கொரொனோ வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது ?
குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. பெரும்பாலும், அறிகுறிக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது. உதாரணமாக, காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால், சில சமயங்களில் வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு தேவைப்படும் மருந்துகள், உடலுக்கு தேவைப்படும் நீர்ச்சத்து போன்றவற்றை உறுதி செய்கின்றனர்.
கொரொனோ வைரஸ் இறப்பு விகிதம் 3% க்கும் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகள் தங்கள் உடலின் சொந்த நோயெதிர்ப்பு மூலம் இந்த தொற்றில் இருந்து வெளி வருகின்றனர்.
கொரொனோ தொற்று கண்டறியப்பட்ட முதல் மூன்று இந்தியர்களும், இவ்வாறு தான் மீண்டனர். கேரளாவைச் சேர்ந்த அந்த மூன்று மாணவர்களுக்கு, அறிகுறிக்கான நிவாரண மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. நாளாக/நாளாக, நிலையான முன்னேற்றத்தைக் காட்டிய இவர்கள், இறுதியில் குணமாகி வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
கொரோனா வைரசை எதிர்த்துப் போராட ‘இரண்டு’ இரண்டாம் வரிசை எச்.ஐ.வி மருந்துகளை பயன்படுத்த “பொது சுகாதார அவசரநிலை” கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அனுமதி கொடுத்துள்ளது .
சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில்,”சுகாதார அவசரநிலையைக் கருத்தில் கொண்டு லோபினாவிர்/ரிடோனாவிர் காம்பிநேஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக”தெரிவித்தார். மேலும், “இந்த மருந்தை கொரொனோ வைரஸுக்கு பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால்,“தேவைப்படும்” சூழலில் மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்படும்” என்றும் தெரிவித்தார் .
எவ்வாறாயினும், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் “இது போன்ற சில சோதனைகள் சீனாவில் நெகடிவில் முடிந்தது” என்று கடந்த வாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்
இந்தியாவில் எழுபது சதவீதம் எச்.ஐ.வி-பாசிட்டிவ் மக்களுக்கு முதல் வரிசை மருந்துகள் தான் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவில் இந்த வகை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:India second line hiv medications to fight the novel coronavirus
குடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு!
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் !
பூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்