கருப்பு பூஞ்சை அதிகரிக்க தொழில் துறை ஆக்சிஜன் பயன்பாடு காரணமா?

Black fungus cases: தொழில்துறை ஆக்ஸிஜன் 99.67% மருத்துவ ஆக்ஸிஜனை விட தூய்மையானது என்றாலும், தொழில்துறை சிலிண்டர்களின் தரம் மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் போல இருப்பதில்லை.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதும் அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் ‘ஸ்டிராய்டு’ எனப்படும் ஊக்க மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியோர், நீரிழிவு நோய் உள்ளோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோரை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனினும், மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்சிஜனின் தரமும் கறுப்பு பூஞ்சை தொற்று பரவலுக்கான காரணமாக இருக்குமா

இன்டஸ்டிரியல் ஆக்சிஜன் சிலிண்டர்களால் ஆக்சிஜன் பற்றாக்குறை எப்படி சரி செய்யப்படும்?

கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு அதிக அளவில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை எடுத்திருந்தாலோ, ஸ்டெராய்டுகளை அதிக அளவில் உட்கொண்டிருந்தாலோ இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதிக அளவு தொழில்துறை ஆக்ஸிஜன் மருத்துவ நோக்கங்களுக்காக திருப்பி விடப்பட்டது. மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையினை சரிசெய்ய தொழில்துறை சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டது. சில தொழில்துறை சிலிண்டர்கள் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மருத்துவ தரத்திற்கு மேம்படுத்தப்பட்டாலும், நோயாளிகள் பயன்படுத்தும் அனைத்தையும் இந்த தரத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை.

தொழில்துறை ஆக்ஸிஜனை மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம்

தொழில்துறை ஆக்ஸிஜன் 99.67% மருத்துவ ஆக்ஸிஜனை விட தூய்மையானது என்றாலும், தொழில்துறை சிலிண்டர்களின் நிலை மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் போல இருப்பதில்லை. சரியான சுகாதாரம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடுதலாக, அவை பல மைக்ரோ கசிவுகளுக்கு ஆளாகின்றன.

தொழில்துறை எரிவாயு சிலிண்டர்கள் தூசி துகள்கள், ஈரப்பதம் மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை என்று தொழில்துறை நகரமான மண்டி கோபிந்த்கரில் உள்ள அஜய் கேசஸை சேர்ந்த ரமேஷ் சந்தர் கூறினார்.

தொழில்துறை சிலிண்டர்களை மருத்துவ தரத்திற்கு மேம்படுத்த பணமும், நேரமும் தேவை. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் அது சாத்தியமில்லை. தொழில்துறை சிலிண்டர்கள் மேம்படுத்தமால் மாசடைந்து இருந்தால் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொழில்துறை சிலிண்டர்கள் மூலம் வழங்கப்படும் ஆக்ஸிஜன் கருப்பு பூஞ்சை தொற்றை அதிகரிக்குமா?

தொழில்துறை ஆக்ஸிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது நெறிமுறை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாக பஞ்சாபின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவை பொதுவாக சேமித்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் கசிவுகள் மூலம் மாசுபடுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதால், மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதியற்றவை. இதை உறுதிப்படுத்தும் வகையில், மற்ற மருத்துவ அதிகாரிகள், தொழில்துறை சிலிண்டர்களை மேம்படுத்தாமல் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்துள்ளதாகவும், தூசி மாசுபடுவதைத் தவிர்ப்பதற்காக சேமிப்புப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

கறுப்பு பூஞ்சை மண்ணில், அழுகும் கரிமப் பொருட்கள் மற்றும் பழைய பொருட்களில் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அசுத்தமான நீரைக் கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் தொற்று பாதிப்பு ஏற்படுத்தும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில் தொழில் துறை ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கறுப்பு பூஞ்சை இணைப்பை நிராகரிக்க முடியாது என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India quality of oxygen supplied through industrial cylinders to spike in black fungus cases

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express