Advertisment

இனி ஈரானுக்கு விசா இல்லாமல் செல்லலாம்... இந்தியர்களுக்கு போட்ட முக்கிய நிபந்தனைகள்!

அனுமதிக்கப்பட்ட 15 நாட்களை விட அதிக காலம் ஈரானில் தங்குவதற்கு விரும்பினாலோ அல்லது ஆறு மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினாலோ அதற்கான உரிய விசா பெற வேண்டும்.

author-image
WebDesk
New Update
Indians can travel to Iran without a visa All you need to know in tamil

விசா இன்றி பயணம் என்ற நடைமுறையானது, சுற்றுலாவுக்காக வருவோருக்கு மட்டுமே பொருந்தும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியர்கள் இப்போது ஈரானுக்கு விசா இல்லாமல் செல்லலாம். அதற்கு அவர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் போதும். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 4ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Advertisment

ஈரானுக்கு விசா இல்லாமல் யார் யார் பயணம் செய்யலாம்?

சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் விசா இல்லாமல் ஈரான் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். 

விசா இன்றி பயணம் என்ற நடைமுறையானது, சுற்றுலாவுக்காக வருவோருக்கு மட்டுமே பொருந்தும். 

விசா இல்லாமல் வரலாம் என்ற இந்த அறிவிப்பு வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஈரானில் எவ்வளவு காலம் தங்கலாம்?

விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைபவர்கள் அதிகபட்சம் 15 நாட்கள் தங்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் 15 நாட்களுக்கு பிறகு கால நீட்டிப்பு கிடையாது. மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் அவர்கள் நாட்டிற்குள் நுழைய முடியும்.

அனுமதிக்கப்பட்ட 15 நாட்களை விட அதிக காலம் ஈரானில் தங்குவதற்கு விரும்பினாலோ அல்லது ஆறு மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினாலோ அதற்கான உரிய விசா பெற வேண்டும்.  வேலை அல்லது படிப்பு போன்ற பிற நோக்கங்களுக்காக பயணம் செய்பவர்களுக்கு இந்த தளர்வு பொருந்தாது.

"இந்திய குடிமக்கள் நீண்ட காலம் தங்க விரும்பினால் அல்லது ஆறு மாத காலத்திற்குள் பல நுழைவுகளைச் செய்ய விரும்பினால் அல்லது வேறு வகையான விசாக்கள் தேவைப்பட்டால், அவர்கள் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் மூலம் தேவையான விசாவைப் பெற வேண்டும்" என்று அறிக்கை தெரிவிக்கிறது. 

ஈரான் ஏன் விசா தேவைகளை நீக்கியது?

டிசம்பர் 2023 இல், ஈரான் இந்தியா மற்றும் 32 நாடுகளுக்கு தளர்வுகளை அறிவித்தது. "இந்த நடவடிக்கை சுற்றுலாவை மேம்படுத்துவதையும், உலகம் முழுவதிலுமிருந்து அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது" என்று ஈரானிய கலாச்சார பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் அமைச்சர் எஸதுல்லா ஜர்காமி கூறினார்.

மேலும், "உலகளாவிய தொடர்புகளில் ஈரானின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஈரான் இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்மறையான உணர்வுகள் மற்றும் வதந்திகளை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் 'உலகளாவிய ஆணவ அமைப்பால் தொடரப்பட்ட ஈரானோஃபோபியா' நிகழ்வை எதிர்த்துப் போராடுகிறது" என்றும் அவர் கூறினார்.

மற்ற 32 நாடுகளில் ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், குவைத், லெபனான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துனிசியா, மொரிட்டானியா, தான்சானியா, ஜிம்பாப்வே, மொரிஷியஸ், சீஷெல்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர்,  கம்போடியா, மலேசியா, வியட்நாம், பிரேசில், பெரு, கியூபா, மெக்சிகோ, வெனிசுலா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, செர்பியா, குரோஷியா மற்றும் பெலாரஸ்.
ஜப்பான் ஆகியவை அடங்கும். ,

முன்னதாக, ஈரான் துர்கியே, அஜர்பைஜான், ஓமன், சீனா, ஆர்மீனியா, லெபனான் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு விசா தேவைகளை நீக்கியது.

இந்தியாவிற்கு விசா இல்லாத பயணத்தை வேறு எந்த நாடுகள் அனுமதிக்கின்றன?

மலேசியா, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகியவை சமீபத்தில் இந்திய குடிமக்களுக்கான விசா தேவைகளை தளர்வு செய்துள்ளன. சுற்றுலாவை பெரிய பொருளாதாரமாக நம்பியிருக்கும், இந்த நாடுகளின் மற்றொரு அண்டை நாடான தாய்லாந்து 2023 நவம்பர் 10 முதல் மே 10, 2024 வரை இந்திய குடிமக்களுக்கு விசா விலக்கு அளிப்பதாக அறிவித்தது.

அக்டோபர் 2023 இல், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளின் குடிமக்களுக்கான விசா தேவைகளை பைலட் திட்டத்தின் கீழ் நீக்கினார். இந்த விலக்கு மார்ச் 31, 2024 வரை தொடரும் என்றும் அறிவித்தார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். 2026 க்குள் 50,00,000 பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது. 

தற்போது, ​​27 நாடுகள் இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன. கென்யா, இந்தோனேசியா, பார்படாஸ், பூட்டான், டொமினிகா, ஹைட்டி, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சமோவா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுளும் இதில் அடங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Iran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment