scorecardresearch

சிந்து சமவெளி நாகரிகத்துடன் பண்டைய திராவிட மொழி தொடர்பு

ஸ்பிரிங்கர் நேச்சர் குழுமத்தின் ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை ஹரப்பா மக்களின் மொழியியல் கலாச்சாரம் குறித்த சில சுவாரஸ்யமான புதிய நுண்ணிய பார்வைகளை வழங்கியுள்ளது.

சிந்து சமவெளி நாகரிகத்துடன் பண்டைய திராவிட மொழி தொடர்பு

சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்தவர்கள் எந்த மொழியில் தொடர்பு கொண்டனர்? 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெங்கலம் கால நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து வரலாறு மற்றும் தொல்லியல் அறிஞர்கள் இந்த கேள்வியைக் கேட்டு வருகின்றனர். சிந்து சமவெளி எழுத்து இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை.

ஸ்பிரிங்கர் நேச்சர் குருப் ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை ஹரப்பா நாகரிக மக்களின் மொழியியல் கலாச்சாரம் குறித்த சில சுவாரஸ்யமான புதிய பார்வையை வழங்கியுள்ளது. சிந்து சமவெளி மக்களுக்கும் அவர்கள் தொடர்பு கொண்ட கலாச்சாரங்களுக்கும் இடையில் பகிரப்பட்ட சில வார்த்தைகளிலிருந்து கிடைத்த சான்றுகளைக்கொண்டு இந்த ஆய்வு கட்டுரை அவர்களின் மொழி வேர் அனைத்து நவீன திராவிட மொழிகளின் மூதாதையர் மொழியான தொல்-திராவிட மொழி என கண்டறிந்துள்ளது. தாங்கள் குடிபெயர்ந்த இடத்திலிருந்து சிந்து சமவெளி பகுதி உட்பட வட இந்தியாவில் தொல் திராவிட மொழிகளைப் பேசியவர்கள் அதிக வரலாற்று இருப்பைக் கொண்டிருப்பதாக இந்த கட்டுரை பரிந்துரைக்கிறது.

இந்த ஆய்வுக் கட்டுரையின் கண்டுபிடிப்புகள் என்ன?

‘சிந்து சமவெளி நாகரிகத்தில் தொல் திராவிட மொழிகள் பேசியவர்கள்: கிடைத்த பொருட்களை ஆய்வு செய்யப்பட்டதில் திராவிட மொழியின் பல் என்ற சொல் ஆழமான மொழியியல் தொடர்பை வெளிப்படுத்தி மரபியலை ஆதரிக்கிறது’ என்ற தலைப்பில் மென்பொருள் உருவாக்குநரும் சுயாதீன ஆராய்ச்சியாளருமான பஹதா அஞ்சுமாலி முகோபாத்யாய எழுதியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் மெசபடோமியா ஆகியவற்றுக்கு இடையே இருந்த வர்த்தக உறவுகளை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. அதன்படி, முகோபாத்யாய் சிந்து சமவெளியின் வேர்ச்சொற்களைக் கொண்ட வெளிநாட்டுச் சொற்களைக் கண்டுபிடிக்க கிழக்கத்திய நூல்களைத் தேடினார். இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுவது போல, ஒரு பொருள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாதபோது, ​​நாம் அதை அதன் வெளிநாட்டுப் பெயரால் அழைக்கிறோம்.

இதன் விளைவாக, அக்காடியன் (பண்டைய மெசபடோமியாவில் பேசப்படும் மொழி) யானை- ‘pīru’/‘pīri’ மற்றும் அதனுடைய வேறுபாடுகள், அத்துடன் தந்தத்திற்கான பழைய பாரசீக வார்த்தையான ‘பெரஸ்’ சிந்து சமவெளியில் வேர்களைக் கொண்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. “என்னுடைய ஆய்வு வாதம் தொல்பொருள் தரவுகள் ஆசிய யானைகள் மற்றும் சிந்து சமவெளி நாகரிக வர்த்தகர்களுடன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு நடுப்பகுதியில் இருந்து கி.மு இரண்டாம் நூற்றண்ட்டு வரை கிழக்கத்திய தந்தப் பொருள்களை வலுவாக தொடர்புபடுத்துகிறது என்பதாகும். பண்டைய எகிப்தில் பயன்படுத்தப்பட்ட தந்தத்துகான வார்த்தைகள் (எ.கா., ‘ab’, ‘abu’, ”b’, ‘beḥu’, ‘netcheḥ-t’) என்பதால், pīru வார்த்தைக்கு ஒலி தொடர்பு இல்லை. , இந்த pīru அடிப்படையிலான வார்த்தைகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் தோன்றியிருக்கலாம்” என்று முகோபாத்யாய் அந்த ஆய்வுக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

மேலும், பல திராவிட மொழிகளில், ‘pīlu’, ‘pella’, ‘palla’, ‘pallava’, ‘piḷḷuvam’, ‘pīluru’ (பிலு, பெல்லா, பல்லவா, பில்லுவம், பிளிரு) ஆகிய சொற்கள் யானையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்று இந்த ஆய்வுக் கட்டுரை பரிந்துரைக்கிறது.

முகோபாத்யாய இந்திய மொழிகளில் ‘l’ மற்றும் அக்காடியன் மற்றும் பழைய பாரசீக மொழியில் ‘r’ ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். “பண்டைய பாரசீக மக்கள் மெசபடோமியா நாகரிகம் மற்றும் சிந்து சமவெளி நாகரிக வர்த்தகர்களுக்கு இடையில் இடைத்தரகர்களாக செயல்பட்டதால், அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் தந்தத்தை ஏற்றுமதி செய்தனர். அவர்கள் மெசபடோமியாவிற்கு இந்திய யானையை குறிப்பிடும் வார்த்தையான (‘‘piru’ ‘pilu’) வார்த்தைகளை விவாதித்தனர்.

இந்த சொற்களின் சொற்பிறப்பியலை மேலும் கண்டறிந்தபோது, ​​திராவிட மொழிகளில் பல்லுக்கான மூலச் சொற்களான ‘pal’, ‘pella’, ‘pallu’, ‘palu’, (‘பல்’, ‘பெல்லா’, ‘பல்லு’, ‘பலு’) ஆகியவற்றுடன் தொடர்புடையாதாக இருக்கிறது என்று இந்த ஆய்வுக் கட்டுரை விளக்கியுள்ளது. அதாவது, யானை அல்லது யானை தந்தம், அதாவது, ‘pīlu’, ‘pillakā’, ‘palla’, ‘pella’என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் யானையின் மற்றொரு பெயர் ‘தந்தின்’ (Dantin) அல்லது பல்லை வெட்டுதல் இந்தோ-ஆரியன் மற்றும் இந்தோ-ஈரானிய வார்த்தையான பல்லுக்கு, ‘தந்தம்’ ஆகியவற்றில் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “தொல் திராவிட மொழியின் பல் என்ற வார்த்தைகும் திராவிட மொழியின் ‘பல்’/’பில்’ என்ற வார்த்தைக்கும் இடையேலான உறவு என்பது யானையை அடிப்படையாகக் கொண்ட வார்த்தைகள். இது ஆழமான சொற்பிறப்பியலாக இருக்க வேண்டும், இது தற்செயலானது அல்ல.” என்று கூறுகிறார்.

தொல்-திராவிட மொழியில் பல்லுக்குப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுடன் ‘பிலு’வை இணைக்கும் மற்றொரு ஆதாரத்தை இந்த ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளது. பல இந்திய வார்த்தைகள் ‘சால்வடோரா பெர்சிகா’ (Salvadora persica) (மேற்கத்திய உலகில் பிரஷ்ஷு மரம் என்றும் அரபி பேசும் நாடுகளில் ‘மிஸ்வாக்’ என்றும் அதன் கிளைகள் இயற்கையாக பல் துலக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன) ‘பிலு’ என்றும் குறிப்பிடுகின்றன. யானை தொடர்புடைய வார்த்தையான பிலுவைப் போலவே, மரத்திற்கு பயன்படுத்தப்படும் பெயர் பல்லுக்கான வேர் தொல்-திராவிட வார்த்தையில் வேரூன்றியுள்ளது என்று இது அறிவுறுத்துகிறது.

முகோபாத்யாய மேலும் எழுதுகையில், “இந்திய காவியமான மகாபாரதம் (கங்குலி, 1883-96) ‘பிளு’ (pīlu) மரத்தை சிந்து நதிப் பகுதிகளுடன் அடிக்கடி தொடர்புபடுத்துகிறது. இது பழங்காலத்திலிருந்தே சிந்து சமவெளியில் ‘பிளு’ தாவரம் இருந்தது என்பதை நிரூபிக்கிறது.

பல சான்றுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, சிந்து சமவெளி நாகரிகத்தின் கணிசமான மக்கள்தொகையின் அடிப்படை சொற்களஞ்சியங்கள் தொல் திராவிட மொழியாக இருந்திருக்க வேண்டும் அல்லது சிந்து சமவெளிப் பகுதியில் மூதாதையர் திராவிட மொழிகள் பேசப்பட்டிருக்க வேண்டும் என்று அந்த கட்டுரை முடிவு செய்கிறது.

இந்த ஆய்வுக் கட்டுரையின் கண்டுபிடிப்புகள் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய நமது புரிதலை எவ்வாறு வளர்க்கிறது?

கடந்த காலத்தில் ஒரு சில அறிஞர்கள், குறிப்பாக ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் அறிஞர் அஸ்கோ பர்போலாவின் வாதங்களை இந்த கட்டுரை உறுதிப்படுத்துகிறது. பர்போலா 2010ல் வெளியிட்ட அவரது படைப்பில் சிந்து சமவெளி எழுத்துக்களில் பயன்படுத்தப்படும் சின்னங்களை வரைபடமாக்கி நவீன திராவிட மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற்களுடன் இணைத்தார். இதன் அடிப்படையில் அவர் சிந்து எழுத்துகளின் அடிப்படை மொழி தொல்-திராவிட மொழி என்று முடிவு செய்தார்.

முகோபாத்யாயாவின் இந்த ஆய்வு, 2019 ஆம் ஆண்டில் ‘அறிவியல்’ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய மரபணு ஆய்வுக்குப் பிறகு வந்துள்ளது. இது வடமேற்கு இந்தியாவின் பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவிற்கு தொல் திராவிட மொழிகள் பரவியது என்ற ஒரு கருத்தை உருவாக்கியது.

‘தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் மனித மக்கள் தொகை உருவாக்கம்’ என்ற தலைப்பிலான இந்த கட்டுரை, சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்த திராவிட மொழி பேசும் குழுக்கள் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி நகர்ந்தன என்று பரிந்துரைக்கிறது.

“தொல்பொருள் மற்றும் மொழியியலுடன் மரபணு தரவை இணைக்கும்போது, தொல்-திராவிடமானது சிந்து சமவெளி நாகரிக மக்களால் தென்னிந்திய மூதாதையர்களின் சிந்துவெளி மூதாதையர் கிளை கூறுடன் பரவியது. திராவிட மொழிகளின் சிந்து சமவெளி நாகரிக தோற்றத்திற்கான மரபணு அல்லாத ஆதரவு இந்த மொழிகளின் இன்றைய புவியியல் விநியோகத்தை உள்ளடக்கியுள்ளது (தென்னிந்தியா மற்றும் தென்மேற்கு பாகிஸ்தான்) என்று பரிந்துரைக்கிறது. மேலும் பண்டைய சிந்து சமவெளி முத்திரைகளில் உள்ள சில சின்னங்கள் திராவிட சொற்களையோ பெயர்களையோ குறிக்கும் என்று பரிந்துரைக்கிறது” இந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

“மொழியியல், மரபியல் மற்றும் தொல்லியல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்போது கிடைத்திருக்கும் ஒட்டுமொத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியாவில் திராவிட மொழிகள் பரவுவதற்கான பகுத்தறிவுப் பூர்வமான விளக்கம் வடமேற்கு இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு மக்கள் நகர்ந்தனர் என்று ஒருவர் கூறலாம்” என்று ‘தொடக்க கால இந்தியர்கள்’ (2018) என்ற புத்தகத்தை எழுதிய டோனி ஜோசப் கூறினார்.
ஜோசப் கூறுகையில், இந்த நகர்வும் கிமு 1900ல் ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நடந்தது. ஆனால், இந்த நகர்வு ஏன் சற்று முன்னதாகவே தொடங்கியிருக்கலாம் என்றும் அவர் வாதிட்டார்.

முகோபாத்யாய சிந்து சமவெளிப் பகுதியில் பேசப்பட்ட பல மொழிகளில் தொல் திராவிட மொழியும் ஒன்று என்பதை வலியுறுத்தினார். திராவிட குழு மொழிகள், முக்கியமாக தென்னிந்தியாவில் பேசப்பட்டாலும் “இந்தியாவின் வடமேற்கு (பிராகுயி), வடகிழக்கு (குருக்ஸ், மால்டோ) மற்றும் மத்திய பகுதிகள், (எ.கா., கோலமி, நாயகி, பர்ஜி, ஒல்லாரி,கடபா போன்றவற்றிலும் சிதறிக்கிடக்கின்றன.) திராவிட மொழி பேசுபவர்கள் சிந்து சமவெளி நாகரிக பிராந்தியங்கள் உட்பட வட இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் முன்னிலையில் இருந்ததைக் குறிக்கிறது.

ஹரப்பா நாகரிகத்தில் பேசப்பட்ட திராவிட மொழிகள் பற்றிய சமீபத்திய ஆய்வறிக்கையின் அறிக்கை, சமீபத்திய மரபணு ஆய்வுக்கு இணங்குகிறது என்று ஜோசப் விளக்கினார். இணங்குகிறது என்று ஜோசப் விளக்கினார். சிந்து நதிப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட பழங்கால டிஎன்ஏ ஹரப்பா குடியேறியவர்களில் சிலர் Y-குரோமோசோம் மாறுபட்ட மரபணு குழுவின் எச் 1 ஏ 1 டி 2-ஐ எடுத்துச் சென்றனர். இது இன்று தென்னிந்தியாவில் முதன்மையாகக் காணப்படுகிறது என்று விளக்கினார். இந்த கண்டுபிடிப்பின் சாத்தியமான உட்குறிப்பு என்னவென்றால், வடமேற்கு இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு மக்கள் நடமாட்டம் இருந்தது. ஜோசப் மேலும் கூறுகையில், புதிய ஆய்வு இந்திய-ஐரோப்பிய மொழிகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், ஹரப்பா நாகரிகத்தின் போது ஏறக்குறைய 2000 பொது ஆண்டு மற்றும் 1500 பொது ஆண்டு இடையே இந்தியா-ஐரோப்பிய மொழி பேசுபவர்களின் இடம்பெயர்வு நடந்தது என்பது செல்வாக்கு செலுத்தும் கல்வி புரிதலுடன் முரண்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆரிய-சமஸ்கிருத-வேத கலாச்சாரம் ஹரப்பா நாகரிகத்திற்குப் பிறகு வந்தது, அது இந்திய நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க மற்றும் முக்கிய அங்கமாக இருந்தாலும், அது அதன் ஆரம்ப ஆதாரம் அல்ல.” என்று கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Indus valley civilisation scripts ancient dravidian language link in new research