Advertisment

ட்ரோனில் பார்சல் டெலிவரி… இந்தியா போஸ்ட் சாதித்தது எப்படி?

ட்ரோன் விமானம் குஜராத்தின் கட்ச் பகுதியில் 46 கிமீ தூரத்தை 30 நிமிடங்களுக்குள் பயணித்து பார்சலை டெலிவரி செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
ட்ரோனில் பார்சல் டெலிவரி… இந்தியா போஸ்ட் சாதித்தது எப்படி?

தபால் துறை டெலிவரியில் ட்ரோன்களை இணைக்கும் முயற்சியாக, குருகிராமில் உள்ள ட்ரோன் ஸ்டார்ட்அப் டெக் ஈகிள், இந்தியா போஸ்ட் உடன் இணைந்து பைலட் திட்டத்தின் கீழ் குஜராத்தில் ஒரு பார்சலை வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளது.

Advertisment

டெலிவரி செய்தது எப்படி?

ட்ரோன் விமானம் குஜராத்தின் கட்ச் பகுதியில் 46 கிமீ தூரத்தை 30 நிமிடங்களுக்குள் பயணித்து பார்சலை டெலிவரி செய்துள்ளது. இது சாலை, ரயில் போக்குவரத்தின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமானது என்று TechEagle அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் டெலிவரி தான், நாட்டிலேயே ட்ரோன் மூலம் செய்யப்பட்ட மிக நீண்ட டெலிவரி என்ற பெருமையை பெற்றுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 30 கிமீ வேகத்தில் இருக்கும் போது ட்ரோன் பயணித்தது.

எந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது?

கடந்த மாதம், நிறுவனம் 3 கிலோ எடையும், 100 கிமீ வேகமும், மணிக்கு 120 கிமீ வேகமும் கொண்ட ‘VertiplaneX3’ என்கிற ஹைப்ரிட்-எலக்ட்ரிக் வெர்டிக்கல் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (VTOL) ட்ரோனை அறிமுகப்படுத்தியது. இந்த ட்ரோன் ட்ரோன் 5mx5m என்ற அளவை கொண்ட சிறிய பகுதியிலும் ஹெலிகாப்டர் போல் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கும் திறனும் கொண்டது.

பைலட் திட்டத்தின் நோக்கம் என்ன?

TechEagle இன் இணை நிறுவனர் அன்ஷு அபிஷேக் கூறுகையில், இந்த திட்டம் நகரம் அல்லது கிராமமாக இருந்தாலும், நாடு முழுவதும் விரைவான டெலிவரிகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பைலட் திட்டம், நாடு முழுவதும் அஞ்சல் விநியோகத்தை அதிகரிக்கவும் வணிகமயமாக்கவும் உதவும் என்றார்.

நாட்டில் வேறு ஏதெனும் ட்ரோன் டெலிவரி நடைபெறுகிறதா?

பெங்களூருவை தளமாகக் கொண்ட லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கி, கடந்த மாதம் தனது மளிகை சேவையான இன்ஸ்டாமார்ட் பொருள்களை டெலிவரி செய்ய சோதனை அடிப்படையில் ட்ரோன்களை பயன்படுத்தியது. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இந்த சோதனைக்கு, நான்கு ‘drone-as-a-service’ நிறுவனங்களை இணைத்துள்ளது, இதில் டெக் ஈகிள் ஒன்றாகும்.

பல ட்ரோன் நிறுவனங்கள் மாநில அரசாங்கங்கள், பிற அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி அனுப்புதல், ஹெல்த்கேர் சப்ளைஸ் போன்றவற்றை வழங்குவதற்கான சோதனைகளை நடத்துகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment