உலக நாடுகளில் கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு ஒமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது. அதுதொடர்பான துல்லியமான தகவலை அறிய பல இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒமிக்ரான் பாதிப்பால் நமது உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு டெல்டா மீண்டும் தாக்காத வகையில் பாதுகாப்பு அளிப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. அதே சமயம்,30 பேர் என சிறிய மாதிரி அளவை கொண்டுள்ளது.
டெல்டாவிற்கு எதிராக நான்கு மடங்கு பாதுகாப்பு
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, ஒமிக்ரான் நோய்தொற்றால் பாதிக்கப்படைந்து இரண்டு வாரங்கள் ஆன பிறகு அந்த நபர்களின் ஆன்டிபாடிகளை சேகரித்தோம். அப்போது, ஒமிக்ரான் மற்றும் டெல்டா இரண்டிலிம் உடலில் ஏற்படும் பாதுகாப்பு அளவை மதிப்பாய்வு செய்தோம்.
அதில், ஆன்டிபாடிகள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒமிக்ரான் மாறுபாட்டை நடுநிலையாக்கும் திறனில் 14 மடங்கு அதிகரிப்பைக் காட்டினாலும், டெல்டாவிற்கு எதிராக நான்கு மடங்கு பாதுகாப்பு வழங்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, டெல்டாவை விட ஒமிக்ரான் மிகவும் பரவலான மாறுபாடாக மாற்றலாம். ஆனால், அதே சமயம், ஒமிக்ரான் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவது, ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்றனர்.
அமெரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறை
அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அறிகுறியில்லாத நபர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைத்திட பரிந்துரைத்துள்ளது. அறிகுறியற்ற நபர்கள், 10 நாள்களுக்கு பதிலாக ஐந்து நாள்கள் தனிமையில் இருந்தால் போதுமானது என தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் காலம் நோய் பரவலை தடுத்தாலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை குறைக்க வழிகாட்டுதல்கள் மாற்றப்பட்டுள்ளன.
பிரான்ஸ் வழிகாட்டு நெறிமுறைகள்
ஐரோப்பாவில், புத்தாண்டில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் சமீபத்திய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. ம் பொதுக் கூட்டங்களில் உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 2,000 பேரும், வெளியே நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 3 முதல், Work From Home கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் காரணமாக, பிரான்ஸில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுதவிர, ஜெர்மனி, போர்ச்சுகல், இத்தாலி ஆகிய நாடுகளிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil