இந்தோனேசியா இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி அல்லது எஃப்பிஐ- ஐ ஏன் தடை செய்தது?

இந்தோனேசியாவில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி என்ற கடுமையான மத அமைப்பை நேற்று முன்தினம், (புதன்கிழமை) அந்நாட்டு அரசு தடை செய்தது.

உலகின் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் வசிக்கும் நாடுகளில் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தோனேசியாவில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி என்ற கடுமையான மத அமைப்பை நேற்று முன்தினம், (புதன்கிழமை) அந்நாட்டு அரசு தடை செய்தது. இந்த குழுவின்  ஆன்மீகத் தலைவரான ரிஸிக் ஷிஹாப், கடந்த மாதம் சவூதி அரேபியாவிற்கு சென்றுவிட்டதால், இந்த  குழுவுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கு எதிராக இந்த குழுவின் சக்திகளைப் எதிர்கட்சிகள் பயன்படுத்தக்கூடும் என்பதால், இந்த குழுவுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி என்றால் என்ன?

1990 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட  இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி, இந்தோனேசிய மக்கள் மற்றும் எஃப்.பி.ஐ-ஆல் பரவலாக அறியப்பட்டது. மேலும்  இஸ்லாத்தின் கடுமையான சட்டத்தை ஆதரிக்கும் இந்த  மத அமைப்பு,  சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில், பார்கள் மற்றும் விபச்சார விடுதிகளில் புகழ்பெற்று விளங்கியது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த குழுவின் அரசியல் செல்வாக்கு உயர்ந்துள்ளது, மேலும் 2016 ஆம் ஆண்டில் இஸ்லாத்தை அவமதித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜகார்த்தாவின் முன்னாள் கிறிஸ்தவ கவர்னருக்கு எதிரான வெகுஜன போராட்டங்களில் எஃப்.பி.ஐ பெரும் பங்கு கொண்டிருந்தது.

அதன் தலைவர் யார்?

இந்தோனேசியாவில் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய நபராக இருந்து வரும் 55 வயதான கிளெரிக் ரிஸிக் ஷிஹாப் இந்த அமைப்புக்கு தலைவராக உள்ளார். மேலும் கடந்த 2008-ம் ஆண்டு வன்முறையைத் தூண்டியதற்காக  சிறையில் அடைக்கப்பட்ட அவர், 2017 ல் நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, ஆபாசக் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட இவர், அரசு கொள்கைகளையும் அவமதித்துள்ளார். பின்னர் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் மீதான ஒரு ஆபாச வழக்கை மீண்டும் விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிகமான பேரணிகளில் ரிஸிக் பங்கு அரசியலில் இஸ்லாத்தின் எழுச்சி குறித்து கவலையை எழுப்பியது. இந்நிலையில், கடந்த மாதம், மீண்டும் இந்தோனேசியாவுக்கு திரும்பிய ரிஸீக்கை வரவேற்க  ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தோனேசிய அரசியலில் இஸ்லாம் எவ்வளவு பெரிய சக்தி?

இந்தோனேசியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90% முஸ்லிம்களுடன், இஸ்லாம் எப்போதும் அந்நாட்டு அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது.  மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பேரணிகளில், எஃப்.பி.ஐ மற்றும் பிற இஸ்லாமிய குழுக்கள் தலைமையிலான அமைப்புகள் மதம் பெருகிய முறையிலான அரசியலில் முக்கிய பங்காற்றியது. மேலும் இஸ்லாமிய வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியாக, கடந்த 2019-ம் ஆண்டு, இந்தோனேசியாவின்  ஜனாதிபதி ஜோகோவி, மூத்த மதகுரு ம’ரூஃப் அமீனை தனது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்.

தொடர்ந்து ரிஸீக் வெளிநாட்டில் இருந்தபோது, எஃப்.பி.ஐ போன்ற கடுமையான இஸ்லாமிய அமைப்புகள் அமைதியாக இருந்தன. ஆனால், ரிஸிக் நாடு திரும்பியதும், பல முக்கிய எதிர்க்கட்சிகளைச் சந்தித்து, “தார்மீகப் புரட்சி” என்றபெயரில் புதிய அத்தியாயத்தை தொடங்கினார். இதனால் வரும் 2024 இல் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஜனாதிபதி ஜோகோவிக்கு ஒரு சவாலாக இருந்தது.

அடுத்து என்ன நடக்கும்?

எஃப்.பி.ஐ தடை செய்வதற்கான முடிவு சட்டப்பூர்வமாக இருந்தாலும், இந்த நடவடிக்கை பின்வாங்கக்கூடும் என்றும், புதிய மறு செய்கைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்த நிலையில், தலைமை பாதுகாப்பு மந்திரி இந்த அமைப்புக்கான தடையை  அறிவித்த சில மணி ரங்களில், எஃப்.பி.ஐ மூத்த உறுப்பினர் நாவல் பாமுக்மின், “துரோகிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் எஃப்.பி.ஐ தடை செய்யப்பட்டாலும், புதிதாக சீர்திருத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்த முடிவு அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்படுவதாக இருந்தாலும், ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினரின் கருத்துக்களை நிவர்த்தி செய்வதற்கு சிறிதும் உதவி செய்யாது என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indonesia banned islamic defender why explained

Next Story
வூஹான் கள நிலவரத்தை வெளியிட்ட செய்தியாளருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல்; யார் இந்த ஜாங்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com