இந்தியாவில், ஆண்டிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், விபத்தினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் இந்தியாவில் தற்கொலைகள் எனும் தலைப்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வினை நடத்தியது. அதன் அறிக்கையை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2016 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டில் நிகழும் 7 மாணவர் தற்கொலைகளில் ஒன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த குறிப்பிட்ட 3 ஆண்டுகளில் மட்டும் 4,235 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆண்டிற்கு 1400 மாணவர்கள் வீதம் அங்கு மாணவர்கள் தற்கொலை நடக்கிறது.
மகாராஷ்டிராவை தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 1,147 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த 2016 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மாணவர்களின் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்துள்ள மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா (4,235) முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தமிழகம் ( 2,744), மத்திய பிரதேசம் (2,658), மேற்கு வங்கம் (2,535) உள்ளது.
ஆண்டிற்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை நிகழ்ந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் 8 மாநிலங்கள் உள்ளன. இந்த பட்டியலின் முதலிடத்தில் கர்நாடகா (2000) உள்ளது.
யூனியன் பிரதேசங்களின் பட்டியலில், டில்லி (626, 212, 203) என்ற அளவில் மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
மாணவர்களுக்கு மனஅழுத்தம், தேர்வு பயம் மற்றும் அதுதொடர்பாக நிகழும் பிரச்சனைகளைய ஷமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களே, முதல் நிலை கவுன்சிலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில், இந்த கவுன்சிலர்களை நவோதயா வித்யாலயா சமிதி அமைப்பு பணியமர்த்தி வருகிறது.
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் வழிகாட்டுதல்படி, மன அழுத்தம், மன இறுக்கம் , தேர்வு பயம் மற்றும் அதுதொடர்பான பிரச்ச்னைகளை களையும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil