scorecardresearch

இந்தியாவின் UPI- சிங்கப்பூரின் PayNow இணைப்பு: இதன் அர்த்தம் என்ன, யாருக்குப் பயன்?

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிமைப்படுத்தும் வகையில் இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகிய இரு பணப் பரிவர்த்தனை தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் UPI- சிங்கப்பூரின் PayNow இணைப்பு: இதன் அர்த்தம் என்ன, யாருக்குப் பயன்?

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இருநாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிமைப்படுத்தும் வகையில் இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகிய இரு பணப் பரிவர்த்தனை தளங்கள் நேற்று (பிப்.21) இணைக்கப்பட்டன. இந்த இணைப்பின் வழியான முதல் பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் மேற்கொண்டனர்.

காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணப் பரிவர்த்தனையை தொடங்கி வைத்தனர். இதன்படி, இனி சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் மொபைல் செயலி வழியாக, மொபைல் எண் அல்லது யுபிஐ ஐடி பயன்படுத்தி இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு குறைந்த கட்டணத்தில் எளிமையான முறையில் பணம் அனுப்ப முடியும். அதேபோல் இந்தியாவில் உள்ளவர்களும் சிங்கப்பூருக்கு யுபிஐ செயலிகள் வழியாக எளிதில் பணம் அனுப்ப முடியும்.

UPI மற்றும் PayNow என்றால் என்ன?

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி ஆகும். இது விர்ச்சுவல் பேமென்ட் அட்ரஸ் (விபிஏ) மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. போன் நம்பர் அல்லது யுபிஐ ஐடி பயன்படுத்தி பணம் அனுப்பலாம். வங்கிக் கணக்கு விவரங்கள் எதுவும் பகிரத் தேவையில்லை. யுபிஐ ஆனது ஒரு நபர் டூ மற்றொரு நபர் (P2P) மற்றம் நபர் டூ வணிகர் (P2M) ஆகிய இரண்டு சேவைகளை ஆதரிக்கிறது. இதன் மூலம் பணம் அனுப்பவும் முடியும் பெறவும் முடியும்.

இந்தியாவில் யுபிஐ போல் சிங்கப்பூரில் பேநவ் செயல்படுகிறது. இதுவும் விரைவான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி ஆகும். பியர்-டு-பியர் நிதி பரிமாற்ற சேவையை செயல்படுத்துகிறது. பயனர்கள் தங்கள் மொபைல் எண், சிங்கப்பூர் தேசியப் பதிவு அடையாள அட்டை (NRIC)/வெளிநாட்டு அடையாள எண் (FIN) அல்லது VPA ஆகியவற்றைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள வங்கி அல்லது மின்-வாலட் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்கு உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது.

UPI- PayNow இணைப்பு என்றால் என்ன?

பொதுவாகவே எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் குறைவான வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்கும். மேலும் உள்நாட்டு பரிவர்த்தனைகளை விட கட்டணம் அதிகம். இந்நிலையில், UPI-PayNow இணைப்பு, குறைவான கட்டணத்தில் இருநாடுகளுக்கு இடையே பணப் பரிவர்த்தனை மற்றும் செயல்முறையை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இரு நாட்டு மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

UPI-PayNow இணைப்பு மூலம் வேகமாகவும், குறைந்த கட்டணத்திலும் பணம் அனுப்ப மற்றும் பெற முடியும். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் பயனடைவர். சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு உடனடியாக மற்றும் குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்ப முடியும். அதேபோல் இந்தியாவில் இருந்தும் அனுப்ப முடியும். 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மொத்த Remittance பணத் தரவில் சிங்கப்பூரின் பங்கு 5.7 சதவீதமாக உள்ளது என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Indias upi and singapores paynow are now integrated what it means who benefits