Sourav Roy Barman
இந்தியாவின் நகர்ப்புற, வெகுஜன மக்களின் சிறந்த போக்குவரத்து அம்சமாக கருதப்படுவது டெல்லி மெட்ரோ தான். டிசம்பர் 28ம் தேதி அந்த மெட்ரோ ஒரு மைல் கல்லை எட்ட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அன்று, இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் போக்குவரத்தினை துவங்க உள்ளார்.
முதல் ஓட்டுநர் இல்லா ரயில், லைன் எண் 8ல் 38 கி.மீ பயணிக்க உள்ளது. அல்லது மெஜந்தா லைனில் செல்லும். நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் காஸியாபாத் மற்றும் பாஹாதுர்கர் உள்ளிட்ட தேசிய தலைநகர் அருகே உள்ள நகரங்களை இணைக்கும் 390 கி.மீ நீள நெட்வொர்க் இதுவாகும்.
டெல்லி மெட்ரோ 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி அன்று ஷாதாரா மற்றும் திஸ் ஹசாரிக்கு இடைப்பட்ட 8.4 கி.மீ தூரத்தை கடக்க முதன்முதலில் செயல்பாட்டிற்உ வந்தது. அதன் பின்னர் டெல்லி மெட்ரோ சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது நான்காம் கட்ட விரிவாக்க திட்டத்தின் கீழ் மேலும் 61 கி.மீ சேர்க்கப்பட உள்ளது.
2002 ஆம் ஆண்டு முதல், டெல்லி மெட்ரோ தொழில்நுட்ப அளவில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது, ‘டிரைவர்லெஸ்’ முறைக்கு மாறுவது கடந்த 18 ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் மாற்றங்களில் சமீபமானது. முந்தைய விதிமுறைகள் ஓட்டுநர் இல்லாத சேவைகளை அனுமதிக்காததால், மெட்ரோ ரயில்வே பொது விதிகள் 2020ல் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் 28ம் தேதி முதல் அனைத்து மெட்ரோ ரயில்களும் ஓட்டுநர்கள் இன்றி செயல்படுமா?
இல்லை. மூன்றாம் கட்ட விரிவாக்கங்களை சந்தித்த லைன் 7 மற்றும் 8ல் மட்டுமே ட்ரைவர்கள் இல்லாத மெட்ரோ சேவைகள் செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த பகுதிகள் மேம்பட்ட சமிக்ஞை தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது லைன் 8ம் மட்டுமே unattended train operation (UTO) எனப்படும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை செயல்பாட்டிற்கு வருகிறது.
தற்போதைய ரயில் சேவைகளில் ஓட்டுநர்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடு உள்ளது?
இப்போதும் கூட, பெரும்பான்மையான ரயில்கள் ஆப்பரேசன் கண்ட்ரோல் சென்டர் எனப்படும் ஒ.சி.சி. டெல்லி மெட்ரோ சேவையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. இங்கிருந்து பொறியாளர்கள் குழுக்கள் டி.எம்.ஆர்.சி. நெட்வொர்க் முழுவதையும் ரியல் டைமில் கண்காணித்து வருகின்றனர். ஓ.சி.சிக்கள் விமான சேவைகளில் பயன்படுத்தும் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு நிகரானவை. பெரிய திரைகள் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தால் இயங்குபவை. டெல்லி மெட்ரோ சேவைக்கு மூஉன்று ஓ.சி.சி.க்கள் உள்ளன. அதில் இரண்டு மெட்ரோ தலைமையகத்தில் இயங்குகிறது. மற்றொன்று சாஸ்திரி பூங்காவில் இயங்குகிறது. ஆனால் ரயில்களின் இயக்கத்தின் மீது ஓட்டுநர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு வழித்தடத்திற்கு வழித்தடம் மாறுபடும்.
பழைய தளங்களில் இயக்கப்படும் ரயில்கள் மீது ஓட்டுநர்களுக்கு அதிக கட்டுப்பாடு உள்ளதா?
உண்மை தான். தடம் 1 அல்லது சிவப்பு தடம் மற்றும் தடம் 3/4 அல்லது நீல தடத்தில் செயல்படும் ரயில்களின் வேகம், கதவு திறத்தல், மூடுதல் என அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் ஓட்டுநர்கள் கையில் தான் உள்ளது. டார்க்கெட் ஸ்பீட் மட்டும் ஏ.டி.பி. சிஸ்டம் மூலம் (Automatic Train Protection) உறுதி செய்யப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் ரயில்களை ஓட்டுநர்கள் இயக்க முடியாது. தடம் எண் 8 உட்பட இதர தளங்கள் ஆட்டோமேட்டிக் ட்ரெய்ன் ஆப்பரேசன் மோட் மூலம் இயக்கப்படுகிறாது. இதன் மூலம் ஒவ்வொரு ப்ளாட்பார்ம்களிலும் அனைத்து கதவுகளும் மூடப்பட்ட பிறகு தான் ரயிலை இயக்கும் கட்டளையை ஓட்டுநர் பெற இயலும்.
ஆனால் ATO மோட் எப்போதாவது இந்த வழிகளில் செயல்படாமல் இருக்கும் பட்சத்தில், ஓட்டுநர்கள் ரயில்களை தாமாக இயக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் அவசர காலங்களில் செயல்பட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
மெஜந்தா தளத்தில் டிசம்பர் 28ம் தேதியில் இருந்து காணப்பட இருக்கும் மாற்றங்கள் என்ன?
எ.டி.பி மற்றும் எ.டி.ஒ மோட்களில் இருந்து ட்ரைவர்லெஸ் ட்ரெய்ன் ஆப்ரேஷன் (Driverless Train Operation) மோட்களுக்கு மெட்ரோ சேவைகள் மாற்றப்படும். இந்த மோட்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் மனித இடையூறுகள் ஏதும் இன்றி நேரடியாக மூன்று கட்டுப்பாட்டு அறையின் கீழ் இருக்கும். ஹார்ட்வேர் தொடர்பான பிரச்சனைகளின் போதே மனிதர்களின் சேவை தேவைப்படுகிறது. கட்டுப்பாட்டு மையங்களில், பயணிகளின் தகவல் அமைப்பு, கூட்டத்தை கண்காணித்தல் ஆகியவற்றைக் கையாள தகவல் கட்டுப்பாட்டாளர்களின் பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரோலிங் ஸ்டாக் கண்ட்ரோலர்கல் ரயில்களின் ரியல் டைமை மேற்பார்வையிடும். அனைத்து ஸ்டேஷன் கன்ட்ரோலர்களுக்கும் சிசிடிவி தரவுகளை அணுகலாம். ஆனால் இந்த அமைப்பு டிரைவர் இல்லாத சேவைகளின் இறுதி கட்டமான கவனிக்கப்படாத ரயில் செயல்பாடு (யுடிஓ) பயன்முறையிலிருந்து ஒரு படி தள்ளி நிற்கும்.
தொழில்நுட்ப ரீதியாக மெட்ரோ தொடர்ந்து ஓட்டுநர்களை வைத்திருக்குமா?
ஆம். தற்போதைக்கு மட்டும். டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் யூ.டி.ஓ. மோடுக்கு மாறும் வரை, அவசர நிலை மற்றும் இதர தேவைகளுக்கு பயிற்சி பெற்ற மெட்ரோ ஓட்டுநர்கள் இருப்பார்கள். ரயில்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய அனைத்து மெட்ரோ ரயில்களிலும் ஹை ரெசலியூசன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர் இது மாறும். அதன் பிறகு மெட்ரோ படிப்படியாக ஒட்டுநர்களுக்கான கேபின்களை அகற்றி கட்டுப்பாட்டு பேனல்களை இயக்கும். தற்போது ஓட்டுநர்கள் ஒவ்வொரு மெட்ரோவின் முன் மற்றும் பின்னால் அமைந்திருக்கும் கேபின்களில் அமர்ந்து ரயில்களை இயக்குகிறார்கள். ட்ராக்குகளில் இருக்கும் குறைப்பாடுகளை தற்போது பொருத்தப்பட்டிருக்கும் ஹை ரெசலியூசன் கேமராக்கள் கொண்டு காண முடியாது. கட்டுப்பாட்டு மையங்களுக்கு காட்சிகளை ரியல் டைமில் ரிலே செய்வதற்கான அலைவரிசை திறனும் அதிகரிக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க : இறைச்சி கடைகளுக்கு முன்பு ”ஹலால் போர்டு” கட்டாயம் – டெல்லி தெற்கு நிர்வாகம்
ஓட்டுநர்கள் இல்லாமல் இயங்கும் ரயில்களில் பாதுகாப்பு எவ்வளவு இருக்கும்?
டெல்லி மெட்ரோ காப்பரேசன், ஏற்கனவே அதிகப்படியான ஆட்டோமேஷன் இந்த ரயில் சேவைகளில் இருப்பதை குறிப்பிட்டுள்ளது. மேலும் ஹை ரெசலியூசன் கேமராக்கள் நிறுவப்பட்டதும் ஓட்டுநர்கள் அறைகளில் இருந்து தடங்களை கண்காணிப்பதற்கான தேவை தவிர்க்கபப்டும். இந்த திட்டத்தின் கீழ், ட்ராக்குகள் மற்றும் மேலே செல்லும் வையர்கள் ஓ.சி.சிக்கு அனுப்பப்பட்டு தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படும். ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் என்றால் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டிசம்பர் 28ம் தேதி டெல்லி மெட்ரோவின் ஓட்டுநர் இல்லா ரயில் சேவைக்கு ஒப்புதல் அளித்தார். மேலும் ஆன் போர்டில் இருக்கும் கேமராக்கள் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய கட்டளையிட்டார். டெல்லி மெட்ரோ மேலும் ஆலோசகரை, ஓட்டுநர் இல்லா மெட்ரோ சேவையை செயல்படுத்துவதற்கான அமைப்புகளை ஆய்வு செய்வதற்காக நியமித்துள்ளது. இந்த அறிக்கைகள் அனைத்தும் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவைகள் துவங்கப்படும் போது டெல்லி மெட்ரோவால் ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்திடம் சமர்பிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.