பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துது. இதன் மூலம், எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் அகண்ட அலைவரிசை வை-ஃபை வசதிகளை நாடு முழுவதும் உள்ள பொதுத்தரவு அலுவலகங்களின் வாயிலாக வழங்க முடியும்.
இந்தியாவில் பொது வைஃபை வலைப் பின்னல்கள் (நெட்வொர்க்) ஏன் தேவைப்படுகிறது?
பொது வைஃபை வலைப் பின்னல்கள் மூலம் நாட்டில் தடையில்லா இணைய சேவைகள் அதிகரிக்கும் என்பது மிக முக்கிய காரணம். மேலும், நாடு முழுவதும் உள்ள பொதுத்தரவு அலுவலகங்களின் வாயிலாக திட்டம் அமல்படுத்தப்படுவதால், அகண்ட அலைவரிசை இணைய வசதியின் வீச்சு அதிகமாகி, வருமானமும், வேலைவாய்ப்புகளும் பெருகி மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தொலைத்தொடர்பு பயன்பாட்டு அதிகம் கொண்ட நகர்ப்புறங்களிலும், மொபைல் இணையக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழல் உள்ளதாக தொலைத் தொடர்புத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, பொது வைஃபை பொது வைஃபை வலைப் பின்னல்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.
உலகளாவிய எடுத்துக்காட்டுகள் உள்ளதா?
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும், சில தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், பொது வைஃபை என்பது பரவலாக்கம் (Decentralization) கட்டமைப்பாக உள்ளது. இதன்மூலம், கடைகள், உணவகங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் வயர்லெஸ் இணைப்பை தாங்களே உருவாக்கி வருகின்றன. இருப்பினும், பொது ஹாட்ஸ்பாட்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
2018 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 169 மில்லியன் பொது வை-ஃபை ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. 2023 ஆம் ஆண்டில் 623 மில்லியன் வரை அதிகரிக்கலாம் என்று சிஸ்கோ நிறுவனத்தின் வருடாந்திர இணைய அறிக்கையில் (2018-2023) தெரிவிக்கப்பட்டது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
முன்னதாக, சுயசார்பு இந்தியா இயக்கத்தின்கீழ் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு 22 ஆயிரத்து 810 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்த திட்டத்திற்காக ஆயிரத்து 584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil