வெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்?

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர் சி.ராஜா மோகன் எழுதிய பத்தியில், டெல்லி மற்று பெய்ஜிங்கின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் மரபுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை குறிப்பிட்டிருந்தார்.

By: Updated: July 14, 2020, 03:56:56 PM

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர் சி.ராஜா மோகன் சமீபத்தில் எழுதிய பத்தியில், டெல்லி மற்று பெய்ஜிங்கின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் மரபுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி (சி.சி.பி) இந்திய தேசியவாதிகளை விட ஏகாதிபத்திய எதிர்ப்பு இல்லாதவர்கள் என்று அவர் உறுதியளிக்கிறார். ஆனால், இந்தியா மற்றும் சீனாவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது என்று கூறுகிறார்.

அவர் “இந்திய மேல்தட்டினர் தனிப்பட்ட அளவில் அவர்களுடைய பிரிட்டிஷ் கூட்டாளிகளுடன் முற்றிலும் சகஜமாக இருந்தனர்” என்று எழுதுகிறார். “மறுபுறம் கம்யூனிஸ சீனா பிரிட்டன் உடன் ஈடுபடுவதில் பல குறைபாடுகளுடன் தொடங்கியது. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களாக சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் ராஜந்திர செல்வாக்கை பிரிட்டனில் முறையாக மேம்படுத்தியுள்ளது” என்று அவர் கூறுகிறார்.

சமீபத்திய பிரிட்டிஷ் அறிக்கை ஒன்று, “எலைட் கேப்சர்” என்ற தலைப்பில் பெய்ஜிங் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. பிரபுக்கள் முதல் மூத்த அதிகாரமட்டத்தினர் வரை, அமைச்சர்கள் முதல் ஊடகவியலாளர்கள் வரை, வணிக முதலாளிகள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரை சீன நலன்களை மேம்படுத்துவதில் முன்மொழிவதில் பயனுள்ள முட்டாள்களாக மாறுகிறார்கள்.

பிரிட்டனில் சீனாவின் வெற்றிகரமான செல்வாக்கு நடவடிக்கைகளில் இருந்து இந்தியா என்ன கற்றுக்கொள்ள முடியும்?

“முதலாவதாக, சீனாவின் முக்கியத்துவம் ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தத்தை பிரிப்பது மற்றும் தேசிய நலனைப் பின்தொடர்வது” என்று ராஜா மோகன் எழுதுகிறார்.

“சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் அடிப்படை சித்தாந்தத்தை ஒருபோதும் மறுக்கவில்லை அல்லது ஏகாதிபத்திய சக்திகளுடனான சீனாவின் கடந்தகால மோதல்களை மறந்துவிடவில்லை… அது 1980களில் அமெரிக்காவுடன் கூட்டாளித்துவத்தை கொண்டு உலகளாவிய அமைப்பில் தனது நிலையை உயர்த்தியது. இப்போது அமெரிக்க அதிகாரத்தை சவால் செய்கிறது” என்று அவர் விளக்குகிறார்.

இரண்டாவதாக, “மேற்கு நாடுகளை ஒரு கூட்டாகக் கருதுவதற்குப் பதிலாக, சீனா தொடர்ந்து ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஆராய்ந்தது. பிரிட்டனை அமெரிக்காவிலிருந்து பிரிப்பது மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகளான ஐந்து கண்கள் கூட்டணியை (அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) பலவீனப்படுத்துவது ஆகியவை. இதில் இங்கிலாந்தில் சீனாவின் செல்வாக்கு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தன” என்று ‘எலைட் கேப்சர்’ பற்றிய அறிக்கை கூறுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்து அமெரிக்காவிலிருந்து விலகி அதன் 5ஜி எதிர்காலத்திற்காக ஹவாய்க்கு திரும்ப முடிவு செய்தது. மற்றொரு விஷயம் என்னவென்றால், “அமெரிக்காவின் அழுத்தத்துடன், பிரதமர் போரிஸ் ஜான்சன் சீனாவுடனான உறவை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினார். அவர் இந்த வாரம் ஹவாய் நாட்டிலிருந்து பிரிட்டிஷின் ஒரு பகுதி விலகலையாவது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று ராஜா மோகன் எழுதுகிறார்.

இருப்பினும், டெல்லி தனது வெளியுறவுக் கொள்கை நுண்கணக்கில் பிரிட்டனை ஒரு யுக்தி முன்னுரிமையாக எழுதக்கூடாது. “பெய்ஜிங் லண்டனை ஏறக்குறைய முறியடிக்க முடிந்தால், இந்தியாவை நோக்கிய பிரிட்டிஷ் ஸ்தாபனத்தின் அணுகுமுறையில் மாற்றத்தை ஊக்குவிக்க டெல்லிக்கு போதுமான பங்கு உள்ளது” இது மிகப்பெரிய பாடம்.

“பிரெக்ஸிட்-க்குப் பிந்தைய வெளிநாட்டு பொருளாதார மற்றும் யுக்தி கொள்கைகளின் தொகுப்பாளராக சீனா இருக்க முடியாது என்பதை பிரிட்டன் அறிந்திருப்பதால், லண்டனுடனான தனது உறவை மறுசீரமைக்க டெல்லிக்கு ஒரு பெரிய திறப்பு உள்ளது” என்று அவர் இந்தியாவுக்கான வாய்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டி முடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Indina china uk statecraft foreign affairs strategic lessons c raja mohan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X