Advertisment

அமெரிக்கா- சீனா விரிசல்: இந்தியாவுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?

US China cold war : அமெரிக்கா புதிய கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு இந்தியா தடைவிதிக்க முயலவேண்டும், இல்லையென்றால் இந்த முயற்சி நடைபெற தாமதம் விளைவிக்க வேண்டும்

author-image
WebDesk
New Update
India, US, China, US China ties, US China cold war, US China relations, US anti-China front, India China news, Mike Pompeo, Pompeo on China, Indian Express

சீனா தொடர்பான அமெரிக்காவின் சமீபத்திய பேச்சு, சர்வதேச அளவில் பெரும்விவாதங்களை கிளப்பியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, சீனாவுடனான விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது, சீனாவுடன் அமெரிக்கா 5 தலைமுறைகளாக தொடர்ந்து வந்த உறவை முடித்துக்கொள்கிறது. மற்றொன்று, சீனா உடனான விவகாரத்தில், இனி அமெரிக்கா தனித்து செயல்படாது, ஒத்த கருத்துடைய நாடுகளை இணைத்து கூட்டணி அமைத்து, சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சீனா சோவியத் யூனியன் நாடுகளின் கூட்டமைப்பு என்பதால், அமெரிக்காவுக்கு இந்த புதிய நடைமுறை சற்று கடினமாகவே இருக்கும் இருந்தபோதிலும், இந்த புதிய சவாலை ஏற்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சீனா தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவு, இந்தியாவிற்கு எவ்வித விளைவுகளை ஏற்படுத்தும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு சி ராஜா மோகன் எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையயோன விவாதத்தில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க - சீன உறவு கட்டமைப்பு குறித்த மாற்றங்களையும் இந்தியா கவனத்தில் கொள்வது மிக முக்கியம்.

அமெரிக்கா, தற்போதைக்கு சீனா உடனான உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்திருப்பினும், அமெரிக்காவின் அரசியல் உள்ளிட்ட அம்சங்கள், இந்த நிலையை மீண்டும் மறுஆய்வு செய்யும் என்ற நிலையிலேயே உள்ளது. அவர்கள் இணைந்து செயல்படுவதால் மட்டுமே இருவருக்கும் பலன் என்பதை அவர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். அமெரிக்கா, தன்னுடனான வர்த்தக நிலையை அதிகரித்துக்கொள்வதற்காகவே, தற்போது புதிய கூட்டணியை அமைத்து சீனாவை முந்த திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா புதிய கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு இந்தியா தடைவிதிக்க முயலவேண்டும், இல்லையென்றால் இந்த முயற்சி நடைபெற தாமதம் விளைவிக்க வேண்டும்

அமெரிக்கா தங்களுக்கு ஆதரவான ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்து அதன்மூலம் அது பயனடைய நினைத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், அமெரிக்காவின் இந்த அணுகுமுறை முற்றிலும் புதியவை. இந்தியா, இந்த விவகாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளது.

சர்வதேச அளவில் ஒரு புதிய கூட்டணி உருவாக வேண்டும் என்றால் அதற்கு சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான நடவடிக்கைகள், சீனாவின் விரோதபோக்கால் துவங்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த புதிய அணுகுமுறையால், இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் விரைவில் புதிய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சி ராஜா மோகன், அந்த கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Explained Ideas: Why the breakdown of US-China relations matters for India

Usa China India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment