பம் எப்போதும் இந்தியாவுடன் சிறந்த உறவுகளுக்கு ஆதரவாக இருந்து வருகின்றது.2013 டிசம்பரில் ஷேபாஸின் கடைசி இந்தியப் பயணத்தின் போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மாவை சந்தித்து பேசினார். அப்போது, அவர்களுடன் டெல்லியில் உள்ள மெட்ரோ நிலையங்கள்,திடக்கழிவு மேலாண்மை ஆலைகள், ஹரியானாவில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தையும் பார்வையிட்டார்.
பின்னர், பஞ்சாப் சென்ற அவர், அப்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோரை சந்தித்து, இரண்டு பஞ்சாப்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான சாலை வரைபடம் குறித்து விவாதித்தார்.
2013 இல் சில சந்திப்புகளில் இடம்பெற்ற நபர் கூறியதாவது, ஷேபாஸ் சந்திப்புகளில் மிகவும் கவனம் செலுத்தினார். முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நாடுகளுக்கு இடையேயான உறவுகளை உண்மையில் கட்டியெழுப்ப விரும்பினார் என தெரிவித்தார்.
அப்போது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுடன் ஷெபாஸ் உரையாடிய போது, ” ‘போர்’ ஒரு விருப்பமல்ல. சர் க்ரீக், சியாச்சின், நீர் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் அமைதியான உரையாடலை மீண்டும் தொடங்குவதே விருப்பம்” என தெரிவித்தார்.
சிங் உடனான சந்திப்பில், அவர் கூறியதாவது, “வணிகம் மற்றும் வர்த்தகம் இரண்டையும் மூலோபாயப் பிரச்சினைகளுடன் இணைக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். கலாச்சார குழுக்களின் பரிமாற்றம் மட்டும் போதாது. பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். பிரச்சினைகளை கார்பட் கீழே போட்டுவிடக்கூடாது. அதனை தீர்க்க முயற்சிக்க வேண்டும்” என்றேன்.
கடந்த தசாப்தத்தில் இரு நாடுகளின் முக்கிய கவலைகள் ஒரே மாதிரியாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருதரப்பு உரையாடலை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் ஷெபாஸ் நன்றாக இருந்ததாக தெரிவித்தனர்.
இந்தியாவுடனான சிறந்த வர்த்தக உறவுகள் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். பஞ்சாப் மாகாணத்தில் பல சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்களின் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதாக அறியப்பட்டவர். ஷெபாஸ் 2023 இல் அடுத்த தேர்தலுக்கு முன் உறவை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கலாம்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை அவரது ஜனநாயகச் சார்புக் கருத்துக்களுக்காக தேர்ந்தெடுத்ததாக கருதப்படுகிறது. ராணுவத்தால் விரும்பப்பட்டவர் என்று அறியப்பட்டவர். கடந்த காலங்களில் அவரைப் பிரதமர் பதவிக்கு பாகிஸ்தான் ராணுவம் பலமுறை நிறுத்த முயன்றது. ஷேபாஸ் பாஜ்வாவில் ஒரு கூட்டாளியாக காணப்பட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் உறவில் தற்போது சிறியளவில் கிரீன் சிக்னல் உள்ளன. முதலாவதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தம் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டது. இது உயர் அரசியல் ராணுவ மட்டத்திலும், தரை மட்டத்திலும் புரிந்துணர்வு காணப்பட்டது.
இரண்டாவதாக, ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் இந்தியாவின் மனிதாபிமான உதவிக்காக பாகிஸ்தான் வழியாக கோதுமை போக்குவரத்து வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்கான ஒத்துழைப்பாக பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் உட்பட இந்திய அரசுக்கு எதிராக இம்ரான் கானின் வலுவான அறிக்கைகள் இருந்தன. கானின் விலகலுடன், குறைந்தபட்சம் மிக உயர்ந்த அரசியல் மட்டத்திலாவது இத்தகைய தாக்குதல்கள் முடிவுக்கு வரும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த உறவுகள் சவால்கள் நிறைந்தது. ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோரால் வழிநடத்தப்படும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இந்தியாவுடனான உறவுக்கு சாதகமாக இருந்தாலும், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஷெரீஃப்கள் மற்றும் பூட்டோ-சர்தாரிகள் ராஜதந்திர உரையாடலைத் தொடங்குவது அரசியல் ரீதியாக கடினமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதேபோல், பிலாவலுக்கான சர்தாரியின் லட்சியங்களும் ஷெஹ்பாஸுக்கு சவாலாக இருக்கும். கானின் வெளியேற்றத்தை தொடர்ந்து, இரண்டு அரசியல் போட்டியாளர்களான ஷெரீஃப்கள் மற்றும் பூட்டோ-சர்தாரிகள் ஆகியோர் அடுத்த ஆண்டு தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பிரதான இடத்திற்கு போட்டியிடுவார்கள். கான் தலைமையிலான பிடிஐ, ஆளும் கூட்டணியின் ஒவ்வொரு நடவடிக்கையை எதிர்க்கும் கட்சியாக திகழும்
டெல்லி, இஸ்லாமாபாத்தின் அரசியல் சொற்பொழிவுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோதும், பாகிஸ்தானின் ராணுவ ஸ்தாபனத்தை குறிவைத்த கான், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டினார். இது, அவது எதிரி முன்னோக்கி செல்வதை தடுக்கும் வகையில் அவரது ஆட்சி பின்பற்றிய scorched earth பாலிசியாக இந்தியா பார்த்தது.
ஷெபாஸ் தற்போதைக்கு ஓட்டுநர் இருக்கையில் இருக்கலாம், ஆனால் ஷெரீஃப் குடும்பத்தில் ஆட்சி செய்பவர் யார் என்பதை முடிவு செய்வது வெகு தொலைவில் உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் வாரிசாக கருதப்படுகிறது.
மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ” அறிகுறிகள் பாசிட்டிவ் ஆக இருந்தாலும், பாகிஸ்தானுடனான உறவு கணிக்க முடியாதது. உறவை மாற்றயமைக்க, ஒரே ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்லது கருப்பு ஸ்வான் சம்பவம் (ஜெனரல் பர்வேஸ் முஷாரப்புக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் போன்றவை போதும். காத்திருந்து ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிப்போம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil