Udit Misra , Nushaiba Iqbal
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான (ஏப்ரல், மே, ஜூன்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக திங்களன்று புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தரவுகளை வெளியிட்டபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமான குறைந்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், பரந்த ஒருமித்த கருத்து சரிவு 20% ஐ விட அதிகமாக இருக்காது என்று கூறினர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி Q1 இல் 24% குறைந்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு, கடந்த ஆண்டு இதே மூன்று மாதங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு -24% என்ற விகிதத்தை அடைந்துள்ளது. பொருளாதார வளர்சசிகளை சுட்டும் காரணிகள் இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சிமெண்ட் உற்பத்தி மற்றும் ஸ்டீல் பயன்பாடு போன்றவை முற்றிலும் குறைந்துள்ளது. இந்த காலாண்டில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த ஊரடங்கு உத்தரவால், டேட்டாவின் தரமும் சப்-ஆப்டிமலாக இருக்கிறது. பெரும்பாலான பார்வையாளர்கள் இந்த எண் சரியான நேரத்தில் திருத்தப்படும்போது மோசமடையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதில் கூறப்படும் விசயங்கள் என்ன?
பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்திருப்பதால், இந்த முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மோசமடையக்கூடும் என்று நம்பப்படுகிறது. முழு நிதியாண்டில் 7%மாக வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். இதையே முதலாவது படமும் சுட்டிகாட்டுகிறது.
பொருளாதார தாராளமயமாக்கல் நடைபெற்றுக் கொண்டிருந்த 1990களின் முற்பகுதிக்குப் பின்னர், இந்திய பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7% மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு அதற்கு மாற்றாக 7% குறைவை சந்திக்க உள்ளது. பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் மொத்த மதிப்பு சேர்க்கப்பட்ட போது, விவசாயத்தில் மட்டுமே ஜி.வி.ஏ 3.4% உயர்ந்துள்ளது என்பதை தரவுகள் உறுதி செய்கிறது. மற்ற அனைத்து துறைகளும் வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கட்டுமானம் (–50%), வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் பிற சேவைகள் (–47%), உற்பத்தி (–39%) மற்றும் சுரங்க வேலைகள் (–23%) ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் அதிகபட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகள் இவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த துறைகளின் வளர்ச்சி குறைந்து கொண்டிருக்கும் போது அவற்றின் உற்பத்தி மற்றும் வருமானங்கள் வீழ்ச்சியடைகின்றன - இது மேலும் பலருக்கு வேலையை இழக்க காரணியாக அமைகிறது. அல்லது ஒரு வேலை கிடைப்பதை சிக்கலாக்குகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைய காரணம் என்ன? இதனை சரி செய்ய ஏன் அரசால் இயலவில்லை.
எந்த ஒரு பொருளாதாரமாக இருந்தாலும், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மொத்த தேவை - அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி - வளர்ச்சியின் நான்கு முக்கிய காரணிகள் ஒன்றிலிருந்து உருவாக்கப்படுகிறது. பெரிய காரணி, உங்களைப் போன்ற தனி நபர்களின் தேவை நுகர்வு. இதை சி என்று அழைப்போம். இதன் அளவு, இந்திய பொருளாதாரத்தில் , மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்த காலாண்டிற்கு முன்பு 56.4%-மாக இருந்தது.
இரண்டாவது பெரிய காரணி தனியார் துறை வணிகங்களால் உருவாக்கப்படும் தேவை. இதை நான் ஐ என்று அழைப்போம், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32% ஆகும். மூன்றாவது காரணி அரசாங்கத்தால் உருவாக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை. இதை ஜி என்று அழைப்போம், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% ஆகும்.
இந்தியாவின் ஏற்றுமதியிலிருந்து இறக்குமதியைக் கழித்தபின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிகர தேவைதான் கடைசி காரணி. இதை NX என்று அழைப்போம். இந்தியாவின் விஷயத்தில், இது மிகச்சிறிய காரணியாகும், மேலும் இந்தியா பொதுவாக ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்வதால், அதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறையானது.
எனவே மொத்த ஜிடிபி = சி + ஐ + ஜி + என்எக்ஸ்
தனியார் நுகர்வு - இந்திய பொருளாதாரத்தை இயக்கும் மிகப்பெரிய காரணி - 27% குறைந்துள்ளது. பணத்தைப் பொறுத்தவரை, இந்த வீழ்ச்சியை கடந்த ஆண்டின் மதிப்பீட்டோடு ஒப்பீடு செய்தால் இதே காலாண்டில் 5,31,803 கோடி ரூபாய்.
இரண்டாவது பெரிய காரணி - வணிகங்களின் முதலீடுகள் - இன்னும் கடினமாகிவிட்டன - இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்ததில் பாதி. பண அடிப்படையில், சரிவு மட்டும் ரூ .5,33,003 கோடி. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88% க்கும் அதிகமான இரண்டு பெரிய காரணிகளால், Q1 ஒரு பெரிய சரிவை சந்தித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
என்எக்ஸ் அல்லது நிகர ஏற்றுமதி தேவை சாதகமாக மாறியுள்ளது, ஏனெனில் இந்தியாவின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதியை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு ஊக்கத்தை அளிக்கிறது, பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. இது வளர்ச்சியின் கடைசி காரணியாகும். அரசாங்கம். தரவுகளின் படி அரசாங்கத்தின் தேவை 16% அதிகரித்துள்ளது, ஆனால் இது பொருளாதாரத்தின் பிற துறைகளில் (என்ஜின்கள்) ஏற்பட்ட தேவை இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு இல்லை. சி மற்றும் ஐயிடம் இருந்து தேவை 10,64,803 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தபோது, அரசாங்கத்தின் செலவு வெறும் ரூ .68,387 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது அரசாங்கத்தின் செலவினங்கள் அதிகரித்தன, ஆனால் இது மிகக் குறைவானது, இது மக்கள் மற்றும் வணிகர்களால் அனுபவிக்கப்படும் மொத்த தேவையின் 6% ஐ மட்டுமே ஈடு செய்யும். நிகர முடிவு என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க செலவினங்களின் பங்கு 11% முதல் 18% வரை உயர்ந்துள்ளது, ஆனால் உண்மை என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24% குறைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் அடிமட்ட காரணி தான் ஜி.டி.பி. ஆனால் தற்போது வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணியாக அது மாறியுள்ளது.
இதில் இருந்து மீள வழியென்ன?
வருமானங்கள் கடுமையாக வீழ்ச்சியடையும் போது, தனி நபர்கள் தங்களின் நுகர்வுகளை குறைக்கிறார்கள். தனி நபர்களின் நுகர்வு கடுமையாக வீழ்ச்சியடையும் போது, வணிகங்கள் முதலீட்டை நிறுத்துகின்றன. இவை இரண்டும் தன்னார்வ முடிவுகள் என்பதால், தற்போதைய சூழ்நிலையில் அதிக முதலீடு செய்ய வணிகங்களை கட்டாயப்படுத்த , அதிக செலவு செய்ய மக்களை கட்டாயப்படுத்த எந்த வழியும் இல்லை. இந்த சூழ்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தக்கூடிய ஒரே ஒரு காரணி அரசாங்கம் (ஜி). சாலைகள் மற்றும் பாலங்களைக் கட்டுவதன் மூலமும், சம்பளத்தை செலுத்துவதன் மூலமோ அல்லது நேரடியாக பணத்தை ஒப்படைப்பதன் மூலமோ - அரசாங்கம் அதிக செலவு செய்யும் போது மட்டுமே - குறுகிய காலத்திற்கு பொருளாதாரம் புத்துயிர் பெற முடியும். அரசாங்கம் போதுமான அளவு செலவிடவில்லை என்றால் பொருளாதாரம் மீள நீண்ட நேரம் எடுக்கும்.
அரசாங்கத்தை இந்த செலவுகள் செய்வதில் இருந்து தடுப்பது எது?
கொரோனா வைரஸ் விவகாரத்திற்கு முன்பே, அரசின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. கடன் மட்டும் வாங்கவில்லை. எவ்வளவு வாங்க வேண்டுமோ அதைக்காட்டிலும் கூடுதலாக கடன் வாங்கியுள்ளது. இதன் விளைவாக அரசிடம் தற்போது பணம் இல்லை. வளங்களை உருவாக்க புதிய வழிமுறைகளை அரசு யோசிக்க வேண்டும். மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் விளக்கப்படம் 4-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 3.5 சதவீதத்தை எவ்வாறு அரசாங்கம் உயர்த்த வேண்டும் என்பதை காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.