Advertisment

மோடிக்கு முன்பு போப் ஆண்டவரை சந்தித்த பிரதமர்கள் யார்? இந்தியா வந்த போப் ஆண்டவர்கள் யார்?

1955இல் போப் ஆண்டவர் 12ஆம் பியுஸை நேரு சந்தித்தபோது, கோவாவை யூனியனுடன் இணைக்கும் முயற்சிகளுக்காக போர்ச்சுகீசியர்களின் எதிர்ப்பை இந்திய அரசு எதிர்கொண்டது.

author-image
WebDesk
New Update
மோடிக்கு முன்பு போப் ஆண்டவரை சந்தித்த பிரதமர்கள் யார்? இந்தியா வந்த போப் ஆண்டவர்கள் யார்?

ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று வாடிகனுக்கு சென்று போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி போப் பிரான்சிசை சந்தித்துப் பேச இருப்பது இதுவே முதன்முறையாகும். ரோமன் கத்தோலிக்க தலைவரை சந்திக்கும் ஐந்தாவது இந்திய பிரதமர் மோடி ஆகும்.

Advertisment

இச்சந்திப்பானது, நாட்டின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ சமூகங்கள் மீதும், அதன் நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ள சமயத்தில் நடைபெறுவதால் முக்கியத்தவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரக்கண்டில் ஆய்வு மேற்கொண்ட சிவில் உரிமைகள் பாதுகாப்பிற்கான என்ஜிஓக்கள் சங்கம், யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் ஆகியவை, கிறிஸ்துவர்கள் மீதும், தேவாலயங்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெறுவதாக அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், மோடியின் போப் ஆண்டவர் விசிட் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வருவதால், அரசியல் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அங்கு கிறிஸ்தவ சமூகம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கோவாவை ஆளும் பாஜகவிற்கு, சமூகத்தின் வாக்குகள் முக்கியம் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். ரோமன் கத்தோலிக்க திருச்சபை கேரளாவிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

நாட்டின் மக்கள்தொகையில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் பாதியாக உள்ளனர். பாஜக வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்க, கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற முக்கியமாக பார்க்கிறது. பல மாநிலங்களில் வெற்றியை பெறும் பாஜகவால், கேரளாவில் அதனைச் செய்திட முடியவில்லை. அதற்கு, கிறிஸ்துவர்கள் ஆதரவு இல்லாதது தான் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கனில் முந்தைய இந்தியப் பிரதமர்கள்

மோடிக்கு முன்பு, இந்தியப் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ஐ.கே குஜ்ரால், வாஜ்பாய் ஆகியோர் வாடிக்கனில் போப் ஆண்டவரை சந்தித்துள்ளனர்.

1955இல் போப் ஆண்டவர் 12ஆம் பியுஸை நேரு சந்தித்தபோது, கோவாவை யூனியனுடன் இணைக்கும் முயற்சிகளுக்காக போர்ச்சுகீசியர்களின் எதிர்ப்பை இந்திய அரசு எதிர்கொண்டது. கோவாவின் சுதந்திரத்திற்காகக் கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டத்தில் போர்ச்சுகீசியர்கள் 20 பேரைக் கொன்றதையடுத்து நேரு பொருளாதாரத் தடையை விதித்தார். போப் உடனான சந்திப்பில், கோவாவில் நடப்பது ஒரு "அரசியல் பிரச்சினை" அது "மதப் பிரச்சினை அல்ல" என்பதை நேரு தெளிவுபடுத்தினார்.

நேருவின் பயணத்தின் போது அவரது குழுவிலிருந்த இந்திரா காந்தி, போப் ஆண்டவர் 2ஆம் ஜான் பாலை பிரதமராக இருந்தபோது 1981 இல் சந்தித்தார்.

1997 இல் ஐ.கே. குஜ்ரால், 2000 இல் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் தங்கள் பயணங்களின் போது அதே போப் ஆண்டவரை சந்தித்தனர்.

சர்வதேச மாநாடுகள், உச்சி மாநாடுகளுக்கு ரோம் செல்லும் உலகத் தலைவர்கள் போப் ஆண்டவரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்தியா வந்த போப் ஆண்டவர் யார்?

இந்தியாவிற்கு வந்த முதல் போப் 4 ஆம் பால் ஆகும். இவர் 1964 இல் சர்வதேச நற்கருணை மாநாட்டில் கலந்து கொள்ள மும்பை சென்றார். தொடர்ந்து,போப் 2 ஆம் ஜான் பால், பிப்ரவரி 1986 மற்றும் நவம்பர் 1999 இல் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.

போப் 2 ஆம் ஜான் பாலின் இரண்டாவது இந்திய வருகை சர்ச்சையானது. ஏனென்றால், அப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள் போன்ற சங்பரிவார் அமைப்புகள் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்ததாகவும், அதற்கு போப் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டங்களை நடத்தினர். அப்போது, விஎச்பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், போப் ஆண்டவரை டகோயிட் என விமர்சித்தற்கு கடும் கண்டனம் எழுந்தது.

கேரளா முன்னாள் முதலமைச்சர் ஈ.கே.நாயனார், 1977இல் இத்தாலியில் போப் 2 ஆம் ஜான் பாலை நேரில் சந்தித்து பகவத்கீதையை வழங்கினார். குறிப்பாக, அவருக்கு போப் வழங்கிய ஜெபமாலையை இறுதி மூச்சு வரை வைத்திருந்தார். நாயனாருடன், தற்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் சென்றிருந்தார். அவர், போப் பிரான்சிஸை 2019 சந்தித்த போது, மத்திய அமைச்சர் வி முரளீதரனும் பகவத்கீதையை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Pope Francis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment