டாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்

QS Indian University Rank list: இந்திய பல்கலைக்கழகங்களின் QS தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் உயர்க்கல்வி நிறுவனங்களுக்கான முழுமையான தரவரிசைகளின் இரண்டாவது வெளியீடாகும்.

indian colleges global ranking, iits india college, பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல், ஐ.ஐ.டி மும்பை, ஐ.ஐ.டி சென்னை, iit delhi, iit bombay, university of hyderabad, university of delhi, iit madras
indian colleges global ranking, iits india college, பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல், ஐ.ஐ.டி மும்பை, ஐ.ஐ.டி சென்னை, iit delhi, iit bombay, university of hyderabad, university of delhi, iit madras

QS Indian University Rank list: இந்திய பல்கலைக்கழகங்களின் QS தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் உயர்க்கல்வி நிறுவனங்களுக்கான முழுமையான தரவரிசைப் பட்டியலின் இரண்டாவது வெளியீடாகும். இந்த தரவரிசையில் பொது, தனியார், உயர் கல்வி அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் அடங்கும்.

இந்த பட்டியலில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி) ஆதிக்கம் செலுத்துகின்றன. முதல் பத்து தரவரிசையில் 7 ஐ.ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டைப் போலவே, ஐ.ஐ.டி மும்பை முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு, ஐ.ஐ.டி-டெல்லி அதன் செயல்திறனை மேம்படுத்தி ஐ.ஐ.டி-மெட்ராஸை முந்திக்கொண்டு ஒரு ரேக் மேலே சென்றுள்ளது.

ஐஐடி-டெல்லி இப்போது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லி பல்கலைக்கழகமும் ஹைதராபாத் பல்கலைக்கழகமும் இந்திய அறிவியல் நிறுவனமும் (ஐ.ஐ.எஸ்.சி) முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற ஐ.ஐ.டி அல்லாத பிற நிறுவனங்கள் ஆகும். முதல் 10 இடங்களில், ஹைதராபாத் பல்கலைக்கழகமும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் தரவரிசையில் ஒரு இடம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிறுவங்களின் தரவரிசையைத் திர்மானிப்பதற்கு எட்டு அளவீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை: கல்வி நிறுவனத்தின் புகழ் (எடை 30%), நிறுவனத்தின் நற்பெயர் (20%), ஆசிரியர் – மாணவர் விகிதத்துக்கு (20%), பி.எச்.டி பட்டம் பெற்ற ஊழியர்கள் விகிதம் (10%), ஆசிரியர்கள் ஆய்விதழ்களில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகள் (10%), ஆய்வுத் தளத்தில் ஒருவர் எத்தனை ஆய்வுக் கட்டுரைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார் (5%), சரவதேச மாணவர்களின் விகிதம் (2.5%), சர்வதேச ஆசிரியர்களின் விகிதம் (2.5%)

இதில் கல்வி நிலையத்தின் புகழ் அதிக அளவீட்டு எடையானது QS -ன் கல்வியாளர்களின் முக்கிய உலகளாவிய கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த துறைகளில் உயர்மட்ட நிறுவனங்களை அடையாளம் காணும்படி கேட்கப்படுகிறார்கள். பி.எச்.டி பட்டம் பெற்ற ஊழியர்களின் விகிதம் அதிக தகுதி வாய்ந்த ஆசிரிய உறுப்பினர்களை பணியமர்த்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் சர்வதேச ஆசிரியர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான மதிப்பெண் தரவரிசைப்படி ஒரு நிறுவனத்தின் உலகளாவிய அழைப்பையும் அது சென்றடைந்ததையும் பிரதிபலிக்கிறது. “ஒரு ஆய்வுக்கட்டுரைக்கான அழைப்பு மீதான மதிப்பெண் ஆராய்ச்சி உற்பத்தித்திறனின் அளவீடு ஆகும். இது ஒரு ஊழியரால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவின் தரவரிசை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட கியூ.எஸ் உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைகளுடன் பொருந்தவில்லை. அந்த பட்டியலில், ஐ.ஐ.டி-பம்பாய் சிறந்த இந்திய நிறுவனமாகவும், ஐ.ஐ.டி-டெல்லி இரண்டாவது சிறந்த இடமாகவும் உள்ளன. இரண்டு தரவரிசைகளும் வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் பல்கலைக்கழகங்க தரவரிசையில் கல்வி நிறுவனத்தின் புகழுக்கு 30% எடை வழங்கப்படுகிறது. ஆனால், அதன் எடை உலக தரவரிசையில் 40% ஆகும்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian university rank listiits dominate india rankings iit bombay and iisc on top

Next Story
Explained : ஆஸ்திரேலியா ஊடகங்களின் அசாத்திய முடிவு – இந்தியாவில் நடக்குமா ?Australia Right To know Coalition : Australia major dailies Front page Monday
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com