/tamil-ie/media/media_files/uploads/2019/09/cats-3.jpg)
India WEF travel rankings
India WEF travel rankings : உலக பொருளாதார மன்றம் எனப்படும் வேர்ல்ட் எக்கானமி ஃபோரம் ( World Economic Forum (WEF)) புதன்கிழமையன்று (04/09/2019) 140 உலக நாடுகளுக்கான சுற்றுலாவில் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டது. ட்ராவல் அண்ட் டூரிசம் காம்பெடெட்டிவ் ரிப்போர்ட் (Travel and Tourism Competitive Report) என்ற அந்த அறிக்கையை சமர்பித்தது. இந்த அறிக்கையானது ஒரு நாட்டில் இருக்கும் சுற்றுலா மற்றும் பயணங்களுக்கான பாலிசி, உள்கட்டமைப்பு, இயற்கை மற்றும் கலாச்சார சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
India WEF travel rankings
இந்த அனைத்து தர மதிப்பீட்டுகளின் ஒட்டு மொத்த கூட்டுத் தொகையில் இந்தியா 34வது இடத்தினை பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்த அறிவிப்பின் 2017ம் ஆண்டு வெளியீட்டில் இந்தியா 40வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலியலில் 10 இடங்கள் முன்னேறி தற்போது 98வது இடத்தில் உள்ளது. இயற்கை, மற்றும் கலாச்சாரம் போன்ற வகுப்புகளில் ஏற்கனவே அதிக புள்ளிகள் பெற்றிருந்தாலும் பெரிய அளவில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சுற்றுச்சூழலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. ட்ராவல் பாலிசியில் நியூசிலாந்து, உட்கட்டமைப்பில் அமெரிக்கா, இயற்கை மற்றும் கலாச்சாரம் பட்டியலில் சீனா ஆகிய நாடுகள் முதலிடம் பிடித்துள்ளன. இந்த நான்கு வகுப்புகளின் கீழும் 14 முக்கிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்பெய்ன் தான் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் படிக்க : ஃபாரின் ட்ரிப்: இந்த நாடுகளுக்குப் போக விசா தேவையில்லை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.