இந்தியர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அமெரிக்க மோகம்... காரணம் என்ன?

அந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 லட்சம் பேர் அமெரிக்காவிற்கு சென்று இந்தியா திரும்பியுள்ளனர்

அந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 லட்சம் பேர் அமெரிக்காவிற்கு சென்று இந்தியா திரும்பியுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UK Brings Back 2-Year Post-Study Work Visa

UK Brings Back 2-Year Post-Study Work Visa

Indian born US residents get 60000 green cards every year : அமெரிக்க மோகம், இந்திய இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக ப்ரொஃபெஷனல் பட்டப்படிப்பான இஞ்சினியரிங்க் மற்றும் டாக்டர் படிப்புகளை முடித்தவர்கள் மத்தியில் மிக அதிகமாக இருக்கும். என்னதான் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மக்கள்களின் வரவை கட்டுப்படுத்த விசா பெறும் முறைகளில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினாலும் அமெரிக்காவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது.

Indian born US residents get 60000 green cards every year

Advertisment

இந்நிலையில் திங்கள் கிழமையன்று, அமெரிக்க அரசு, ”அமெரிக்காவிற்கு வருகை புரியும் வெளிநாட்டவர்களுக்கு, அந்நாட்டின் குடியுரிமையை உறுதி செய்யும் க்ரீன்கார்ட்களை பெறுவதில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்படும்” என்று அறிவித்துள்ளது. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையில் மாற்றம் உருவாகலாம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க : Telling Numbers: Over 60,000 Indians get US green cards every year

அமெரிக்கா வெளியிட்ட தரவு ஒன்றில், 2017ம் ஆண்டு அமெரிக்காவில் க்ரீன்கார்ட் வாங்கிய நாட்டவர்கள் பட்டியலில் 4ம் இடத்தினை இந்தியா பெற்றது. மெக்சிகோ, சீனா. மற்றும் க்யூபாவை அடுத்து இந்தியா அந்த பட்டியலில் இடம் பெற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த தரவு அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இருந்து பெறப்பட்டது.

Advertisment
Advertisements

publive-image

2017ம் ஆண்டில் அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமையைப் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 60,393. அதில் அமெரிக்க குடிமக்களின் உறவினர்கள் (were immediate relatives of US citizens) 20,549 பேர் ஆவார்கள். குடும்ப உறவினர்களின் ஸ்பான்சர்ஷிப்பில் க்ரீன்கார்ட் வாங்கியவர்கள் 14,962 ஆவார்கள். 23,569 நபர்கள் அங்கே வேலை பார்க்கும் இந்தியர்கள் ஆவார்கள்.  அமெரிக்க சிட்டிசன்களாகவே மாறியவர்கள் 50,802 நபர்கள். அதே வருடத்தில் அமெரிக்க சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 2,055,480 பேர் ஆவார்கள். சுற்றுலா, பிசினஸ், மாணவர்கள், தற்காலிக பணியாளர்கள் ஆகியோர்கள் இந்த எண்ணிக்கையில் அடக்கம்.

மேலும் படிக்க : விசாவுக்கு ‘அப்ளே’ செய்யும் போது இந்த 5 விசயங்களை மறக்காதீர்கள்!

United States Of America America India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: