Advertisment

குளிர் அலை நேரத்தில் மது அருந்த வேண்டாம்: இந்திய வானிலை மையம் ஏன் இப்படி எச்சரிக்கிறது?

குளிர்காலத்தில் மது அருந்துவது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் என பரவலாக கருத்து நிலவி வரும் நிலையில், குளிர்காலத்தில் மது அருந்துவது தவறான தேர்வு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
குளிர் அலை நேரத்தில் மது அருந்த வேண்டாம்: இந்திய வானிலை மையம் ஏன் இப்படி எச்சரிக்கிறது?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆல்கஹால் தவிர்ப்பதன் மூலம் கடும் குளிரில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய ஆலோசனைப்படி, வரும்  டிசம்பர் 29 (நாளை) முதல் ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இன்று முதல் (டிசம்பர் 28 ) வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய தாக்கத்தின் அடிப்படையிலான ஆலோசனையில் என்ன கூறியது?

இந்திய வானிலை ஆய்வு மைய ஆலோசனையில், இந்த குளிர் அலை நிலைமைகளில், காய்ச்சல் போன்ற நோய்களைக் குறைக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், ஜன்னி / மூச்சுத்திணறல்  அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர் வழக்கமாக அமைந்திருக்கும் அல்லது நீண்டகாலமாக வெளிப்படுவதால் இந்த நிலை மேலும் மோசமடைகிறது என குறிப்பிட்டுள்ளது.

மேலும் பனிப்பொழிவு காலத்தில், குளிரில் தோல் கடினமானதாகவும், உணர்ச்சியற்றதாக மாறும் என்றும், கடுமையான குளிர் நிலைகளுக்கு ஆளாகும்போது சருமத்தில் கறுப்பு கொப்புளங்கள் மற்றும் உடல் நடுக்கம் ஏற்படும்.  இதுவே  “உடல் வெப்பத்தை இழக்கிறது என்பதற்கான முதல் அறிகுறியாகும் ”. இந்நிலையில், குளிர் அலைக்கு பாதகமான எதிர்வினையைத் தவிர்ப்பதற்காக, இந்திய வானிலை ஆய்வு மையம், சில பரிந்துரைகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளது.

அதில்"உங்கள் உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது" என்பதால் மதுவைத் தவிர்ப்பது. வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும்,  எண்ணெய் அல்லது கிரீம் மூலம் சருமத்தை ஈரப்பதமாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்-சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க சூடான திரவங்களை குடிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் குளிர்ந்த காலநிலையில் ஆல்கஹால் மிகவும் மோசமானதா?

குளிர்கால இரவில் குளிர்ச்சியை வெல்ல மதுபானம் (ஆஸ்கஹால்) பலருக்கு நல்ல யோசனையாகத் தோன்றலாம், ஆனால் இது சரியான தேர்வு இல்லையென்று  இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் பல சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் ஆல்கஹால் உங்களை வெப்பமாக உணரக்கூடும் என்றாலும், அது உண்மையில் உங்கள் உடல் வெப்பநிலையை குறைக்கிறது. நீங்கள் குளிர்ச்சியில் இறங்கினால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்க செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து யு.எஸ். ஆர்மி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் சுற்றுச்சூழல் மருத்துவத்தின் வெப்ப உடலியல் மற்றும் மருத்துவப் பிரிவு இணைந்து நடத்திய ஆய்வின்படி, ஆல்கஹால் உடலின் முக்கிய வெப்பநிலையைக் குறைக்கும் என்றும், குளிர் வெளியாகும்போது வெப்பநிலை குறையும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹைப்போதெர்மியா என்ற ஒரு கடுமையான மருத்துவ நிலை, உருவாகும் முன் உடல் வெப்பத்தை இழக்கிறது. இதன் காரணமாக சாதாரண உடல் வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸில் இருக்கும்போது, ​​ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்குக் குறைகிறது.

பொதுவான அறிகுறிகளில் நடுக்கம், சுவாசிப்பதில் பிரச்சினை, மந்தமான பேச்சு, குளிரில் தோல் கடினம் மற்றும் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். அதிக மது அருந்துவது பெரும்பாலும் தாழ்வெப்பநிலை மற்றும் தீவிர குளிர் காலநிலையுடன் தொடர்புடைய பிற நிலைமைகளை இணைக்கும் அபாயம் உள்ளது. மேலும் ஆல்கஹால் உளவியல் (மனரீதியாக) மற்றும் நடத்தை விளைவுகளை உள்ளடக்கியது என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும் மது அருந்தும்போது, ஒரு நபர் தற்போது எவ்வளவு குளிராக இருக்கிறது என்பதை சரியாக உணரும் திறனை இழக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆகவே, மக்கள் அதிக அளவில் குடித்துவிட்டு வெளியே சென்றபின் தாழ்வெப்பநிலைக்கு ஆளாக நேரிடும். இது தீவிர குளிர் காலங்களில் மிகவும் பொதுவாகக் கூறப்படுகின்றன. இது குறித்து அமெரிக்க குடும்ப மருத்துவர்கள் சங்கத்தின் கருத்துப்படி, 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தற்செயலான தாழ்வெப்பநிலைக்கு 68 சதவீதம் மது அருந்துதல் ஏற்படுகிறது என்பதை காட்டுகிறது.

ஆல்கஹால் உடல் வெப்பநிலையை எவ்வாறு குறைக்கிறது?

ஆல்கஹால் அருந்துவதால், இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், நீர்த்துப்போகவோ அல்லது திறக்கவோ காரணமாகிறது. எனவே ஆல்கஹால் உட்கொண்ட பிறகு, சருமத்தின் மேற்பரப்பில்  இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக நீங்கள் வெப்பமடைகிறீர்கள். இது போதையில் இருப்பவர்  தனது உடல் சூடாக இருக்கிறது என்று நம்பத் தொடங்கும் போது உங்களுக்கு வியர்க்க தொடங்கி விடும். இதனால் ஒட்டுமொத்த உடல் வெப்பநிலை குறைந்து விடும். மேலும் ஏராளமான ஆல்கஹால் குடிப்பது உங்கள் உடல் குளிர்ச்சியை சரியாகக் கண்டறியும் திறனைப் பாதிக்கலாம்,  ஆனாலும், மிதமான சூழலில் மிதமாக குடிப்பது உடலின் முக்கிய வெப்பநிலையை அவ்வளவாக வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குளிர் அலை என்றால் என்ன, இந்திய வானிலை மையத்தின் கணிப்பு என்ன?

இது குறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பில், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்தியாவின் சமவெளிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை உயரும் என்று தெரிவித்துள்ளது. மேலும்  மேற்கு இமயமலைப் பகுதியிலிருந்து வடமேற்கு பகுதிக்கு குளிர்ந்த காற்று வீசுவது, திங்கள்கிழமை (இன்று) முதல் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் பகுதிகளில் குளிர் அல்லது கடுமையான குளிர் அலை நிலைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக குறைந்து சாதாரண வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக இதுப்பதுபோல் குளிர் அலை ஏற்பட வாய்ப்புள்ளது. கடுமையான குளிர் அலை நிலைகளில், சாதாரண வெப்பநிலையிலிருந்து புறப்படுவது 6.5 டிகிரி அல்லது குறைவாக இருக்கும். அந்த வகையில், டெல்லி இந்த மாதத்தில் ஐந்து குளிர் அலை நாட்களை பதிவு செய்துள்ளது. இதில் டிசம்பர் 28 க்குப் பிறகு (இன்று) அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய நாடுகளில் மேற்குத் திசையில், மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28 க்குப் பிறகு அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளுக்கு இடையில் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Alcohol Drinking
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment